தாலிபன் ஸ்டைலில் இரண்டு கைகளும் பின்புறமாகக் கட்டப்பட்டிருக்க, அச்சத்தில் உறைந்துபோய் அலறுகிறார்கள் அந்தச் சிறுவர்கள். அதை அலட்சியம் செய்துவிட்டு, அவர்களைக் குப்புறத்தள்ளி, ஆசனவாயில் பச்சை மிளகாயைச் செருகி கதறவிடுகிறது ஒரு கும்பல்.சமூக வலைதளங்களில் பரவிய அந்த வீடியோவை, பார்க்கும்போதே இதயம் கனத்தது. அதற்கு மேல் நடந்தவைகளை பார்ப்பதற்கான மனோதிடம் நம்மிடம் இல்லை. அனைத்தும் கொடூரத்தின் உச்சம்! இந்தியாவை உலுக்கிய அந்த சம்பவம் நடந்த இடம், உத்தரபிரதேசம் என்பதை அறிந்ததும், அங்கே உள்ள சமூக ஆர்வலர்களைத் தொடர்பு கொண்டு பேசினோம்.``உத்தரபிரதேச மாநிலம், சித்தார்த் நகர் தானா பத்திரா பகுதியில் கோழிக்கறிக்கடை ஒன்று இருக்கிறது. அதன் உரிமையாளர், முகமது சவுத். கடந்த மூன்றாம் தேதி, கடையில் அவர் வியாபாரத்தை கவனித்துக்கொண்டிருந்தபோது, இரண்டு சிறுவர்கள் அங்கே வந்துள்ளனர்..கடைக்குள் நுழைந்த அவர்கள், அங்கே இருந்த கோழி ஒன்றைத் தூக்கிப் பார்த்திருக்கிறார்கள். பிறகு, அருகே இருந்த கல்லாவில் கைவிட்டுத் துழாவியிருக்கிறார்கள். அவர்கள் அப்படிச் செய்வதை, கடையில் இருந்த ஊழியர்கள் சிலர் பார்த்துவிட்டு, சத்தம்போட்டு அவர்களை விரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன சிறுவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.இந்தநிலையில், அன்றைய தினம் கடையில் கணக்கு முடித்தபோது, 2000 ரூபாய் குறைவது தெரியவந்துள்ளது. `யார் எடுத்திருப்பார்கள்?' என யோசித்தபோது, காலையில் கடைக்கு வந்த சிறுவர்களின் நினைவு வந்திருக்கிறது. இதைக் கடையின் முதலாளியிடம் ஊழியர்கள் கூறவே, அவருக்கும் அதே சந்தேகம் வலுத்திருக்கிறது. மறுநாள் ஊருக்குள் சென்று அந்த இரு சிறுவர்களையும் கடைக்கு இழுத்துக் கொண்டுவந்தார், முகமது சவுத்'' என்றவர்கள், நடந்த கொடுமைகளை விவரித்தனர்.“முதலில் சிறுவர்களை மிரட்டியும் அதட்டியும் `பணம் எங்கே?' என்று கேட்டார். அவர்கள் பயந்து அழுது, `தங்களுக்குத் தெரியாது' என்று சொல்லவே எரிச்சலான அவர், சிறுவர்களை கட்டிப்போடச் சொல்லியுள்ளார். அதன்படி சிறுவர்களின் கைகள் கட்டப்பட்டதும் அடித்து உதைத்துள்ளனர். அப்போதும் அவர்கள் மறுக்கவே, மிளகாயை சிறுவர்களின் ஆசனவாயில் தேய்த்தும் செருகியும் சித்ரவதை செய்துள்ளார். பிறகு, மஞ்சள் நிற திரவம் நிரம்பிய ஊசியை இருவருக்கும் குத்தியுள்ளார்..அதன்பின்னர், பச்சை மிளகாய்களை சிறுவர்களின் வாயில் வைத்துத் தேய்த்தும் அவர்களை தின்னச் சொல்லியும் கொடுமை செய்துள்ளனர். அவர்கள் எரிச்சலால் அலறியபோது சிறுநீரை வாயில் ஊற்றிக் குடிக்க வைத்துள்ளனர்.