“அமித் ஷா தொடங்கி வைக்க வருகிறார், பிரதமர் மோடி முடித்து வைக்க வருகிறார் என்று அண்ணாமலையின் பாதயாத்திரை சூடு கிளப்ப ஆரம்பித்துவிட்டதே சுவாமி?” -வறுத்தகடலைக்கு அருகே காளான் சூப்பை வைத்தபடி கச்சேரியை ஆரம்பித்தார், சிஷ்யை.``வரும் வெள்ளியன்று அண்ணாமலையின் பாதயாத்திரை ராமேஸ்வரத்தில் தொடங்குகிறது. இந்த யாத்திரைப் பணிகளை கவனிக்க 28 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெகுவிமரிசையாக யாத்திரையை நடத்த முடிவு செய்திருக்கிறார் அண்ணாமலை. இதற்கான பட்ஜெட் மட்டும் பல கோடிகளைத் தாண்டும் என்கிறார்கள்.இந்த நிதியை மண்டல பொறுப்பாளர்கள் பல முனைகளில் இருந்து திரட்டி வருகின்றனர். இப்படி திரட்டப்படும் நிதியில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர், கணக்கு காட்டாமல் லபக்குவதாக புகார்கள் வர ஆரம்பித்துவிட்டன. அப்படி சுருட்டும் நபர்களின் பெயர்களை பிளாக் லிஸ்ட்டில் கொண்டுவரும் முடிவில் இருக்கிறார், அண்ணாமலை''.“ஓய்வுக்கு லண்டன் கிளம்புகிறாராமே நடிகர் விஜய்?”“ `லியோ' படப்பிடிப்பை முடித்து விட்டு, ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு விஜய் தயாராகி வருகிறார். `லியோ' ஆடியோ வெளியீட்டு விழாவை தமிழகத்தில் நடத்தாமல், மலேசியா அல்லது லண்டனில் நடத்த அவர் முடிவு செய்திருக்கிறாராம். இதுவரை நடந்த அவரது ஆடியோ வெளியீட்டு விழாக்களில் அரசியல் `பஞ்ச்' கொஞ்சம் லைட்டாக இருக்கும். ஆனால், இம்முறை கொஞ்சம் வெயிட்டாக தயாரிக்கும்படி ஸ்கிரிப்ட் குழுவுக்கு தகவல் தரப்பட்டுள்ளதாம்.காமராஜர் பிறந்தநாளைப்போல, செப்டம்பர் 17ம் தேதி வரவிருக்கும் பெரியார் பிறந்தநாளையும் பெரியளவில் கொண்டாட நடிகர் விஜய் முடிவு செய்திருக்கிறார். காமராஜர் பிறந்தநாளில் `தளபதி விஜய் பயிலகம்' தொடங்கியது போன்று முக்கிய அறிவிப்பை ஒன்றையும் வெளியிட இருக்கிறாராம்.தற்போது, `விஜய் மக்கள் இயக்கம்' சார்பில் பிரட், பால், முட்டை போன்றவை சோதனை அடிப்படையில் சில பகுதிகளில் இலவசமாக கொடுக்கப்பட்டு வருகிறது. இதுபோல இலவச ஆடு, மாடுகளையும் கிராமப்புற பகுதிகளில் பின்தங்கிய வகுப்பினர்களுக்கு வழங்க விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கணக்கெடுத்து வருகின்றனர். அநேகமாக, பெரியார் பிறந்தநாள் அறிவிப்பாக இலவச ஆடு, மாடுகள் திட்டம் இடம் பெறலாம்”..“விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவர் பலான சர்ச்சையில் சிக்கியிருக்கிறாரே?”`` திருச்சி மாநகர், கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில் `ஸ்பா' ஒன்று இயங்கி வந்தது. அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக திருச்சி விபசார தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற திருச்சி விபசார தடுப்பு பிரிவு (பொறுப்பு) காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீஸார் ஸ்பாவில் விசாரணை நடத்தினர்.அந்த விசாரணையில் ஸ்பாவுக்கு உரிமை பெறாமல் பல ஆண்டுகளாக நடத்துவது தெரியவந்தது. இதையடுத்து அந்த வீட்டில் இருந்த இரண்டு பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ஸ்பாவின் உரிமையாளரான செந்தில் என்பவர், தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளராக உள்ளார்.