ராஜீவ்காந்தி கொல்லப்பட்டு 32 ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் நினைவிடத்தில் தணுவுக்கு மாஜி புலிகள் அஞ்சலி செலுத்தியதாக வெளியான தகவலால் அதிர்ச்சியில் உறைந்துள்ளது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி. ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட இடத்தில் நினைவிடம் ஒன்று உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மே 21ம் தேதி காங்கிரஸ் கட்சியினர் மலரஞ்சலி செலுத்துவது வழக்கம். இந்தநிலையில், கடந்த மே மாதம் அங்கே மாஜி புலிகள் சிலர் வந்து தணுவுக்கு வீரவணக்கம் செலுத்தியதாக சில நாளிதழ்களில் செய்தி வெளியானது. இதன்மூலம், நாட்டின் தேசப் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிகின்றன. ராஜீவ் நினைவிடப் பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ முருகானந்தத்திடம் பேசியபோது, “புலிகள் அமைப்பில் இருந்தவர்கள், ராஜீவ் நினைவிடத்துக்கு வந்து இப்படியொரு காரியத்தைச் செய்திருக்கிறார்கள் என்றால் அது தமிழக சட்டம் ஒழுங்குக்கு சவால்விடக்கூடிய ஒன்று. இதுகுறித்து, போலீஸில் புகார் செய்யப்படும்" என்றார். ராஜீவ் கொலையின்போது, பாதுகாப்பு பணியில் இருந்து படுகாயம் அடைந்த ஏ.டி.எஸ்.பி அனுசூயா, “கள்ளத்தோணியில் இலங்கையிலிருந்து தமிழகம் வருவோர் புலிகள் இயக்கத்தை மீள் உருவாக்கம் செய்ய முயற்சிக்கிறார்கள் என்ற செய்தி வந்துகொண்டிருக்கிறது. அந்தவரிசையில், இப்படியொரு நிகழ்வு நடைபெற்றிருப்பது, ஆபத்து இருப்பதையே காட்டுகிறது” என்கிறார்..ஈழத்தில் மாஜி புலிகள் உறுப்பினர்களாக உள்ள ஜனநாயக போராளிகள் கட்சி ஒன்று இயங்கி வருகிறது. இதன் தேசிய அமைப்பாளரான துளசி துவா அமரன் கடந்த வாரம் தனது முகநூலில் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில், ‘ஸ்ரீபெரும்புதூரில் உயிர்நீத்த அனைவருக்கும் 32 ஆண்டுகளுக்குப் பின்னர் போராளிகளால் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது’ என்று குறிப்பிட்டு, சில படங்களையும் பகிர்ந்திருக்கிறார். `இதுதான் சர்ச்சையின் தொடக்கப்புள்ளி' எனத் தெரியவரவே அவரிடமே கேட்டோம். “இந்திய தேசிய பாதுகாப்பும் ஈழத்தமிழர் நலனும் என்ற தலைப்பில் மும்பையில் மூன்றாவது கூட்டம் நடந்தது. அதில் கலந்துகொள்ள ஜனநாயக போராளிகள் கட்சி சார்பில் நான், கோபால், சுரேஷ்குமார் ஆகியோர் மும்பை சென்றோம். கடந்த மே 18 முதல் 20ம் தேதி வரையில் கூட்டம் நடைபெற்றது. மீண்டும் இலங்கை செல்லும் முன்னர், ஸ்ரீபெரும்புதூர் சென்று ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினோம். இதுதொடர்பான புகைப்படத்தையே பதிவிட்டு எழுதியிருந்தேன். இதை யாரோ சில விஷமிகள் திட்டமிட்டு, `நாங்கள் தணுவுக்கு அஞ்சலி செலுத்தினோம், இது இந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்' என்று ஊடகங்களில் செய்தியை வரவைத்துவிட்டனர். இந்திய அரசு, ஈழத்தமிழர்கள் மீது அதீத அக்கறையைக் காட்டி வருகிறது. இந்தியாவின் பெருந்தன்மையை வரவேற்கவே அஞ்சலி செலுத்தினோம்" என்றார். - அ.துரைசாமி