-நந்தன் மாசிலாமணிசிரியாவைப் பற்றிய கனவுகளுடன் இருந்த பெக்கெட்டை அழைத்த அதிகாரிகள் அந்த நாட்டைப் பற்றி சொல்லத் தொடங்கினார்கள். “1919-ம் ஆண்டு. டமாஸ்கஸ் எமிர் பைசல் தலைமையிலான அரேபியப்படை, 400 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க ஓட்டோமான் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது. பிரிட்டிஷார் பாலஸ்தீனத்தையும், பிரெஞ்சுக்காரர்கள் சிரியா மற்றும் லெபனானையும் பிரித்துக்கொண்டு ஆட்சி செய்தார்கள்.”"மக்கள் இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்றுக்கொண்டார்களா? ""வேறு வழி? பிறகு 1925-27-ம் ஆண்டில் பிரெஞ்சுக்கு எதிரான போரில், பிரிட்டிஷ் படையின் துணை இல்லாமலே, ட்ரூஸ் இனத்தவர் அவர்களை வென்றார்கள். அங்கே உள்ள முக்கியமான இனக்குழுவினர் இவர்கள்தான். மிகத் திறமையாகச் செயல்படக்கூடியவர்கள். இவர்களை கவனமாகக் கையாளவேண்டும்.”.இப்படிப் பழைமையான வரலாறுகள் பலவற்றைச் சொல்லிவிட்டு, புதிய விஷயங்களுக்கு வந்தார்கள்." 2000ம் ஆண்டு ஜூன் மாதம் அதிபர் அசாத் இறந்தபோது அவருடைய இரண்டாவது மகன் பஷார் பதவி ஏற்றுக்கொண்டார். அதே ஆண்டு நவம்பர் மாதம் 600 அரசியல் கைதிகளை விடுதலை செய்தார்.’’"ஓ... பரவாயில்லையே..!""இங்கு 87 சதவிகிதம் இஸ்லாமியர்கள்; 10 சதவிகிதம் கிறிஸ்தவர்கள்; மூன்று சதவிகிதம் ட்ரூஸ் மதத்தினர் வசிக்கிறார்கள். இவர்களை இஸ்லாம் மதத்தின் ஒரு பகுதி என்றும் சொல்லலாம். ஆனால், இல்லை என்று அவர்கள் சொல்கிறார்கள். "அதிகாரிகள் சொல்லச் சொல்ல கொஞ்சம் அசுவாரஸ்யமாகவே கேட்டுக்கொண்டிருந்தான், பெக்கெட். வரலாறுகளைவிட அவனுக்கு அங்குள்ள மொழி, மக்களின் கலாசாரம், இயற்கையின் அழகு, உணவு முதல் உறவு வரை அத்தனையையும் நேரடியாகக் காண வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்பதில்தான் ஆர்வம் இருந்தது.ஆனால், எதையும் விட்டுவிடக்கூடாது என்ற கவனத்தோடு, அந்த நாட்டின் தற்போதைய அரசியல்… அதில் அமெரிக்காவின் நிலைப்பாடு தொடங்கி, சிரிய அதிபர் உபயோகிக்கும் உள்ளாடையின் பிராண்ட் முதல் அவரது ரகசிய வாழ்கை வரை அத்தனையையும் அவனுக்குச் சொன்னார்கள்.பெக்கெட்டுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் அவசியம் இருந்ததால் கவனமாகக் கேட்டுக்கொண்டான்.‘எத்தனை ஆண்டுகள், எத்தனை நபர்கள், எந்தெந்த வழிகளில் எல்லாம் இவ்வளவு தரவுகளைச் சேகரித்திருப்பார்கள்!’ என்று மனதுக்குள் பிரமித்தான்.2001ம் ஆண்டு மார்ச் மாதம். வெளிநாடுகளுக்குச் செல்லும் தனது கனவுப் பயணத்தில் முதலாவதாக சிரியாவுக்கு அமெரிக்கத் தூதுவராகச் செல்லத் தயாரானான் பெக்கெட். அதற்கான ஃப்ளைட் டிக்கெட், விசா முதலானவை அவனிடம் தரப்பட்டன. நண்பர்களுக்கு விருந்து ஒன்றைத் தந்துவிட்டு, சிரியாவுக்குப் புறப்பட்டான், பெக்கெட்.வெள்ளை மாளிகை. அமைச்சரவைக் கூட்டம் மும்முரமாகக் கூடியிருந்தது. போர்த்திறன் மற்றும் அரசியல் ஆலோசகர் பெட்ரிக், தொண்டையை லேசாக செருமிக்கொண்டு பேச ஆரம்பித்தார்."இந்தியாவில் உள்ள நம் துணைத் தூதரகத்திற்கு ஃபாசில் என்பவன் அடைக்கலம் கேட்டு வந்திருக்கிறான். இப்படி ஒருவர் நம் தூதரகத்திற்கு அடைக்கலம் கேட்டு வருவது, இது முதல்முறை அல்ல. ரஷ்யாவுடன் பனிப்போர் நடந்துகொண்டிருந்த காலகட்டம் அது. ஹங்கேரியின் கார்டினலான ஜோசப் என்பவர், 15 ஆண்டுகள் நமது அமெரிக்கத் தூதரகத்தில் தங்கி இருந்தார். நாம் அவருக்குப் பாதுகாப்பு கொடுத்தோம்.1989-ம் ஆண்டில் டியானான்மென் சதுக்க கலவர எதிர்ப்பில் முக்கிய பங்கு வகித்த இயற்பியல் அறிஞரான ஃபேங் (fang) தன் மனைவியோடு, பெய்ஜிங்கில் உள்ள நமது தூதரகத்தில் 13 மாதங்கள் தங்கி இருந்தார். பிறகு அவர்கள் நம் நாட்டிற்கு வந்துவிட்டார்கள்..இப்போது இந்த சீனன் ஃபாசில், தன் இனத்திற்கு எதிராக நடக்கும் அடக்குமுறையை எதிர்த்து விடுதலை இயக்கம் ஒன்றை ரகசியமாகத் தொடங்கி உள்ளான். சீன நாட்டின் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவன் என்று சொல்லிக்கொள்கிறான் . அவன் முன்னோர்கள் துருக்கியைச் சேர்ந்தவர்கள். அந்த காலத்தில் போர் நடக்கும் போதெல்லாம் வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று குடியேறினர்கள். பூர்வீகமான மங்கோலியாவிலிருந்துதான் துருக்கி வந்திருந்தார்கள். தனித்த அடையாளத்துடன் இருக்க முயற்சி செய்யும் இவர்கள் செயல்பாடுகளை, அங்குள்ள ஆட்சியாளர்கள் ஏற்க மறுக்கிறார்கள். அதனால் ஓயாமல் சண்டை.” " ஆட்சியாளர்கள் இஸ்லாமியருக்கு எதிராக இருக்கிறார்களா? "கேட்டார், பாதுகாப்பு அமைச்சர் . " அப்படிச் சொல்ல முடியாது. மத ரீதியாக ஏதாவது கிளர்ச்சி செய்தால்தான் சீன அரசு அதை அடக்குகிறது. மற்றபடி அவர்களுக்குத் தொந்தரவு இல்லை. ஹய் என்று ஓர் இஸ்லாமியப் பிரிவினர் இருக்கிறார்கள். சீன அரசு அவர்களுக்கு பல சலுகைகளை வழங்கி உள்ளது. அதே சமயம் கலகம், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் என்றெல்லாம் செய்தால், சீன அரசின் நடவடிக்கைகள் மிக மிக பயங்கரமாக இருக்கும். இதில் மனித உரிமை