மேற்கண்ட தலைப்பை போர்டில் எழுதி வைத்து மாட்டாத குறையாக நிகழ்ச்சிகளுக்கு விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது பெரியார் பல்கலைக்கழகம். சும்மாவே ஆடுபவர்கள் சர்ச்சை சலங்கை கிடைத்தால் விடுவார்களா, ஆளுநர் வரை ஆடித்தீர்த்துவிட்டார்கள். விவகாரத்தைப் பார்ப்போம்…பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையில், கல்வி வளாகத்தை வாடகைக்கு விடுவது தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருந்தன. அதில், `ஏ.சி வசதியுடன் கூடிய ஆடிட்டோரியத்துக்கு 47,200 ரூபாய், டைனிங் ஹாலுக்கு 21,240 ரூபாய், 50 கம்ப்யூட்டர்கள் கொண்ட ஆய்வகத்துக்கு 9,400 ரூபாய், ஜெனரேட்டர் பயன்படுத்தினால் 1000 ரூபாய் கூடுதல் கட்டணம், கருத்தரங்க அரங்கு 11,800 ரூபாய், ஏ.சி இல்லாத கருத்தரங்கு 8,260 ரூபாய், 40 பேர் கொண்ட அமரும் வகுப்பறைக்கு 1,416 ரூபாய் கட்டணம்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது..பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநில துணைத் தலைவர் டாக்டர் திருநாவுக்கரசுவிடம் இதுகுறித்துப் பேசினோம். ``கல்வி பயன்பாட்டு கட்டடங்களை வாடகைக்கு விடுவது தவறு. பல்கலைக்கழகத்தை வழிநடத்துவது ஆட்சி மன்றக்குழுதான். குழுவின் ஆலோசனை இல்லாமல் துணைவேந்தர் ஜெகநாதன் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார். இதுகுறித்து ஆளுநருக்கும் புகார் அனுப்பியுள்ளோம்..கல்வி சேவைக்காக இயங்கும் கட்டடத்தை வாடகைக்கு விடுவது என்ன விதிகளின்படி வரும் என்று தெரியவில்லை. பல்கலைக்கழகம் தொடர்பாக பல தவறுகள் வெளியில் வந்தாலும் உயர்கல்வித் துறை தட்டிக் கேட்பதில்லை" எனக் கொதித்தவர்,``முன்னாள் அமைச்சர் பொன்னையனின் அப்பா இறந்ததுக்கெல்லாம் பல்கலைக்கழக பேருந்தை எடுத்துக் கொண்டு செல்கிறார்கள். இது என்ன கணக்கு என்று தெரியவில்லை. தவிர, ஒவ்வொரு மாதமும் மூன்று வெள்ளிக்கிழமைகள் ஒரு மணிநேரம் தாமதமாக பேராசிரியைகள் வரலாம் என்றொரு அரசாணை இருக்கிறது. ஆனால், அப்படி வரக்கூடாது என்று துணைவேந்தர் ஜெகநாதன் சர்க்குலர் அனுப்புகிறார். விதிகளை மீறுவதற்கு பெரியார் பல்கலைக்கழகம் ஓர் உதாரணம்" என்றார் ஆவேசமாக..இந்திய மாணவர் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளர் பவித்திரனோ, ‘‘வாடகைக்கு விட்டு கட்டடம் சேதமடைந்தால் யார் பெறுப்பேற்பார்கள்? கம்ப்யூட்டர் உடைந்துபோனால் என்ன செய்வார்கள்? சேவை செய்யும் இடத்தை வாடகைக்கு விடுவது சரியல்ல. பல்கலைக்கழகத்தில் நடக்கும் பல்வேறு முறைகேடுகளுக்கு எதிராக பலகட்ட போராட்டம் நடத்திய பிறகுதான் குழுவே அமைத்தார்கள்" என்றார் ஆதங்கத்துடன்.``ஏன் இவ்வளவு சர்ச்சைகள்?" என பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனிடம் கேட்டோம். ‘‘அரசு துறைகளுக்குத்தான் வாடகைக்கு விடப்படுகிறது. பொதுமக்களுக்குக் கிடையாது. அரசு கேட்கும்போது வாடகைக்கு விடமுடியாது என்று சொல்ல முடியுமா? வேளாண் பல்கலைக்கழகத்தில் ஒரு துறையில் இருந்து இன்னொரு துறைக்கு வாடகைக்கு விடுகின்றனர். நாங்கள் ஆக்கப்பூர்வமாக எதைச் செய்தாலும் குறை சொல்கிறார்கள்" என்றார் ஆதங்கத்துடன்.குறைகள் இல்லாவிட்டால் குற்றச்சாட்டு கிளம்புவது ஏன்? - கே.பழனிவேல்