இவர் திருச்சி மாநகரப் பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளையும் செய்து வருகிறார். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற மாணவ, மாணவிகளுக்கான விருது வழங்கும் விழாவிலும் கலந்துகொண்டார். இந்த விஷயம் நடிகர் விஜய்க்கு அப்டேட் செய்யப்பட படுஅப்செட் ஆகிவிட்டாராம். ‘இப்படிப்பட்ட நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஓரம் கட்டுங்கள். வழக்கமான அரசியல் கட்சிகள்போல் செயல்படும் எண்ணம் எனக்கு சுத்தமாக இல்லை’ என்று நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்டிருக்கிறாராம் விஜய்”“இதேபோன்ற ஒரு பிரச்னையில் பா.ஜ.க. மாவட்ட நிர்வாகி ஒருவரும் சிக்கியிருப்பதாக சொல்கிறார்களே?”`` சென்னையை சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி ஒருவர், இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது சக பெண் நிர்வாகியுடன் தி.நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ரூம் எடுத்து, ‘உலகம் முழுதும் பழைய ராத்திரி.. உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி’ என்று ஹனிமூன் கொண்டாடியிருக்கிறார். அப்போது பாதி ராத்திரியில் ஹோட்டலுக்கு ரெய்டு வந்த போலீஸாரிடம் சிக்கிவிட்டனர். இருவரையும் வாகனத்தில் ஏற்றும் முடிவுக்கும் வந்துவிட்டனர்.இதனால் பதறிய நிர்வாகி, சக நிர்வாகிகளுக்கு போன் போட்டு கதறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து ஹோட்டலில் குவிந்த நிர்வாகிகள், போலீஸாருடன் பேச்சுவார்த்தையை நடத்தி ஜோடிகளை மீட்டிருக்கிறார்கள்”``ரொம்பவும் சைலண்டாகிவிட்டாரே திருமா?”“தி.மு.க.வைப்போல அடுத்தடுத்து கட்சி நிர்வாகிகள் ஏதாவதொரு சர்ச்சையில் சிக்குவது அவருக்கு பெரும் மன உளைச்சளைக் கொடுத்துள்ளது. கடைசியாக, கட்சியின் மானத்தை வாங்கிக்கொண்டிருப்பவர் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு திருமாவால் வாக்கு சேகரிக்கப்பட்ட விக்ரமன். இவர் 9 பெண்களையும் மூன்று ஆண்களையும் பாலியல்ரீதியாக தொல்லை கொடுத்ததாக கமிஷனர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்திருப்பது திருமாவை சோர்வடைய வைத்திருக்கிறது”.``இம்முறை தொகுதி மாறவிருக்கிறாராமே?”``கட்சிப் பணிகளில் பிஸியாக இருந்ததால் தனது சிதம்பரம் தொகுதிப் பக்கமே அவ்வளவாக எட்டிப்பார்க்காமல் இருந்துவிட்டார் திருமாவளவன். இது தொகுதி முழுக்க எதிரொலிப்பதை அறிந்துகொண்ட அவர், இம்முறை திருவள்ளூருக்கு ஷிஃப்ட் ஆகலாமா என யோசித்து வருகிறார்.’’“காங்கிரஸ் தலைவர் பதவி ரேஸ் என்ன ஆனது?”`` தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு கடந்த 2 வருடங்களாக சீனியர் தலைகள் முட்டி மோதிக்கொண்டிருக்கின்றன. இது ஒரு தொடர்கதையாக டெல்லி வட்டாரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போது இந்த ட்ரெண்ட் மாறி ‘செயல் தலைவர்’ பதவியை நோக்கி சிலர் ஓடத் தொடங்கியிருக்கிறார்கள்.இதற்காக சமீபத்தில் டெல்லி சென்ற எஸ்.சி. எஸ்.