வெள்ளித்திரையில் நாம் கண்டு ரசிக்கும் காதல், மோதல், க்ரைம், காட்சிகளைவிட திரைமறைவுக்குப் பின்னால் நடக்கும் காட்சிகள் அனைத்தும் பகீர் ரகங்கள். அதிலும், `வீக் எண்ட் பார்ட்டி' என்ற பெயரில் விதம்விதமான போதை வஸ்துகளோடு நடக்கும் கேளிக்கை விருந்துகளையும் அதையொட்டிய `சகல' சந்தோஷங்களையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் மோப்பம் பிடித்திருப்பதுதான், சினிமா காட்சிகளையே விஞ்சும் டெரர் ட்விஸ்ட். மூன்று படகுகளில் சிக்கிய சீக்ரெட்! சினிமாவில் தொழில்நுட்பரீதியாக மட்டுமல்லாமல், பாலிவுட்டுக்கு இணையாக கேளிக்கை விஷயங்களிலும் கோலிவுட் முந்திச் சென்றுகொண்டிருக்கிறது. மும்பையில் பார்ட்டி கலாசாரத்தோடு அண்டர்கிரவுண்ட் மாஃபியாக்கள் எப்படி இரண்டற கலந்திருக்கிறார்களோ, அதற்கு சற்றும் குறைவில்லாமல் தமிழ் சினிமா புள்ளிகளுடன் அரசியல்வாதிகள் இணைந்துள்ளனர். முன்பெல்லாம் தமிழ் சினிமாக்களை எடுக்கும் தயாரிப்பாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால், இன்று வெளிநாட்டுக் கம்பெனிகளின் வருகை, அரசியல் பிரமுகர்களின் பணம் என தமிழ் சினிமாவில் முதலீடுகள் அதிகரித்துவிட்டன. அந்தவகையில், கோலிவுட்டுக்கு முதலீடாக வரும் பணம் குறித்த பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, தமிழ் சினிமாவில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் முதலீடு செய்துள்ளதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். ``என்ன நடக்கிறது?" என என்.ஐ.ஏ.அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். “வெளிநாடுகளில் இருந்து கடல்வழியாக போதைப்பொருள்கள் இந்தியாவுக்குள் கடத்தப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து, 2021ம் ஆண்டு கடல் மற்றும் வான்வழியே கடலோர காவல்படையுடன் இணைந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தினோம். அதே ஆண்டு ஏப்ரல் மாதம் லட்சத்தீவு அருகே மினிகோய் தீவுக்கும் திருவனந்தபுரம் அருகே விழிஞ்சம் பகுதிக்கும் இடையே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தோம். அப்போது சந்தேகத்துக்கிடமான மூன்று படகுகளை கடலோர காவல்படையினர் மடக்கிப் பிடித்தனர். ஏ.கே.47- 300 கிலோ ஹெராயின்! அந்தப் படகுகளில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் 301 பாக்கெட்டுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ ஹெராயின், ஐந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், 1,000 தோட்டாக்கள், வெடிபொருட்கள் ஆகியவற்றைக் கைப்பற்றினோம். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களை ஈரான் நாட்டின் சாப்ஹர் துறைமுகத்தில் இருந்து கடத்தி வரப்பட்டது எனத் தெரியவந்தது. இந்தக் கடத்தல் தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த எல்.இ.நந்தனா, எச்.கே.ஜி.பி.தாஸ் பிரிய, ஏ.ஹெச்.எஸ்.குணசேகர, எஸ்.ஏ.சேனாரத், டி.