- நந்தன் மாசிலாமணி‘ஐரோப்பிய ஒன்றியம் யூரோ கரன்ஸியை அறிமுகப்படுத்துகிறது’ என்ற தகவல் வந்ததுமே உலகம் முழுக்க ஒருவித பரபரப்பு தொற்றிக்கொண்டது என்றால் அமெரிக்கா சற்றுக் கூடுதலாகவே தடதடத்தது..அதற்குக் காரணம், அன்றுவரை உலகில் எல்லா நாடுகளும் தங்கள் வர்த்தகத்திற்குப் பொதுவான நாணயமாக அமெரிக்க டாலரையே பயன்படுத்தின. ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா என்று எந்தக் கண்டத்தை எடுத்துக் கொண்டாலும் அந்தக் கண்டத்தில் உள்ள நாடு மற்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்ய அமெரிக்க டாலரைத்தான் பயன்படுத்தினார்கள். இதில் இப்போது மாற்றம் வரப்போகிறது. ஐரோப்பிய நாடுகள் இனி தங்களுக்குள்ளான வர்த்தகத்தை யூரோ மூலம் செய்வார்கள். அதோடு மேலும் சில பல நாடுகளும் யூரோவைப் பொதுநாணயமாக ஏற்று, வர்த்தகம் நடத்தலாம். எப்படி இருந்தாலும் இதுவரை மாற்றம் இல்லாமல் பொது கரன்ஸி என்று அமெரிக்க டாலர் மட்டுமே இருந்தது மாறி, இப்போது யூரோவும் பொது கரென்ஸியாகப் போகிறது. இதனால், அமெரிக்கப் பொருளாதாரத்தில் பாதிப்பு வரவாய்ப்பு உண்டா, டாலரின் மதிப்புக்கு என்ன பாதிப்பு வரும் என்றெல்லாம் ஆலோசிக்கத் தொடங்கினார்கள்..குறிப்பாக, அமெரிக்காவில் என்ன பாதிப்பு வரும், உலக அளவில் என்ன பாதிப்பு ஏற்படும் என்று தனித்தனியே அலசத்தொடங்கினார்கள். அமெரிக்காவில் பொருளாதார நிபுணர்களோடு அதிகாரிகள் இணைந்து ஆலோசனை நடத்தினார்கள். எல்லா நாடுகளிலும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைத் தொடர்புகொண்டு, ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் எந்தெந்த நாடுகள் அமெரிக்க டாலரை பயன்படுத்துவார்கள், எந்தெந்த நாடுகள் யூரோவை பயன்படுத்துவார்கள் என்ற தரவுகளை அனுப்பச் சொன்னார்கள். அதோடு ஏற்றுமதி, இறக்குமதி எல்லாம் உலகம் முழுக்க இதுவரை டாலரில் நடந்ததுபோலவே தொடரவேண்டுமானால் என்ன செய்வது? மாறத் தயாராக உள்ள நாடுகள், மாறாமல் இருக்க வழி உண்டா? ஏன் மாற நினைக்கிறார்கள்? என்றெல்லாம் முழுமையாக விவரங்கள் சேகரித்து அறிக்கை அனுப்பச் சொன்னார்கள். அவசர அவசரமாக அதேசமயம் எந்தத் தவறும் நேர்ந்துவிடாதபடி கவனமாக ஒவ்வொரு தூதரகமும் செய்திகளை சேகரித்தார்கள். காரண காரியங்களை அலசி, ஆராய்ந்து விரிவான கோப்புகளைத் தயார் செய்து, அமெரிக்காவில் உள்ள தலைமைத் தூதரகத்திற்கு அனுப்பினார்கள். அங்கே இருந்த அதிகாரிகள், ஒவ்வொரு கோப்பையும் முழுமையாகப் படித்து, அதன் அடிப்படையில் தரவுகள் சேகரித்து, முழுமையான பெரிய கோப்பாகத் தயார் செய்து, அதிபர் அலுவலகத்துக்கு அனுப்பிவைத்தார்கள்..