டி. பிரிவுத் தலைவர் ரஞ்சன்குமார், ராகுல் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து தனது ப்ரொஃபைலை நீட்டி இருக்கிறார். அது மட்டுமல்ல. 2024 நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தொகுதியை குறிவைத்துக் களத்தில் இறங்கி இருக்கும் ரஞ்சன்குமார், இப்போதே பூத் கமிட்டியை அமைத்து வருகிறார். இதனால் கொதிப்பான சிட்டிங் எம்.பி., கட்சித் தலைவர் அழகிரியை நோக்கி பெட்டிஷன்களை அனுப்பி வருகிறார்’’``தமிழகத்திலேயே திருவள்ளூர்தான் ஹாட் தொகுதி போல?”`` திருவள்ளூர் தொகுதியை மையமாக வைத்து பல சம்பவங்கள் நடைபெற்று வருவது தற்செயலான செயல்தான். பா.ஜ.க.வில் இருந்து தாய்க்கட்சியான பா.ம.க.வுக்கு தாவிய மாஜி எம்.எல்.ஏ., ரவிராஜூவுக்கு தலைமை இப்போது ஒரு அசைன்மென்ட்டை கொடுத்துள்ளது.அதாவது, `பா.ஜ.கவில் இருக்கக் கூடிய வன்னியர்களை அப்படியே பா.ம.க.வுக்கு இழுத்துவந்து கட்சியை பலப்படுத்த வேண்டும்' என்பதுதான். முதற்கட்டமாக, திருவள்ளூர் பா.ஜ.க வில் இருந்த வன்னியர்களை இழுத்துவிட்டார். இப்போது, சென்னையை குறிவைத்து இறங்கியிருக்கிறார். இதைத் தெரிந்து கொண்ட பா.ஜ.க தலைமை, கட்சிப் பொறுப்புகளில் இணை, துணை பொறுப்புகளை அந்தந்த பகுதி வன்னியர்களுக்கு வழங்க ஆரம்பித்து இருக்கிறது.’’.“நெருக்கடியான நேரத்திலும் ஆளுநரைச் சீண்டியிருக்கிறாரே அமைச்சர் பொன்முடி?”``புதிய கல்விக்கொள்கை தொடர்பாக தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தியிருந்தார். இதைத்தொடர்ந்து ஜூலை 21-ம் தேதி அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார்.அண்ணா பல்கலைக் கழக பதிவாளராக (பொறுப்பு) இருந்த ஜி.ரவிக்குமார் மாற்றப்பட்டு, எம்.ஐ.டி. கல்லூரியின் முதல்வர் ஜெ.பிரகாஷ் அந்த இடத்துக்கு நியமனம் செய்யப்பட்டார். ஆளுநரின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த மாற்றத்தை துணைவேந்தர் வேல்ராஜ் மேற்கொண்டதாகத் தெரிகிறது.இந்த விவகாரம், துணைவேந்தர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பூதாகரமாக வெடித்தது. இதுகுறித்து துணைவேந்தர் வேல்ராஜ் விளக்கமும் அளித்தார். அப்போது பேசிய பொன்முடி, ‘ஒரு கல்லூரியின் முதல்வராக இருப்பவரை பொறுப்பு பதிவாளராக ஏன் நியமிக்க வேண்டும்? எதன் அடிப்படையில் இந்த நியமனத்தை செய்தீர்கள்? இனி இத்தகைய நிகழ்வுகள் நடக்கக் கூடாது. இனி அனைத்து பல்கலைக்கழகங்களும் பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்களை தனிக்குழு அமைத்து அதன்மூலம் தேர்வு செய்ய வேண்டும்'' எனக் கோபத்தை வெளிப்படுத்தினார்.``ஓஹோ'' `` அதுமட்டுமல்லாமல், `பல்கலைக்கழக பணிகளை ஆளுநரிடம் கேட்டுதான் துணைவேந்தர்கள் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. பட்டமளிப்பு விழாவுக்கான தேதியை மட்டும்தான் ஆளுநரிடம் கேட்க வேண்டும். சிறப்பு விருந்தினர் யார் என்பதை துணைவேந்தர்கள் முடிவு செய்யலாம். அதேபோல், யு.ஜி.சி. வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமில்லை. நமது மாநிலத்தில் என்ன சூழல் நிலவுகிறது. அதற்கேற்ப துணைவேந்தர்கள் செயல்பட வேண்டும்' என்றும் உத்தரவு பிறப்பித்தாராம்” எனக் கூறிவிட்டு மிச்சமிருந்த கடலையைக் கையில் அள்ளியபடி வாக்கிங் கிளம்பினார் வம்பானந்தா. - சுவாமி வம்பானந்தா