-அ.துரைசாமிமாணவர்களின் மதிப்பெண்ணைத் திருத்தி அவர்களின் கல்வியை மேம்பட வைப்பதுதான் ஆசிரியர்களின் பணி. அதையே உல்டாவாக்கி ஆசிரியர்களின் திறனை மாணவர்கள் மூலம் மதிப்பிட வைத்ததன் விளைவு, ஆர்ப்பாட்டம், போராட்டம் என அதகளப்படுத்தியுள்ளனர், அரசுப்பள்ளி ஆசிரியர்கள்..தமிழகம் முழுவதும் உள்ள வட்டார கல்வி வளர்ச்சி அலுவலகங்களின் முன்பு செப்டம்பர் 11ம் தேதியன்று போராட்டத்தில் குதித்தனர், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள். சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த இந்தப் ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தின் பின்னணி குறித்து உளவுத்துறையும் அரசுக்கு நோட் போட்டுள்ளது.``ஏன் இப்படியொரு போராட்டம்?" என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் மயிலிடம் பேசினோம். “எங்களுக்கு இரண்டே கோரிக்கைகள்தான். ஒன்று, `எண்ணும் எழுத்தும்' திட்டத்தை கைவிட வேண்டும். அடுத்து, ஆசிரியர்களை மாணவர்களைக் கொண்டு மதிப்பீடு செய்யும் விபரீத திட்டத்தைக் கைவிட வேண்டும். அவ்வளவுதான்" என்றவர், பின்னணி காரணங்களை விவரித்தார்..``கொரோனா காலத்தில் மாணவ, மாணவிகளால் பள்ளிக்கு வரமுடியவில்லை. இதனால் பாடங்களும் நடத்தப்படவில்லை. இதனால் பள்ளி இடைநிற்றல் அதிகரித்ததால், `எண்ணும் எழுத்தும்' திட்டம் கொண்டுவரப்பட்டது. இப்போது அது தேவையில்லை. முதலில் 1, 2, 3ம் வகுப்புகளில் மட்டும் அறிமுகமான இந்தத் திட்டம், இப்போது 4, 5ம் வகுப்புக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதை சிறப்புத் திட்டம் என அரசு வர்ணிக்கிறது. இதன்படி, ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு வைக்கப்படுகிறது.அதற்காக, ஒவ்வொரு ஆசிரியரும் செல்போன் வைத்திருக்க வேண்டும். ஒருகாலத்தில் பள்ளிக்கு ஆசிரியர்கள் செல்போன் கொண்டுவந்தால் நடவடிக்கை பாயும் என்றது, கல்வித்துறை. இப்போது, `செல்போன் கொண்டுவராவிட்டால் நடவடிக்கை' என்கிறது. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ, மாணவியரின் வருகைப் பதிவேடு ‘எமிஸ்’ செயலியில் பதிவேற்றப்படுகிறது..ஒரு தொடக்கப்பள்ளியின் ஆசிரியர் பள்ளிக்கு வந்தவுடன் முதலில் எமிஸில் வருகைப்பதிவு போடவேண்டும். அதற்கே ஒரு மணிநேரம் ஆகிவிடும். பின்னர், ஆன்லைன் டெஸ்ட் எழுத வைக்கவேண்டும். இதற்கே நேரம் சரியாக இருக்கிறது. இதனால், பாடம் சொல்லித் தர முடிவதில்லை. எனவேதான், இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்கிறோம். மேலும், பழைய முறைப்படி புத்தகங்களை வைத்து சொல்லிக்கொடுக்கும் முறையை கொண்டுவர வேண்டும்.அடுத்து, ஆசிரியர்களை மதிப்பீடு செய்ய மாணவர்களை நியமனம் செய்துள்ளனர். எப்படியென்றால், பி.எட் மற்றும் ஆசிரியர் பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் மூலம் பள்ளி மாணவர்களிடம் கேள்வி கேட்கின்றனர். அதில். ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் எப்படியிருக்கிறது என்பதை மதிப்பீடு செய்து அறிக்கை கொடுக்கவேண்டும். தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இருபது முதல் முப்பது ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்கள். அவர்களை மதிப்பீடு செய்ய ஆசிரியர் பயிற்சி மாணவர்களை நியமிப்பது சரியா? பிளஸ் டூ முடித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி மையத்தில் சேர்ந்திருக்கும் மாணவருக்கு ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை எப்படித் தெரிந்து கொள்ள முடியும்?.இந்தக் கோபத்தில்தான், ராமநாதபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மதிப்பீடு செய்யவந்த மாணவர்களை பள்ளிக்குள்விடாமல் ஆசிரியர்கள் விரட்டியுள்ளனர். இந்தத் திட்டத்தைக் கண்டித்து தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர்களும் டிக்டோ ஜேக் அமைப்பும் போராட்டத்தில் குதித்தன. இதையடுத்து, எங்களிடம் பேசிய தொடக்கப்பள்ளி இயக்குநர் கண்ணப்பன், ‘ஆசிரியர்களை மாணவர்கள் ஆய்வு செய்வது ஒரு வாய்மொழி உத்தரவுதான். அதை திருத்திக் கொள்ளலாம்’ என்றார்.உடனே நாங்கள், ‘முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைக் கொண்டு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை மதிப்பீடு செய்யலாமே?’ என்றோம். இதை இயக்குநரும் ஏற்றுக் கொண்டார். ஆனால், என்ன செய்தார் தெரியுமா? எட்டு மாணவர்களைக் கொண்ட மதிப்பீட்டுக் குழுவுக்குத் தலைவராக முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் ஒருவரை நியமித்திருக்கிறார். இந்தக் குழுவை வழிநடத்துவது மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்..அவர்கள் ஒவ்வொரு ஒன்றியத்திலும் குறிப்பிட்ட பள்ளிகளைத் தேர்வு செய்து ஆய்வு செய்ய வருகிறார்கள். அரசின் இந்தத் திட்டத்தால் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அதிகாரிகள்தான் இப்படியொரு விபரீத திட்டத்தைக் கொண்டுவருகிறார்கள் என்றால், ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் சிந்திக்க வேண்டாமா?” என்றார் கோபமாய்.தமிழக தொடக்கப்பள்ளி இயக்குநர் கண்ணப்பனிடம் கேட்டபோது, “இந்தப் பிரச்னையை பேசி தீர்த்துவிட்டோம். ஏதாவது சந்தேகம் இருந்தால் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரைத்தான் கேட்க வேண்டும்” என்று மட்டும் பதில் அளித்தார்.கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் லதாவை தொடர்புகொண்டோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. தொடர்ந்து, குறுந்தகவல், வாட்ஸ்ஆப்பில் தகவல் அனுப்பினோம். அதற்கும் பதில் வரவில்லை.`ஆசிரியர்களைவிட அரசியல் கட்சிகளே பரவாயில்லை' என்ற உண்மையை அறியாதவர்களா, அதிகாரிகள்?