கடைக்காரர் முகமது சவுத் வசதி உள்ள ஆள் என்பதால், அப்பாவி மக்களால் அந்த கொடூரத்தைத் தட்டிக்கேட்கவோ, தடுக்கவோ முடியவில்லை. அவர்களில் யாரோ ஒருவர் எடுத்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரல் ஆகவே, விஷயம் காவல்துறையின் கவனத்துக்குச் சென்றுள்ளது.சம்பவம் நடந்த இடம் உத்தரபிரதேசம் என்பது தெரியவந்த பின், அந்த வீடியோவில் உள்ள நபரைத் தேடும் முயற்சி நடந்தது. ஒருவழியாக முகமது சவுத்தின் அடையாளத்தை வைத்து, அவரைக் கண்டுபிடித்த காவல்துறை, நேரடியாக அவருடைய கறிக்கடைக்குச் சென்று விசாரணை நடத்தியது. ஆரம்பத்தில், `நான் அவன் இல்லை' என மறுத்த முகமது சவுத், போலீஸ் விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார்.அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சிறுவர்களின் வீடுகளுக்குச் சென்று புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், முகமது சவுத்தைக் கைது செய்திருப்பதோடு, சம்பவத்தில் தொடர்புடைய அகீப், பப்பு மற்றும் தீபக் குப்தா ஆகியோரையும் கைது செய்துள்ளனர்’’ என்றனர்.மேலும், “பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் தினக் கூலிகள். ஏழைகள் என்பதாலேயே அவர்களை இந்த அளவுக்குத் தாக்கியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களும் இஸ்லாமியர்கள்தான். ஒருவேளை இந்துக்களாக இருந்திருந்தால், உ.பி.யில் இதைவைத்தே பெரும் கலவரம் வெடித்திருக்கும்” என்றனர் அச்சத்துடன்..கைது செய்யப்பட்டவர்கள் மீதான நடவடிக்கை குறித்து சித்தார்நகர் மாவட்ட எஸ்.பி அபிஷேக் குமார் அகர்வாலிடம் கேட்டபோது, “பாதிக்கப்பட்ட சிறுவர்களில் ஒருவருக்கு 10 வயது. இன்னொருவருக்கு 14 வயது. மைனர் சிறுவர்களிடம் விசாரணை என்ற பெயரில் இப்படி வன்செயலில் ஈடுபட்டது பெரும் தவறு. இதில் சம்பந்தப்பட்டவர்களாக முகமது சவுத் உள்ளிட்ட ஆறுபேரை கைது செய்துள்ளோம்.அவர்கள் மீது பிரிவு 34 (தீய நோக்கத்துடன் கும்பலாக செயல்படுவது), பிரிவு 270 (பிறருக்கு நோய் பரப்பும் செயலில் ஈடுபடுவது), பிரிவு 147 (கலவரத்தைத் தூண்டும் செயலில் ஈடுபடுவது), பிரிவு 342 (சட்டவிரோதமாக பிறரை அடைத்துவைப்பது), பிரிவு 307 (கொலை முயற்சி), பிரிவு 377 (இயற்கைக்கு முரணான தவறுகளைச் செய்தல்) மற்றும் போக்ஸோ பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சிறுவர்கள் உடலில் மஞ்சள் நிற திரவம் கொண்ட ஊசியைச் செலுத்தியுள்ளனர். அந்தத் திரவம், பெட்ரோல் என்று ஒரு தகவல் பரவியது. ஆனால் அது தவறு. ஏனென்றால், பெட்ரோலை செலுத்தியிருந்தால் அது சிறுவர்களின் உடல்நிலையை கடுமையாக பாதித்திருக்கும். அவர்கள் செலுத்திய ஊசியில் இருந்த திரவம் என்ன என்ற விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்” என்றார் உறுதியாக.மனித சமூகத்தில் இப்படியும் சில மனிதர்கள்! - அபிநவ்