மீறலை எல்லாம் மதிக்கக்கூட மாட்டார்கள்." "அப்படியானால் இந்த ஃபாசில்? " "அமெரிக்காவிற்குப் படிக்க வந்தவன். அங்குள்ள இன விடுதலைப் போராட்டக் குழுக்களுக்கு ரகசிய அழைப்பு விடுத்துள்ளான். உண்மையில் அவன் இங்கே வந்தது படிப்பதற்கு மட்டும் அல்ல, சீன அரசுக்கு எதிராக அமெரிக்க நடுநிலையாளர்களின் கருத்துகளைத் திரட்டி, அவர்களின் ஆதரவோடு, இனவிடுதலை பெறவேண்டும் என்பதற்காகதான். தனிநாடு கேட்கும் எண்ணம் எல்லாம் அவனுக்கு இல்லை. அப்படிக் கேட்டால் உயிருடன் இருக்க மாட்டோம் என்றும் அவனுக்குத் தெரியும்." "பிறகு? "."கருத்தரங்குப் பேச்சு, பத்திரிகை பேட்டி, ரேடியோ, தொலைக்காட்சி என வேகமாக வளர்ந்து, நமது கவன வளையத்தில் வந்தான். அதையடுத்து நம் உளவுத்துறையினர், ஃபாசிலின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் கவனிக்கத் தொடங்கினார்கள். எந்த மாதிரியான போராட்டம் நடத்தத் தயாராகிறான்? வெறும் கருத்து உருவாக்கம் மட்டுமா அல்லது ஆயுத தளவாடங்கள் வாங்குவதற்கு ஏதாவது நிதி திரட்டி வருகிறார்களா என்றெல்லாம் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தார்கள். சரியாகச் சொன்னால், அவனை நாம் மட்டும் கண்காணிக்கவில்லை. நம்மைவிட கவனமாக... குறிப்பாக அவன் விஷயத்தில் நம்முடைய நடவடிக்கைகளையும் சேர்த்தே சீனா கண்காணிக்கிறது! ” அவர் சற்று நிறுத்த, திடுக்கிடலின் அடையாளமாக கூட்டத்தில் பேரமைதி நிலவியது. சாலி கிராமத்தில் உள்ள வீடியோ எடிட்டிங் அலுவலகத்தில் பென் டிரைவைக் கொடுத்துவிட்டு வந்ததில் இருந்து இரண்டு நாட்கள் பழனிக்கு அந்த நினைவிலேயே நகர்ந்தது. வழக்கமாக காவல் கூண்டில் நிற்கும்போது கடுப்படிக்கும் விஷயங்கள்கூட இப்போது கவனத்தில் வராமலே போயின. மூன்றாவது நாள் காலையிலேயே பென் டிரைவை வாங்கிக் கொள்ளச்சொல்லி போன் வரும் என்று எதிர்பார்த்தான். மதியம் வரை காத்திருந்தும் கடன் அட்டை, பர்சனல் லோன் இத்யாதி அழைப்புகளைத் தவிர வேறு எதுவும் வராமல் போகவே ‘சே... நம்ப நம்பரை அவங்க வாங்கினப்பவே அவங்க நம்பரைக் கேட்டுவாங்கியிருக்கணும்...’ என்று, தன்னையே நொந்துகொண்டான். நேரிலேயே சென்று கேட்டுவிடலாம் எனப் புறப்பட்டான். வீடியோ எடிட்டிங் அலுவலகம் சென்று, அழைப்பு மணியின் சுவிட்சை அழுத்தினான். மின் குயிலாய்க் கத்திய அதன் குரலோசை அடங்குவதற்குள், படீரென்று கதவு திறக்க, உள்ளே இருந்து எட்டிப் பார்த்தான், ஒருவன். அவனைப் பார்த்ததும் பழனியின் முகத்தில் அதிர்ச்சி பரவியது..! (பார்வை விரியும்)