மகுடம் சூட்டாத மகாராஜாவாக வலம் வந்து கொண்டிருந்த செஞ்சி மஸ்தானின் விழுப்புரம் கோட்டையில் ஏக விரிசல்கள். குடும்ப உறுப்பினர்களின் பதவிகள் அடுத்தடுத்து பறிக்கப்படுவதும் ஃபைனலாக மஸ்தானின் மா.செ பதவிக்கும் சிக்கல் என்பதுதான் ஹாட் டாபிக்.என்ன நடக்கிறது விழுப்புரத்தில்?தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “1976 முதலே கட்சியில் இருக்கும் செஞ்சி மஸ்தான் பொன்முடியைவிட சீனியர் என்பதால், நாற்பது ஆண்டுகளாக செஞ்சி பேரூராட்சியைத் தன்னுடைய கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறார். 2014ம் ஆண்டு மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்தபோது விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக செஞ்சி மஸ்தானை நியமித்தனர்.அன்று முதலே, அவரின் ஆட்டம் அதிரடியாக மாறியது. இஸ்லாமியராக இருந்தாலும் இந்து கோவில்களுக்குச் செல்வது, விபூதி, குங்குமம் இட்டுக்கொள்வது என்று தன்னை இந்துவாகவே அடையாளப்படுத்திக் கொள்வார். கட்சியினர் வீட்டின் சமையலறைவரை சென்று பழகுவார்..செஞ்சி, திண்டிவனம், மயிலம் என்று மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் கட்சியை வளர்த்தார். இந்தநிலையில், ம.தி.மு.க. பொருளாளரான டாக்டர் மாசிலாமணி தி.மு.க.வுக்குள் வந்தார். 2016-ம் ஆண்டு மயிலம் தொகுதியில் அவர் வெற்றி பெற்றதையடுத்து, அவரை மாவட்ட செயலாளராக கட்சித் தலைமை நியமிக்கலாம் என்ற பேச்சு அடிபட்டது.அடுத்து, பா.ம.க.வில் இருந்து தி.மு.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. செந்தமிழ்ச் செல்வன் எனப் பலரும் செஞ்சியைக் குறிவைத்தனர். ஆனாலும், மாவட்ட செயலாளரான மஸ்தான், கட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். 2016-தேர்தலில் செஞ்சி, திண்டிவனம், மயிலம் ஆகிய மூன்று தொகுதிகளையும் கைப்பற்றியவர், 2021 தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் தான் மட்டுமே வெற்றிபெற்றார்.தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, `மயிலம் தொகுதியில் டாக்டர் மாசிலாமணி வெற்றிபெற்றால் அமைச்சர் பதவி அவருக்குப் போய்விடும்' என்பதால், மஸ்தானே அவரது தோல்விக்கு வழிவகுத்ததாக அறிவாலயத்தில் முறையிட்டார், மாசிலாமணி. இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை..அதேநேரம், கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே என்று கூறப்பட்ட பின் இரண்டு பதவிகளை வைத்திருப்பவர்கள் எல்லாம் ஒரு பதவியை ஒப்படைத்து வர, மஸ்தானோ பலருக்கும் இரண்டு பதவிகளை வாரி வழங்கியிருக்கிறார். செஞ்சி ஒன்றிய செயலாளரான விஜயகுமார் ஒன்றிய சேர்மனாகவும் அரசு பதவி வகித்து வருகிறார்.மேல்மலையனூர் ஒ.செ.வான நெடுஞ்செழியனை தலைமை செயற்குழு உறுப்பினராக நியமித்திருக்கிறார். நெடுஞ்செழியனின் மனைவி கண்மணிக்கு ஒன்றிய சேர்மன் பதவியை அளித்துள்ளார். இதைவிடக்கொடுமை, மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமாருக்கு மரக்காணம் நகர செயலாளர் பதவியை கொடுத்திருக்கிறார். இப்படி ஒரே நபருக்கு இரண்டு மூன்று பதவிகளை வாரிவழங்கி கட்சிக்காக உழைத்தவர்களையெல்லாம் கைவிட்டுவிட்டார்" எனக் கொதித்தவர்கள், அடுத்த நடந்த அதிரடிகளை விவரித்தனர்.``செஞ்சி பேரூர் கழக செயலாளராக இருந்த மஸ்தானின் தம்பி காஜா நஜீரை நீக்கிவிட்டு அப்பொறுப்புக்கு செஞ்சி 3வது வார்டு கவுன்சிலரான கார்த்திக்கை நியமித்திருக்கிறார், பொதுச் செயலாளர் துரைமுருகன். மஸ்தானின் மகன் மொக்தியார், ஐ.டி.விங்கின் மாவட்ட அமைப்பாளராக இருக்கிறார். 2022-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் செஞ்சி பேரூராட்சி தலைவராகவும் இருக்கிறார்..அடுத்து, விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்டத் துணை அமைப்பாளராக உள்ள மஸ்தானின் மருமகன் ரிஸ்வான், நிழல் அமைச்சர் போலவே செயல்பட்டு வருவதை மஸ்தானும் கண்டுகொள்வதில்லை. இவர்கள் தொடர்பான புகார்கள் அனைத்தும் உதயநிதியின் கவனத்துக்குச் சென்றதையடுத்து, அமைச்சரின் தம்பி, மகன், மருமகன் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டுவிட்டன” என்றனர்.இதையடுத்து, நம்மிடம் பேசிய விழுப்புரம் மாவட்ட தி.மு.க பிரமுகர் ஒருவர், `` விழுப்புரம் வடக்கு மா.செ பொறுப்பில் இருந்து மஸ்தான் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக வேறொருவர் நியமிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. இந்தப் போட்டியில் டாக்டர் மாசிலாமணி, செஞ்சி சிவா, மாநில விவசாய அணியின் துணை அமைப்பாளர் செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் சேகர் உள்பட பலரின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. இந்தச் சூழலை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் வேலைகளில் அமைச்சர் பொன்முடி ஆர்வம் காட்டி வருகிறார்" என்றார்..இக்குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தானிடம் விளக்கம் கேட்க தொடர்பு கொண்டோம். அவரிடம் இருந்து பதில் வரவில்லை. அவரின் மகன் மொக்தியாரும் இதுகுறித்துப் பேசத் தயாராக இல்லை.அதேநேரம், நம்மிடம் பேசிய மஸ்தானின் ஆதரவாளர்கள், ``அமைச்சர் மஸ்தானை சுற்றி சிலர் சதிவேலை செய்கிறார்கள். அனைவரையும் அரவணைத்துச் செல்வதுதான் அவரின் இயல்பு. யாருக்குப் பதவிகள் கொடுத்தால் கட்சி வளரும் என்று தெரிந்து அரசியல் செய்து வருகிறார். சொந்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்குக்கூட அவர் எதையும் செய்ததில்லை. இன்றைக்கு குறை கூறுகிறவர்கள் அனைவருமே அவரால் பலன் பெற்றவர்கள்தான். அரசியலில் எத்தனையோ ஏற்ற இறக்கங்களைப் பார்த்தவர். தற்போது நடக்கும் சம்பவங்களும் அவர் மேலும் உழைக்கவே வழி செய்யும்" என்கின்றனர்.பார்ப்போம்! - பி.கோவிந்தராஜு