பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு வாங்கியதில் ஊழல் அரங்கேறியுள்ளதாக பா.ம.க எழுப்பியுள்ள புகார் ஒன்று, அ.தி.மு.க.வை மட்டுமன்றி ஆளும்கட்சிப் புள்ளிகளின் தூக்கத்தையும் ஒருசேர கெடுத்திருக்கிறது. கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தாமோதரன். இவரது தொகுதிக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில் நவீன முறையில் வகுப்புகளை நடத்துவதற்கு ஸ்மார்ட் போர்டு வசதி இல்லாமல் இருந்துள்ளது. இதனைக் களைவதற்காக களம் இறங்கிய தாமோதரன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 32 ஸ்மார்ட் போர்டுகளை அரசுப் பள்ளிகளுக்கு வழங்கினார். தாமோதரனின் இந்தச் செயல், தொகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. எம்.எல்.ஏ.வுக்கும் உள்ளூர மகிழ்ச்சி. ஆனால், `ஸ்மார்ட் போர்டுகளை பர்சேஸ் செய்ததில் ஊழல்' என பா.ம.க எழுப்பிய புகார், தாமோதரனின் திகைக்க வைத்துவிட்டது.. ``என்ன நடந்தது?'' என பா.ம.க.வின் கோவை மாவட்ட செயலாளரான அசோக் ஸ்ரீநிதியை சந்தித்துப் பேசினோம். “எம்.எல்.ஏ தாமோதரன், 32 பள்ளிகளில் அமைத்துக் கொடுத்துள்ள உயர்தர அறிவுத்திறன் வகுப்பறை எனப்படும் ஸ்மார்ட் போர்டு ஒவ்வொன்றின் மதிப்பும் தலா இரண்டு லட்சம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படின்னா, மொத்தம் 64 லட்சம். இதைக் கவனிக்கும்போதுதான் எனக்கு சந்தேகம் வந்துச்சு. காரணம், ஒரு ஸ்மார்ட் டி.வி.யை வெச்சு, இண்டர்நெட் கனெக்ஷன் கொடுத்து, சின்ன சின்ன வசதிகளோடு அவங்க உருவாக்கியிருக்கிற ஸ்மார்ட் வகுப்பறைக்கு ரெண்டு லட்சம் ஆகாதுன்னு உறுதியா தெரியும். இதுல ஏதோ முறைகேடு நடந்திருக்குது, இதை ஆதாரத்தோடு கண்டுபிடிக்கணும்னு முடிவு பண்ணினோம். அதனால, அந்த ஸ்மார்ட் போர்டை சப்ளை செய்த சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நிறுவனத்தை சாதாரண கஸ்டமர்போல தொடர்புகொண்டு பேசினேன். ’முப்பது ஸ்மார்ட் போர்டு வாங்குறோம், எங்களுக்கு கொட்டேஷன் அனுப்புங்க’ன்னு சொன்னேன். அவங்களும் அனுப்பினாங்க. அதை பார்த்துட்டு எனக்கு செம ஷாக். காரணம், ஒரு ஸ்மார்ட் போர்டின் விலை ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து ஒரு லட்சத்து ஐந்தாயிரம்னு குறிப்பிட்டிருந்தாங்க. தனி நபருக்கே இந்த ரேட்டுக்கு தரும் அந்த நிறுவனம், அரசுத் திட்டத்துக்கு இன்னும் குறைவான லாபம் வெச்சுதானே தருவாங்க. அந்த கணக்குப்படி பார்த்தால் கிணத்துக்கடவு தொகுதியில் வாங்கப்பட்ட 32 ஸ்மார்ட் போர்டுகளில் கொள்ளை நடந்திருக்குதுன்னு தெரியுது. கிணத்துக்கடவு அரசுப்பள்ளிகளுக்கு வாங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போர்டில் மட்டும் முப்பது லட்சத்துக்கும் மேல் ஊழல் நடந்திருக்குன்னு அடிச்சு சொல்றேன்'' எனக் கொந்தளித்தவர், `` திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிகளுக்கு சமீபத்தில் 306 ஸ்மார்ட் போர்டுகள் வழங்கப்பட்டதைக் கவனிச்சேன். சபாநாயகர் அப்பாவுவின் தொகுதி இது. இங்கேயும் அதே நிறுவனத்திடம் இருந்து 7 கோடியே 11 லட்சத்து 50 ஆயிரம் என்று மதிப்பீட்டில் வாங்கப்பட்டிருக்குது. இதன்படி, கணக்கிட்டால் ஒரு ஸ்மார்ட் போர்டின் விலை இரண்டு லட்சத்து முப்பத்து ரெண்டாயிரம் ஆகுது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தொகுதியில் ஒரு போர்டுக்கு ரெண்டு லட்சம் கணக்கு காட்டினாங்க, ஆனால் இது அதைவிட முப்பதாயிரம் அதிகம்..