-ஷானு`சிவன் சொத்து குலநாசம்' என்பது முதுமொழி. நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தனது குல சொத்தை ஆட்டைய போட்டு உறவுகளின் சாபத்துக்கு ஆளாகி வருவதாக சொல்லப்படும் நிலையில், போலீஸ் வரையில் பஞ்சாயத்து நீண்டிருப்பதுதான் திருச்சியின் ஹாட் டாபிக்..திருச்சி மாவட்டம் லால்குடி டி.எஸ்.பி-யிடம் விக்னேஷ் சிவன், அவரது தாயார், சகோதரி மற்றும் நயன்தாரா மீது புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட உறவினர்களை சந்தித்துப் பேசினோம். விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம் நம்மிடம், "என் தம்பி சிவக்கொழுந்து காவல்துறையில் டி.எஸ்.பி.யாக வேலை பார்த்து 2002ல் இறந்து போனார். அவரது மனைவி மீனாகுமாரி காவல்துறையில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தவர். நாங்கள் அண்ணன், தம்பிகள் என 9 பேர். எங்களுக்கு பொதுவாக பாத்தியப்பட்ட லால்குடி, நன்னிமங்கலத்தில் 53 சென்ட், ஆங்கரையில் 73 சென்ட் இடங்களை சிவக்கொழுந்து, தான் உயிருடன் இருக்கும்போதே 1990ல் எங்களுக்குத் தெரியாமல் விற்றுவிட்டார். 2012ல் இந்த விஷயம் தெரியவந்தவுடன் நான் கோர்ட்டில் வழக்கு போட்டேன். 2017ல், `நிலத்தை வாங்கியவர், சிவக்கொழுந்துவின் ஒரு பங்கு தவிர, மற்ற எட்டு பங்கு நிலத்தை உரியவர்களுக்குத் தர வேண்டும்' என்று தீர்ப்பு வந்தது.. என்னுடைய இன்னொரு தம்பியான குஞ்சிதபாதத்தின் இருதயத்தில் பிரச்னை. கோயம்புத்தூரில் டிபன் கடை நடத்தும் அவருக்கு ஆப்ரேஷன் செய்ய அவசரமாக 5 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. இந்த இடத்தை விக்னேஷ் சிவன் குடும்பம் கோர்ட் தீர்ப்புப்படி செய்து கொடுத்தால் தம்பியின் உயிரைக் காப்பாற்ற முடியும். சிவக்கொழுந்து பத்திரம் செய்து கொடுக்கும்போதே, 'இந்த சொத்தில் ஏதாவது வில்லங்கம் இருந்து பின்னாளில் கண்டுபிடிக்கப்பட்டால், நானோ என் வாரிசுகளோ அதை தீர்த்துக் கொடுப்போம்' என்று எழுதி இருப்பதால் இதை விக்னேஷ் சிவன்தான் தீர்த்துக் கொடுக்க வேண்டும். இந்த கேஸ் முடியும் வரை தம்பியின் உயிர் தாங்குமா என்பதே சந்தேகமா இருக்கிறது. என்னுடைய பென்ஷன் காசை வச்சுத்தான் இந்த கேசை நடத்திக்கிட்டிருக்கேன். அதனால்தான் இந்த மோசடி குறித்து லால்குடி டி.எஸ்.பி.யிடம் புகார் கொடுத்திருக்கிறோம்” என்றார்..அடுத்ததாக, குஞ்சிதபாதத்தின் மனைவி சரோஜா, "எப்போ என் கொழுந்தன் சிவக்கொழுந்து செத்தாரோ, அன்னைக்கு நாங்க அந்த வீட்டு வாசலை விட்டு வெளியே வந்துவிட்டோம். அதுக்குப்பிறகு அங்க போகவே இல்லை. ஊர் உலகமே கொண்டாடின விக்னேஷ் சிவன் - நயன்தாரா கல்யாணத்துக்கும் எங்களைக் கூப்பிடல. இந்த கேஸ் முடிஞ்சு சொத்து எங்க கைக்கு வரும்னு அஞ்சு வருஷமா காத்துக்கிட்டிருக்கோம். அது நடந்தபாடு இல்ல. 