`வாரிசுகளுக்கே பதவிகள்... உழைச்சவங்களுக்கு ஒரு மரியாதையும் இல்லை' எனக் குமுறிக்கொந்தளிக்கின்றனர், சேலம் மாவட்ட உடன்பிறப்புகள். ஒருவருக்கே இரு பதவிகள் வழங்கப்பட்ட கோபத்தை அறிவாலயத்தை நோக்கி அவர்கள் திருப்புவதுதான், லேட்டஸ்ட் நிலவரம் “சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் எம்.எல்.ஏ.வாகவும் இருப்பவர் வக்கீல் ராஜேந்திரன். ஓமலூரைச் சேர்ந்த அருண் பிரசன்னா என்பவர் மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருக்கும்நிலையில், தற்போது மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பாளராகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவரைத் தவிர வேறு ஆளே இல்லையா? ஒரே நபருக்கு எத்தனை பதவிதான் கொடுப்பார்கள்?” எனக் கொந்தளிக்கிறார், சேலம் மாவட்ட சீனியர் ஒருவர். தொடர்ந்து பேசியவர், ``வக்கீல் ராஜேந்திரன் சொல்ற வேலையை கேட்டுகிட்டு நெருக்கமாக இருந்தவர்தான், அருண் பிரசன்னா. இவர், தனக்குப் போட்டியா வந்துடுவாரோன்னு ராஜேந்திரனுக்கு பயம். அதனால, தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அவரை ஒதுக்கிட்டாரு. அருணோ தனக்கிருந்த மேலிடத் தொடர்புகள் மூலமா மத்திய மாவட்ட இளைஞர் அணி பதவியை வாங்கிட்டாரு. ராஜேந்திரன் பரிந்துரைத்த நபருக்கு கல்தா கொடுக்கப்பட்டதால், கடுப்பில் இருந்தவர் அருண் பிரசன்னா பெயரையே சுற்றுச்சூழல் அணிக்கும் பரிந்துரை செய்திருக்கார். மேலிடமும் அவர் கொடுத்த லிஸ்ட்டை அப்படியே வெளியிட்டது. இதுமட்டுமல்ல, மாவட்டத்தில் பல நிர்வாகிகளின் குடும்பப் பிடியில்தான் பதவிகள் சிக்கிகிட்டு இருக்கு” என வேதனைப்பட்டார்..அடுத்து, நம்மிடம் பேசிய மத்திய மாவட்ட நிர்வாகி ஒருவர்,``காடையம்பட்டி கிழக்கு ஒ.செ.வின் அண்ணன் மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளராகவும் காடையாம்பட்டி மேற்கு ஒ.செ.வின் மருமகன் பொறியாளர் அணியின் துணை அமைப்பாளராகவும் உள்ளனர். ஓமலூர் தெற்கு ஒ.செ.வின் மகன் பொறியாளர் அணியின் துணை அமைப்பாளராக இருக்கிறார். தாரமங்கலம் கிழக்கு ஒ.செ.வின் மகன் மாணவர் அணி துணை அமைப்பாளர், மாநகர துணைச் செயலாளரா இருக்கிற ஒருவரின் தம்பிதான் பகுதிச் செயலாளர், மாநில செயற்குழு உறுப்பினரின் மகன் டிவிஷன் செயலாளர், ஓமலூர் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளராய் இருக்கும் பெண்மணி, மாவட்ட சுற்றுச்சூழல் அணியிலும் துணை அமைப்பாளர். கட்சிக்கு உழைச்சவங்களுக்கு பதவி தரலை. கட்சியைப் பத்தி தெரியாதவங்க, ஒரு கூட்டத்துக்குக்கூட வராதவங்களுக்கு வாரிசு அடிப்படையில் பதவி போட்டிருக்காரு ராஜேந்திரன். உதயநிதி பரிந்துரையில அருண் பிரசன்னாவுக்கு இளைஞர் அணி பதவி போட்டிருக்காங்க. அவருக்கு சுற்றுச்சூழல் அணியில பதவி போட்டது எப்படின்னு தொண்டர்கள் குழப்பமடைய மாட்டாங்களா?’’ என்றார், விரிவாக. அருண் பிரசன்னாவிடம் இதுகுறித்துக் கேட்டபோது, ‘‘எதை பத்தியும் உங்களிடம் பேச விரும்பவில்லை" என்று முடித்துக்கொண்டார். அடுத்து, வக்கீல் ராஜேந்திரனின் விளக்கத்தைக் கேட்க பலமுறை தொடர்புகொண்டும் பதில் இல்லை. அவரின் வாட்ஸ்ஆப்பிலும் எம்.எல்.ஏ.வின் அதிகாரபூர்வ மின்னஞ்சலுக்கும் கேள்விகளை அனுப்பினோம். பதில் வரவில்லை. பதவி சர்ச்சைக்கே பதில் இல்லையென்றால், தொகுதி மக்களின் நிலை? - கே.பழனிவேல்