அந்த கம்பெனி எனக்கு கொடுத்த கொட்டேஷனின்படி ஒரு போர்டின் விலை ஒரு லட்சத்து ஐந்தாயிரம்தான். ஒருவேளை இணைய வசதி செலவு, அது இதுன்னு சேர்த்து கழிச்சாகூட ஒரு போர்டுக்கு மட்டும் ஐம்பது முதல் எழுபதாயிரம் ரூபாய் வரையில் ஊழல் நடந்துள்ளதாக தெரிய வருது. மொத்தமாக, 306 ஸ்மார்ட் போர்டு வாங்கியதில் சுமார் நான்கு கோடி ரூபாய் ஊழல் நடந்துருக்குதுன்னு சொல்றேன். இந்த முறைகேட்டை பண்ணியது யார் என நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லலை. ஊழலை ஆதாரப்பூர்வமா வெளிப்படுத்திட்டோம். ஆவணமும் எங்ககிட்ட இருக்குது. சுருட்டப்பட்ட பணம் எங்கே போச்சு, யார் அடிச்சாங்கன்னு கண்டுபிடிக்க வேண்டியது அரசின் பொறுப்பு. கோவை கிணத்துக்கடவு தொகுதி விவகாரம் தொடர்பா மாவட்ட கலெக்டர்கிட்ட புகார் மனு கொடுத்திருக்கேன். நடவடிக்கைக்காக காத்திருக்கோம். நியாயம் கிடைக்கலேண்ணா விடமாட்டோம்'' என்கிறார். `` தமிழகம் முழுக்க எத்தனை அரசுப்பள்ளிகளுக்கு எவ்வளவு ஸ்மார்ட் போர்டு வாங்கியிருக்காங்கன்னு கணக்கிட வேண்டியது அவசியம். இதுல எத்தனை நூறு கோடிகளுக்கு ஊழல் நடந்திருக்கும். நினைச்சாலே தலை சுத்துது. இதேபோல் கல்வித்துறையில் பல நலத்திட்டங்களுக்கு கணக்கு காட்டப்படும் மதிப்பீட்டில் 50 சதவிகிதம் வரையில் ஊழல் நடந்துள்ளதாக தெரியுது. சாதாரண சாக்பீஸ் முதல் சத்துணவு, சீருடை, சைக்கிள், லேப்டாப்னு அத்தனையிலும் ஊழல். முறையான விசாரணை குழுவை போட்டு நேர்மையா தோண்டித் துருவினால் மிகப்பெரிய ஊழல் டைனோசர்கள் வெளியே வரும்” எனவும் சுட்டிக் காட்டுகிறார், அசோக் ஸ்ரீநிதி..ஸ்மார்ட் போர்டு சர்ச்சை குறித்து, அதிமுக எம்.எல்.ஏ. தாமோதரனிடம் கேட்டபோது, ``என்னை மையப்படுத்தி உருவாகியுள்ள அபாண்டமான இந்தக் குற்றச்சாட்டை வன்மையாக கண்டிக்கிறேன். தொகுதி மேம்பாட்டு நிதியை எந்த எம்.எல்.ஏ.வும் தொகையாக பெற முடியாது. பணிகளை மட்டும் குறிப்பிட்டு, கலெக்டர் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். அதை அவங்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி, டெண்டர் கோரப்பட்டு, பணிகள் முடிக்கப்படும். இதுதான் அரசு நடைமுறை. அதனால் இந்தத் திட்டம் பற்றிய புகாரில் என் மீது எந்தத் தவறுமில்லை, நான் எந்த ஊழலிலும் ஈடுபடவும் இல்லை” என்றார். சபாநாயகர் அப்பாவும் இந்த பிரச்னைக்கு பதில் கூறியுள்ளார். “அ.தி.மு.க. ஆட்சிகாலத்தில் ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்குவதற்கு மூன்று லட்சம் செலவு செய்தார்கள். ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் அதே வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புக்கு இரண்டு லட்சம்தான் செலவாகிறது. ஒரு லட்சத்தைக் குறைத்து அரசு நிதியை சேமிக்கிறோம். ஸ்மார்ட் போர்டுகளை வழங்கியுள்ள நிறுவனம்தான் பள்ளிகளுக்கு கேமரா உள்ளிட்டவற்றையும் சப்ளை செய்துள்ளது. அதனால், விலையை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. கொள்முதல் விவரங்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சம்பந்தப்பட்டவை” என்று குறிப்பிட்டுள்ளார். மூன்று லட்சம், இரண்டு லட்சமாக குறைந்தால் ஊழல் நடக்காது பாஸ்! - எஸ்.ஷக்தி