Reporter
“திராவிடத்தை ஏற்கமாட்டோம்!” சென்னையில் கோஷமிட்ட பட்டியல் சமூகத்தினர்…
‘பட்டியல் சமூக மக்கள் மீதான திராவிட விரோத போக்கு விளக்க’ நிகழ்ச்சியும் இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டமும் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் ஆகஸ்ட் 12ம் தேதி நடந்தது. நிகழ்ச்சி தொடங்கியதுதான் தாமதம், மழை பொத்துக்கொண்டு கொட்டத் தொடங்கியது. ஆனாலும் ஆங்காங்கே ஒதுங்கி நின்றபடியும், குடையை பிடித்தபடியும் பட்டியல் சமூக மற்றும் பழங்குடியின மக்கள் திரளாக பங்கேற்றனர்.