ஐ.பி.எல் ஆட்டம் இல்லாத காலங்களில், தனது அபார்ட்மெண்டில் ஐ.டி பெண் ஊழியர் ஒருவருடன் காதல் சடுகுடு ஆடியதால், சட்டச் சிக்கலில் சிக்கித் தவிக்கிறார், தமிழக கிரிக்கெட் வீரர் ஒருவர். டி.என்.பி.எல் தொடரில் அறிமுகமாகி, பின்னர் ஐ.பி.எல். தொடர்களில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிக்காக விளையாடி இருப்பவர், தமிழகத்தை சேர்ந்த ராஜகோபால் சதீஷ். ஆல் ரவுண்டராக அறியப்படும் ராஜகோபால் சதீஷ் மீது, சென்னையை சேர்ந்த ஐ.டி பெண் ஊழியர் ஒருவர் கொடுத்த புகார், அதிர்ச்சி ரகம். பெருங்குடியில் உள்ள உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர், பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியான மோனிகா. தீவிர கிரிக்கெட் ரசிகையான மோனிகாவுக்கு அதே பெருங்குடி பகுதியில் வசித்துவந்த ராஜகோபால் சதீஷுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த நெருக்கம் ஒருகட்டத்தில் மேலும் இறுக்கமானதால், தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார், மோனிகா. தற்போது அந்த கர்ப்பத்துக்கு மட்டுமின்றி தனது உயிருக்கும் ஆபத்து இருப்பதாக சதீஷ் மீதும் அவரின் மனைவி சாம்பவி ஆகியோர் மீது அடையாறு காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார், மோனிகா. அவரை சந்தித்துப் பேசினோம். ``எனக்கும் ராஜகோபால் சதீஷுக்கும் 2017-ம் ஆண்டு முதலே பழக்கம் இருந்தது. முதலில் நண்பர்களாக பழகிவந்த நாங்கள் இருவரும், பின்னர் காதலிக்க ஆரம்பித்தோம். கடந்த 2019-ம் ஆண்டு பெருங்குடியில் உள்ள அவரோட வீட்டுக்கு பலமுறை அழைத்து சென்றார். அந்த வீட்டில் நானும் அவரும் மிகவும் நெருக்கமாக வாழ்ந்தோம். அந்த சமயத்தில் கொரோனா பாதிப்பு அதிகமானதால் சொந்த ஊரான திருச்சிக்கு சென்றார், ராஜகோபால் சதீஷ். அப்படி சென்றவர், நீண்ட நாள்களாக திரும்பிவராத காரணத்தால் திருச்சி சென்று பார்த்தேன். அப்போது, எனக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ராஜகோபால் சதீஷுக்கு ஏற்கெனவே திருமணமாகி சாம்பவி என்ற மனைவி இருந்துள்ளார். இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது, அவரின் மனைவி சாம்பவி என்னுடன் கடும் வாக்குவாதம் செய்து சண்டை போட்டார். இதனால் திருச்சியிலிருந்கு கிளம்பி வந்துவிட்டேன். சரி, `ஒருவனை நம்பி ஏமாந்துவிட்டோம்' என்ற கவலையுடன் அவரை மறந்தேவிட்டேன். இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரத் என்பவருடன் என் பெற்றோர் என்னைத் திருமணம் செய்துவைத்தனர். ஆனால், எனக்கும் பரத்துக்கும் இடையேயான திருமண வாழ்க்கை மூன்று மாதங்கள் மட்டுமே நீடித்தது. கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டோம். இதன்பிறகு பெருங்குடியில் உள்ள எனது பெற்றோருடன் வசித்துவந்தேன்..இந்தநிலையில், கடந்த ஆண்டு மே மாதம் செல்போனில் தொடர்புகொண்டு, `மீண்டும் நட்பை தொடர வேண்டும்' என ராஜகோபால் சதீஷ் கேட்டார். நான், `உனக்கு மனைவி இருக்கிறார். அவருக்கு துரோகம் செய்ய வேண்டாம்’ என அறிவுரை வழங்கினேன். ஆனால், அதையெல்லாம் கேட்காமல் மீணடும், மீண்டும் ராஜகோபால் சதீஷ் எனக்கு போன் செய்தார். `என்னை மறக்க முடியவில்லை' என்றும் `நேரில் சந்திக்க வேண்டும்' என்றும் தொடர்ந்து வற்புறுத்தினார். என்னால் மறுக்க முடியாமல் அவரிடம் போனில் பேசி வந்தேன். இதன்பின்னர், `எங்காவது வெளியூர் செல்லலாம்' என என்னிடம் கூறினார். ஆனால். முதலில் அதற்கு நான் சம்மதிக்கவில்லை. ஆனால், விடாப்பிடியாக என்னிடம் பேசி சம்மதிக்க வைத்து, கடந்த ஏப்ரல் மாதம் கொடைக்கானலுக்கு கூட்டிச் சென்றார். அங்கு ஓட்டலில் அறை எடுத்து கணவன்-மனைவிபோல் வாழ்ந்து வந்தோம். இதன் விளைவாக தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளேன். நான் கர்ப்பமாக இருக்கும் விஷயம், சதீஷின் மனைவி சாம்பவிக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. இதனால், என்னுடைய கர்ப்பத்தைக் கலைக்க வேண்டுமென சாம்பவியின் நண்பர் சுரேகா என்னிடம் மிரட்டினார். ஆனால், `கர்ப்பத்தை கலைக்க மாட்டேன்' என சொல்லிவிட்டேன். இதைத் தொடர்ந்து சாம்பவியும், என்னுடைய கர்ப்பத்தை கலைக்கச் சொல்லி பலமுறை என்னை தொடர்புகொண்டு மிரட்டினார். இந்த மிரட்டல் அடிக்கடி தொடர்ந்ததோடு, எல்லை மீறிப் போனதால் ஆகஸ்ட் 13-ம் தேதி அடையாறு காவல்நிலையத்தில் கணவன், மனைவி இருவர் மீதும் புகார் கொடுத்திருக்கிறேன்" என்றார் விரிவாக. அடையாறு காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட இந்த மனுவை, தரமணி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தரமணி மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் தர்மாவிடம் பேசினோம், “மோனிகா கொடுத்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். ராஜகோபால் மனைவி சாம்பவி, சுரேகா, மோனிகா ஆகிய மூவரும் விரைவில் நேரில் வரவழைத்து விசாரிக்கப்படுவார்கள்’’ என்றார். பாலியல் புகார் தொடர்பாக கிரிக்கெட் வீரர் ராஜகோபால் சதீஷிடம் விளக்க கேட்க அவரது செல்போன் எண்ணுக்குத் தொடர்பு கொண்டோம். அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அவரின் விளக்கத்தைக் கேட்டு, அவரது வாட்ஸ்ஆப் எண்ணுக்கும் தகவல் அனுப்பினோம். எந்தப் பதிலும் வரவில்லை. சட்டம் என்ற தேர்டு அம்பயர் தீர்ப்பு சொல்லும்போது, உண்மை வெளிவரும். -ரய்யான் பாபு