ரணசிங்க, டி நிசங்க உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில், ஆயுதங்கள் அனைத்தும் புலிகள் இயக்கத்துக்காக கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது. புலிகள் அமைப்பை மீண்டும் பலப்படுத்தும் நோக்கத்தில் பாகிஸ்தானில் இருந்து ஆயுதம் உள்ளிட்ட பொருட்கள் ஈரான் வழியாக கேரளாவுக்கு கடத்திவரப்பட்டதும் தெரியவந்தது. பின்னணியில் யார்? கடல் வழியே நடந்த இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக, திருச்சி அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டிருந்த புலிகளின் தீவிர ஆதரவாளர்களான குணசேகரன், புஷ்பராஜா, முகமது அஸ்மின் ஆகிய மூன்று பேர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். இவர்கள் மீது ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்கு நிலுவையில் இருந்ததால் வழக்கு விசாரணை என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக ஆயுதக் கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் யார்..யார்? என்பது பற்றி விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் திரட்டினர். இதில், சற்குணம் என்கிற சபேசனை கைது செய்தோம். மேலும், இலங்கைக்கு ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை கடத்தியதாக சேலையூரில் வசித்துவந்த ஆதிலிங்கம் என்பவரை கைது செய்தோம்" எனக் கூறி நிறுத்தியவர், அடுத்து சொன்னவை அனைத்தும் பகீர் ரகம். வரலட்சுமிக்கு சம்மன்? ``இந்த ஆதிலிங்கம் போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் மூலமாக வரும் பணத்தை கிரிப்டோ கரன்சியிலும் சினிமாவிலும் அரசியலிலும் முதலீடு செய்திருக்கிறார். தமிழ் சினிமாக்களில் பிரமாண்டமாக போடப்படும் செட்டுகளுக்காக பைனான்ஸ் செய்து வந்துள்ளார். இந்த ஆதிலிங்கம், நடிகை வரலட்சுமிக்கு மேனேஜராக இருந்துள்ளார் என்பதால், அவரை விசாரிக்க அழைப்புவிடுத்தோம். ஆனால், ஆந்திராவில் படப்பிடிப்பில் இருப்பதால், சென்னை வரும்போது ஆஜராவதாக வரலட்சுமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வரலட்சுமியின் தாயார் சாயாவிடம் விசாரணையை நடத்தினோம்” என்றார். பாலிவுட்டை மிஞ்சிய கோலிவுட் ஆதிலிங்கத்தின் தொடர்புகளை மோப்பம் பிடித்த என்.ஐ.ஏ, கோலிவுட்டில் நடக்கும் சமாச்சாரங்களையும் தோண்டித் துருவத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, முன்பெல்லாம் பாலிவுட்டில் இருந்துதான் சகல விஷயங்களும் இறக்குமதி ஆகும். இப்போது பாலிவுட்டுக்கே ஏற்றுமதி செய்யும் அளவுக்கு தமிழ் சினிமா இன்டஸ்ட்ரி முன்னேறிவிட்டதாம். ``என்.ஐ.ஏ விசாரிக்கும் அளவுக்கு அப்படியென்ன நடக்கிறது?'' என திரையுலக பிரபலம் ஒருவரிடம் கேட்டோம். “மார்க்கெட்டை இழந்த ஹீரோயின்கள் சிலர், சினிமா படப்பிடிப்பு இல்லாத காரணத்தால் பார்ட்டிகளை முன்னெடுத்து நடத்தி வருகிறார்கள்..வீக் எண்ட் பார்ட்டி - விதவிதமான ப்யூட்டி! ஐ.டி ஊழியர்களின் பார்ட்டியைவிடவும் கோலிவுட்டில் நடக்கும் வீக் எண்ட் பார்ட்டி சற்று வித்தியாசமானது. வார இறுதிநாளான சனிக்கிழமை இரவில் நடக்கும் இந்த பார்ட்டிக்கு சினிமா நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், ஃபைனான்சியர்கள் ஆகியோர் கலந்து கொள்வது வழக்கம். இந்த பார்ட்டிகளில் சரக்குகளைத் தாண்டி போதை வஸ்துகளும் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதை வஸ்துகளை சர்வசாதாரணமாக இந்த பார்ட்டிகளில் பார்க்கலாம். கடந்தகாலங்களில் டாப் நடிகைகளாக கொடி கட்டிப்பறந்து தற்போது சீரியல்கள் மூலம் மக்களை கண்ணீர்விட வைக்கும் இரண்டு நடிகைகள் மற்றும் மார்க்கெட் இழக்காத மூன்றெழுத்து நடிகையும்தான் போதை சமாச்சாரங்களுக்கு சப்ளை டீலர்களாக இருக்கிறார்கள் என்பது இண்டஸ்ட்ரியே அறிந்த உண்மை. ஈ.சி.