அடுத்த வாரம் அமெரிக்கப் பத்திரிகைகளில் ஓர் அறிக்கை வந்தது. ஈரான், ஈராக், வட கொரியா ஆகிய நாடுகள் தீமையின் அச்சாணி என்றும் பேரழிவுகளை உண்டு செய்யும் ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள் என்றும் அந்த அறிக்கை சொன்னது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சிரியா கூட்டணி அமைக்கும் என்று அறிக்கையை உளவுத்துறையினர் அனுப்பி வைத்தார்கள். அதுபோலவே ஈரான், சிரியா, லெபனான் நாட்டின் ஹெஸ்பொல்லாஹ் என்ற அரசியல் மற்றும் தீவிரவாதக் கட்சி அரசியல் கூட்டணியை ஈரான் அமைக்கும் என்றும் கூறப்பட்டது. எதிர்பார்த்ததுபோல 15 நாட்களில் அந்த அறிவிப்பு வந்தது. வெள்ளைமாளிகையில் இருந்து அமெரிக்க அதிபர் வேறு ஒரு நகரத்திற்குச் செல்லும் போது மெரைன் 1 என்ற ஹெலிகாப்டர் மூலம் அண்ட்ரூஸ் விமானப்படைத் தளத்திற்குச் சென்று அங்கிருந்து ஏர் ஃபோர்ஸ் 1 என்ற விமானம் மூலம் செல்வார். ஐந்து ஹெலிகாப்டர்கள் ஒரேமாதிரி இருக்கும்; அவற்றில் எதில் அமெரிக்க அதிபர் பயணம் செய்கிறார் என்ற விவரம் வெளியில் யாருக்கும் தெரியாது. அவ்வளவு ரகசியமாக இருக்கும். ஹெலிகாப்டரும் சரி… விமானமும் சரி… எந்த வித தாக்குதலுக்கும் ஆளாக முடியாத வகையில் கவசம்போலத் தயாரித்திருந்தார்கள். அதில் பறக்கும் போதே உலகம் முழுவதும் பேச முடியும். அதுவும், யாரும் ஒட்டுக் கேட்க முடியாத அளவுக்கு பாதுகாப்புடன் பேசமுடியும். அதோடு, தேசிய கட்டளை ஆணையத்தில் உள்ள அணுசக்தி நிலையத்துடன் அதிபர் எப்போதும் தொடர்பில் இருக்கிற மாதிரியான வசதி உள்ளது..அன்று பத்திரிகையாளர்களை ஹெலிகாப்டர் அருகே சந்தித்தார் அதிபர். அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு ஹெலிகாப்டரில் ஏறினார். அண்ட்ரூஸ் விமானப்படைத் தளத்திற்குச் சென்றார். அங்கிருந்து டெக்சாஸ் மாகாணத்திற்குச் செல்லும் வழியில் மத்திய கருவூல வங்கி கவர்னருடன் பேசினார். தற்போது யூரோவினால் எழுந்துள்ள பொருளாதாரப் பிரச்னையை சரிசெய்ய, வட்டிவிகிதக் கொள்கையில் மாற்றம் செய்வது போன்றவற்றைச் செய்தார். தீவிர ஆலோசனையில் அவர்கள் ஈடுபட்டிருந்த சமயத்தில், சற்றும் எதிர்பாராத வகையில் வந்தது, மிக முக்கியமானதொரு தகவல். ‘சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்திற்கு, ரேடியோ சிக்னல்கள் மூலம் ஏதேதோ தகவல்கள் வருகின்றன. அவற்றை இடைமறித்து, என்ன செய்தி, யார் அனுப்புகிறார்கள்? எனத் தெரிந்துகொள்ளச் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை’ விஷயத்தைப் படித்ததும், பாதுகாப்பு அமைச்சரை அழைத்தார், அதிபர் “இது உங்கள் கவனத்திற்கு வந்ததா? " கேட்டார். "ஆமாம் வந்தது. உடனே விசாரிக்கத் தொடங்கிவிட்டேன். சிக்னல் ஒரே ஒருமுறைதான் வந்தது என்கிறார்கள். தற்செயலாக வந்தது எனவும் சொன்னார்கள். ஆனால், இதனாலெல்லாம் இந்த விஷயத்தை அலட்சியப்படுத்த முடியாது. உள்ளே இருக்கும் ஃபாசிலுக்கு யாராவது சீக்ரெட் தகவல் அனுப்புகிறார்களா? என்பதையும் கண்காணிக்கச் சொல்லிவிட்டேன்!’’ சொன்னார், பாதுகாப்பு அதிகாரி.. " வெளியிலிருந்து வருகிறதா என்பதை மட்டுமல்ல, உள்ளே இருந்து அவன் பதிலுக்கு ஏதாவது சிக்னல் அனுப்புகிறானா என்பதையும் கவனமாகப் பார்க்கச் சொல்லுங்கள்!” அதிபரின் குரலில் கண்டிப்பு தெரிந்தது. " எஸ் சார். முழுமையாகக் கண்காணித்துக்கொண்டிருக்கிறோம். அதோடு, சென்னையில் உள்ள சில முக்கியமான இடங்களில் இருந்து சிக்னல் வருகிறதா என்றும் கண்காணிக்கிறோம். துணைத் தூதரகத்தில் ஜாமர் பொருத்தி உள்ளோம். எந்தச் செய்தியும் வெளியே போக முடியாது. இருந்தாலும் இன்று அவனை சோதனை செய்யச் சொல்லி இருக்கிறேன். எந்த ஒரு சிறு அலட்சியமும் கூடாது என்று எச்சரித்திருக்கிறேன் " பாதுகாப்பு அதிகாரியின் குரலில் உறுதியோடு, பணிவும் பிரதிபலித்தது. " அவனுக்கு செய்யச் சொன்ன, மருத்துவப் பரிசோதனை என்ன ஆயிற்று? " கேட்டார், அதிபர்..அமெரிக்காவின் முன்னணி மூலதன நிறுவனம், பிளாக் ராக் நிதி ஆலோசனை நிறுவனம். அதைப் போலவே நீல ராக் நிதி நிறுவனம். பங்குச் சந்தையில் மிகவும் முக்கியமான முதலீட்டாளர்கள். பத்து டிரில்லியன் டாலர் அளவுக்கு நிர்வாகம் செய்கிறார்கள். உலகத்தில் உள்ள ஒவ்வொரு நிறுவனத்தின் செயல்பாடுகளையும் ஆராய்வது இந்த நிதி நிறுவனங்களின் வேலை. எந்தத் தொழில் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு சிறப்பான வளர்ச்சியில் இருக்கும்? அந்தத் தொழிலில் எந்த நிறுவனம் நன்றாகச் செயல்படுகிறது? அதன் நிர்வாகிகள் யார் யார்? அவர்களின் வயது, நிர்வாகப் பின்புலம், அவர்களின் எத்தகைய திட்டத்தால் எந்தெந்தத் துறைகள் பாதிப்பு அடையும் அல்லது வளர்ச்சி அடையும்? அந்தந்த நாட்டு அரசின் அறிவிப்பால் எந்தத் தொழில் வளரும் அல்லது நசியும் போன்ற தகவல்களை இவர்கள் சேகரிப்பார்கள். அதற்காக, இந்த நிதி ஆலோசனை நிறுவனத்தில் பதினைந்து ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள். இந்த நிதி நிறுவனங்களின் ஆலோசனையைக் கேட்டு, அவர்களின் கணிப்பு ஏற்றபடியே முதலீடுகளைச் செய்வார்கள். அவர்களுக்கு என்று பிரத்யேகமான அதிவேக கணினியும் உண்டு. உலகில் இந்த வகைக் கணிகள் மொத்தம் மூன்றுதான் உள்ளன. அவற்றில் ஒன்று இவர்களிடம் இருப்பது. அதோடு, பல்வேறு விகிதங்களைக் கணக்குப் போட்டு துல்லியமாகச் சொல்லும் மென்பொருளும் உண்டு. அதை நிர்வகிக்க இரண்டாயிரம் பேர் இருக்கின்றனர். இது போன்று வான்கார்ட் குரூப், கேப்பிடல் ரிசர்ச் மேனேஜ்மென்ட் கம்பெனி, பிராங்கிளின் அட்வைஸர்ஸ் என்று மிகப் பிரபலமான 20 நிதி முதலீடு மற்றும் ஆலோசனை நிறுவனங்கள் அமெரிக்காவில் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் கையாளும் நிதியை கணக்கிட்டால் நூறு டிரில்லியன் டாலரை தாண்டும். இது நூற்றியெண்பது நாடுகள் ஓராண்டு மொத்தமாக எவ்வளவு வரவு செலவு செய்வார்களோ அதை விட கூடுதலாக இவர்கள் வரவு செலவு செய்கிறார்கள்..டிரில்லியன் டாலர்களில் புரளும் இந்த நிறுவனங்களின் முக்கியப் பணி என்ன தெரியுமா? (பார்வை விரியும்)