‘துப்பாக்கி எடுக்கறான், சுடறான்…ரிப்பீட்டு’ - `மாநாடு' திரைப்பட எஸ்.ஜே. சூர்யா ஸ்டைலில் புலம்பி வருகின்றனர், நாம் தமிழர் கட்சியின் தம்பிகள். `புகார் கொடுப்பதும் வாபஸ் வாங்குவதும் விஜயலட்சுமிக்கு சகஜமாகிவிட்டது. இந்தமுறை சீமானுக்கு சட்டச் சிக்கல்தான்' என அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கின்றனர், சட்ட வல்லுநர்கள்.2011-ம் ஆண்டு சீமான் மீது பாலியல் புகார் கொடுத்தார், நடிகை விஜயலட்சுமி. பின்னர் அந்த வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதனால், அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி சீமான் மீது மீண்டும் பாலியல் புகாரளித்தார். இதையடுத்து, கிடப்பில் கிடந்த பழைய புகாரை தூசி தட்டியெடுத்த போலீஸார், சீமானுக்கு இரண்டுமுறை சம்மன் அனுப்பினர்..இதையடுத்து, `விரைவில் சீமான் கைதாகப் போகிறார்' என்று பேசப்பட்ட நிலையில், இந்தமுறையும் புகாரை வாபஸ் பெறுவதாக பல்டியடித்தார், விஜயலட்சுமி. ஆனால், `அப்படியெல்லாம் புகாரை வாபஸ் பெற முடியாது' என்கின்றனர், சட்ட வல்லுநர்கள்.நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரிடம் இதுகுறித்துக் கேட்டபோது, “புகாரை வாபஸ் பெற சட்டத்தில் இடமில்லை என்பது உண்மைதான். ஆனால், சீமான் திருமணம் செய்துகொண்டதாக விஜயலட்சுமி கூறியிருப்பதால், பரஸ்பர சம்மதத்துடன் உறவில் இருந்தது வன்கொடுமைக்குள் வராது.அதேநேரம், விஜயலட்சுமியை திருமணம் செய்துகொண்டதை சீமான் ஒப்புக்கொண்டால் கயல்விழி இரண்டாவது மனைவி ஆகிவிடுவார். இப்படி சட்டச் சிக்கல்கள் இருப்பதால், சீமானும் விஜயலட்சுமியும் லிவிங் டு கெதரில் இருந்ததாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும். இந்த வழக்கு நீதிமன்றம் சென்றாலும் ரத்து செய்யப்பட வாய்ப்பு அதிகம்” என்றார். .மூத்த வழக்கறிஞர் சாந்தகுமாரியிடம் கேட்டபோது, “லிவிங் டூ கெதர் உறவில் திருமணம் செய்துகொள்வதாக நம்பவைத்ததாகவே நீதிமன்றம் எடுத்துக்கொள்ளும். அதுவும் குற்றம்தான். சீமான் மீதான புகாரில் 376 என்ற வன்புணர்வு சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தனி நபருக்கு எதிரான குற்றமல்ல, சமூகத்துக்கு எதிரான குற்றம். அதனால், விஜயலட்சுமி கொடுத்த புகாரை வாபஸ் வாங்கவே முடியாது” என்கிறார்,“புகாரை வாபஸ் பெறுவதாக விஜயலட்சுமி எழுதிக் கொடுத்ததை காவல்துறையினர் வாங்கியதே சட்டத்துக்கு முரணானது. இந்த வழக்கில் புகாரை வாபஸ் பெற சட்டத்தில் இடமில்லை. இதனை ஏற்றுக் கொண்டால், பாலியல் புகார்களால் பாதிக்கப்படும் பெண்கள், பல்வேறு மிரட்டல்களால் புகாரை வாபஸ் பெறவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகலாம். அதற்கு இந்த வழக்கு முன்உதாரணமாகிவிடக்கூடாது" என்கிறார், வழக்கறிஞர் இளங்கோவன்விஜயலட்சுமியிடம் வாக்குமூலம் பெற்ற துணை ஆணையர் உமையாளிடம் பேசியபோது, “விஜயலட்சுமி கொடுத்த புகாரை வாபஸ் வாங்கமுடியாது. அதனால், சட்டரீதியான நடவடிக்கைகளை ஆலோசித்து வருகிறோம்” என்றார்.விஜயலட்சுமியே பெங்களூருவுக்குப் போய்விட்டாலும், வில்லங்கம் விடாதுபோல! - மனோ செளந்தர்