-அரியன் பாபு `மயிலிறகாக இருந்தாலும் அளவு மிஞ்சினால் அச்சு முறியும்' என்பது குறள். மாணவர்கள் மீது திணிக்கப்படும் அடுத்தடுத்த தேர்வுகளும் இதே ரகம்தான். அதில் லேட்டஸ்ட் வரவு, ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வு என்ற அறிவிப்பு.“மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள், தங்களுக்கென தனிப் பாடத்திட்டத்தை உருவாக்கி வருகின்றன. அதேநேரம், தேசிய கல்விக்கொள்கையில் புதுப்புது மாற்றங்களை மத்திய அரசு செய்துவருகிறது..அதன்படி, ‘11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும்; அவற்றில், எந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், 11,12-ம் வகுப்பு மாணவர்கள் இரண்டு மொழிப் பாடங்களைக் கட்டாயம் படிக்க வேண்டும். அதில் ஒன்று, இந்தி மொழியாக இருக்கவேண்டும்’ என மத்திய அரசு அறிவித்துள்ளது" என விவரித்த மூத்த கல்வியாளர் ஒருவர்,``ஏற்கெனவே 1 முதல் 12-ம் வகுப்பு வரை ஒவ்வோர் ஆண்டும் மாதத்தேர்வுகள், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு இறுதித்தேர்வு என ஏகப்பட்ட தேர்வுகளை மாணவர்கள் எழுதி வருகின்றனர். இவற்றுடன் தகுதியை அறியும் சில தேர்வுகளும் நடத்தப்படுகிறது. ஏற்கெனவே, படிப்புச்சுமை அதிகரித்துள்ள நிலையில் இரண்டு பொதுத்தேர்வுகள் என்பது மனஅழுத்தத்தை அதிகப்படுத்தும்..தவிர, முந்தைய வகுப்புகளில் இந்தியைப் படித்திருந்தால்தான், 11 மற்றும் 12 வகுப்புகளில் இந்தித் தேர்வை மாணவர்களால் எதிர்கொள்ள முடியும். புதிய கல்விக் கொள்கையில் இந்தியைக் கட்டாயமாக்கும் வகையில் விதிகள் உள்ளன. இதனால் தாய்மொழியில் படிக்கும் மாணவர்களின் நிலை கேள்விகுறியாகிவிடும்.ஏற்கெனவே, பொதுத்தேர்வு முடிவுகளால் தவறான முடிவை எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். இதில் ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வு என்றால், தேவையற்ற சிக்கல்கள்தான் ஏற்படும்" என்றார்.இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசனோ, “ஏழை எளிய மக்களின் குழந்தைகள், தேர்வு முறையால் அச்சப்பட்டு தற்கொலை செய்துகொள்கின்றனர். `இந்தியை எதிர்ப்பின்றி ஏற்க வேண்டும்' என்ற அமித் ஷாவின் பேச்சுக்கு செயல்வடிவம் தரும் முயற்சி இது” எனக் கொதித்தார்.பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் கேட்டபோது, ``நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சமமான கற்றல் வாய்ப்பை உருவாக்கவேண்டும். தேசிய கல்விக்கொள்கையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதில் இரண்டு பொதுத்தேர்வுகள் என்பது தேவையே இல்லாத ஆணிகள்” என்றார்.கல்வியாளர்களின் குமுறல்களுக்கு பா.ஜ.க. மாநில செயலாளர் பிரமிளா சம்பத்திடம் விளக்கம் கேட்டோம். “கல்வித்தரத்தை சர்வதேச அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையிலேயே புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் எதிர்க்கிறார்கள். 11, 12-ம் வகுப்பில் முதலில் எழுதும் தேர்வில் தோல்வி அடைந்தால், இரண்டாவது தேர்வை மற்றொரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். சிலரின் எதிர்ப்புகளையெல்லாம் கண்டுகொள்ள வேண்டிய அவசியம் இல்லை" என்றார்.மாணவர்களின் மனநலனும் முக்கியம்தானே