'ஒரு மாசத்துக்குள்ள ஆபரேஷன் பண்ணலன்னா எம்புருஷன் உசுர காப்பாத்த முடியாது' ன்னு நாலு டாக்டர்கள் சொல்லிட்டாங்க. குழந்தை குட்டிங்க இல்லாத நாங்க யாருகிட்ட போய் உதவி கேட்போம்?" என்றார் குமுறலுடன்.. இதனைத் தொடர்ந்து நம்மைத் தொடர்பு கொண்டு பேசிய குஞ்சிதபாதம், "விக்னேஷ் சிவன்கிட்ட சொல்லுங்க. `நாங்க எப்பவும் உனக்கு பகையா இருந்ததில்ல... உங்க அம்மாதான் எங்களை எல்லாம் உன்கிட்ட இருந்து கட் பண்ணிடுச்சு. உன் தங்கச்சி கல்யாணத்துக்குக்கூட நீ லண்டனில் இருந்தே. நாங்க சிதம்பரத்தில் நடந்த கல்யாணத்துக்குப் போனோம். உங்க அம்மாதான் அங்கே எதையும் செய்ய விடாம எங்களைத் தடுத்துட்டாங்க. அவங்க வசதி வாய்ப்பதான் பாக்குறாங்களே தவிர, உறவைப் பார்க்கல. உங்க அப்பா கூட பொறந்த சித்தப்பா நான் இருக்கும்போதே உங்க அம்மா கூட பொறந்த தங்கச்சி - தங்கச்சி கணவரைத்தான் மணவறையில நிக்கவச்சு சடங்குகளை செய்ய வச்சாங்க. நானே நயன்தாராவோட ஃபேன்; அந்த பிள்ளைக்கு நான் துரோகம் பண்ணுவேனா? நீ வசதியா இருக்க. உன் பணம் எங்களுக்கு வேண்டாம். எங்களுக்கு சேர வேண்டிய சொத்தை முறையாக செஞ்சு கொடுத்திடு. அப்பத்தான் நான் உசுரு பொழைக்க முடியும். அந்த பொண்ணோட கௌரவத்தை குறைக்கிற மாதிரி நாங்க எதுவும் செய்ய விரும்பலை. ஆனா அந்தப்பொண்ணு இந்தப் பிரச்னையிலிருந்து எப்பவுமே நழுவத்தான் பாக்குது'. இதை நான் சொன்னேன்னு சொல்லுங்க" என்றார், வேதனையுடன்..இதுகுறித்து விக்னேஷ் சிவனின் தாயார் மீனாகுமாரியிடம் கேட்டபோது, "அதுங்க எல்லாம் டோட்டல் ஃபிராடுங்க. என் கணவர் இறந்து 20 வருஷம் ஆச்சு. அவங்க எல்லாருமே பொய் சொல்றாங்க. என் மகன்கிட்ட பணம் பறிக்க இப்படிப் பண்றாங்க. பத்து பேருக்கு பங்கு இருக்கிற சொத்தை யாராவது விப்பாங்களா? 30 வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயத்துக்கு இப்ப பிரச்னை பண்ணிட்டு இருக்காங்க" என்றார்.. சொத்து பிரச்னை குறித்து நாம் செய்தி சேகரிப்பதை அறிந்து, நம்மைத் தொடர்பு கொண்ட விக்னேஷ் சிவனின் இன்னொரு சித்தப்பா பாலாஜி, "மாணிக்கம், குஞ்சிதபாதம் எல்லாம் வாழவே கூடாது. எனக்கு துப்பாக்கி கிடைச்சா அவனுகளை சுட்டே புடுவேன். சிவக்கொழுந்து இறந்து அஞ்சாவது நாள் மீனாகுமாரிகிட்ட 'இனிமே நீ எனக்கு பொண்டாட்டியா இரு'ன்னு சொன்னவன்தான் அந்த மாணிக்கம். இதுவரைக்கும் நான் ஒருத்தன்தான் மீனாகுமாரிக்கு சப்போர்ட் பண்றேன். மத்தவங்க எல்லாம் குடிகாரன், மொள்ளமாரியா இருக்கானுங்க" எனக் கொந்தளித்தார். சொத்து பஞ்சாயத்தில் நயன்தாராவின் பெயரும் இழுக்கப்படுவதால் விக்னேஷ் சிவன் மௌனம் கலைப்பதே நல்லது.