ஆர். பங்களா... அழகிகள் ஆல்பம்! வீக் எண்ட் பார்ட்டிக்காக சென்னையை அடுத்த ஈ.சி.ஆர் முதல் பாண்டிச்சேரி வரையில் உள்ள தனியார் பங்களாக்கள் முழுவதுமாக புக் செய்யப்படுகின்றன. நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தினால் வெளியுலகுக்கு தெரிந்துவிடும் என்பதால்தான் பங்களாக்களை வாடகைக்கு எடுக்கிறார்கள். இங்கு பார்ட்டி முடிந்த உடன், தனக்கு பிடித்த நடிகைகளை திரை பிரபலங்கள் அறைகளுக்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள். நடிகைகள் மட்டுமில்லாமல், மாடல் அழகிகளையும்கூட இந்த பார்ட்டிகளில் கலந்துகொள்ள வைத்து, அதில் பிடித்த மாடல் அழகிகளை தேர்வு செய்து அழைத்துச் செல்வார்கள். இதுபோன்ற பார்ட்டிகள் நடைபெறும் இடங்களில் அழகிகளின் புகைப்படங்களோடு சில புரோக்கர்கள் அங்கு இங்கும் திரிந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் காட்டும் மாடல் அழகிகளை திரை பிரபலங்கள் தேர்வு செய்வதையும் கண்கூடாக பார்க்கலாம். விமானத்தில் பறந்த மாடல் அழகிகள்! வெளிநாட்டை சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்று சமீபகாலமாக தமிழ் சினிமா படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் தயாரித்த படம் ஒன்றின் ஆடியோ வெளியிட்டு விழா சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. அந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் பிரபலங்களுக்கு இரவு விருந்தை நடத்தவும் முடிவு செய்துள்ளனர். இதற்காக விமானத்தின் அனைத்து டிக்கெட்டுகளையும் புக் செய்து மாடல் அழகிகளை மொத்தமாக அழைத்துச் சென்றுள்ளனர். இதுபோன்ற விருந்துகளில் பவுன்சர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். இந்த பவுன்சர்களுக்கு இரண்டு மணிநேரத்துக்கு பத்தாயிரம் வரையில் சம்பளம் தரப்படுகிறது. காரணம், பிரபலங்களின் பார்ட்டிகளில் நடக்கும் விஷயங்கள், வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதால்தான். கறுப்புப்பணம் டு கோலிவுட் அடுத்ததாக, அரசியலில் சம்பாதிக்கும் பணத்தை சில அரசியல் பிரமுகர்கள் கோலிவுட்டில் முதலீடு செய்து வருகிறார்கள். அந்தவகையில், சினிமாவில் ஏராளமான கறுப்புப் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள ஆதிலிங்கத்திடம் இருந்து நடிகர், நடிகைகளும் பணம் வாங்கியுள்ளனர். அந்தவகையில் அவர்களுக்கும் சிக்கல் வரப்போகிறது" என்றார் விரிவாக. ஆதிலிங்கத்தின் கடல்கடந்த தொடர்புகளும் அவரின் கைதும் முக்கிய சினிமா புள்ளிகளின் உறக்கத்தைக் கெடுத்துவிட்டது. `வரும் நாள்களில் யாரை நோக்கி என்.ஐ.ஏ.வின் கரம் நீளும்?' என்ற அச்சமும் வாட்டி வதைப்பதால், கலங்கிப் போயிருக்கிறது கோலிவுட். பாக்ஸ்வரலட்சுமி சொன்ன விளக்கம்! என்.ஐ.ஏ அதிகாரிகள் சம்மன் அனுப்பிய தகவல் வெளியானதும், நடிகை வரலட்சுமி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், `எனக்கும் ஆதிலிங்கத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. என்னிடம் வேலை பார்த்த ஆதிலிங்கம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே வேலையில் இருந்து நின்றுவிட்டார். ஆதிலிங்கம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் எனது அம்மாவிடம் மட்டுமே விசாரணை செய்தனர். விசாரணைக்கு என்னை யாரும் அழைக்கவில்லை' எனத் தெரிவித்துள்ளார். - பாபு படங்கள்: செந்தில்நாதன்