சென்னையின் முக்கியமான திருச்சபையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தற்கொலை முயற்சியில் இறங்கிய வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது. அதுகுறித்து விசாரிக்கத் தொடங்கினால், கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக குபுகுபுவென குற்றச்சாட்டுகள்.சென்னை வேளச்சேரியை தலைமையிடமாகக் கொண்டு இயங்குவது அட்வென்ட் கிறிஸ்டியன் கான்ஃபரன்ஸ் ஆஃப் இந்தியா என்கிற அமைப்பு. இதன் திருவான்மியூர் கிளை சபையில் ஏப்ரல் 9ம் தேதி கொண்டாடப்பட்ட ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று இளம்பெண் மெர்லின் மோனிஷா, ‘பாஸ்டர் என்னை ரொம்ப அவமானப்படுத்திட்டாரு. என்னோட தற்கொலைக்கு காரணம் பாஸ்டர்கள் மகிமைதாஸ், ஆசீர்வாதம், மூப்பர் டைட்டஸ்’ என ஆடியோ வெளியிட்டு பெரும் சலசலப்பை ஏற்படுத்தினார். மெர்லின் மோனிஷாவை தொடர்புகொண்டோம். ’’தற்கொலை முயற்சிக்காக அவ ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி ரெண்டு நாள்தான் ஆகுது. மன உளைச்சலில் இருக்கா. அவளால பேசமுடியாது’ என்ற அவரின் அம்மாவிடம் அந்த ஆடியோவுக்கான காரணம் கேட்டோம். ‘’நான் விரைவில் கூப்பிடுகிறேன்’’ என்றவர் அதன்பிறகு நம் அழைப்பை ஏற்கவே இல்லை..குற்றம் சாட்டப்பட்ட அட்வென்ட் கிறிஸ்டியன் சர்ச் திருவான்மியூர் கிளை சபையின் பாஸ்டர் மகிமைதாஸிடம் பேசினோம். “எனது மனைவியை பர்சனல் அட்டாக் செய்யும் விதமாக சர்ச் வாட்ஸ் ஆப் குரூப்பில் கமென்ட் அடித்திருந்தார் மெர்லின். இதற்கு விளக்கம் கேட்டு சபையிலிருந்து நோட்டீஸ் அனுப்பினோம். விளக்கம் அளிப்பதற்கு பதிலாக அம்மா, தங்கையுடன் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், அதனை செல்போனில் வீடியோவாகவும் எடுத்தார். மூப்பர் டைட்டஸ் என்பவர் செல்போனை பிடுங்கியதால் அவரையும் தாக்கினார் மெர்லின். அவருடன் வந்த சாம் அகஸ்டின், பால் டேனியல் ஆகியோரும் எங்களை அசிங்க அசிங்கமாகப் பேசி தாக்க முயற்சித்தனர். இதுபற்றி திருவான்மியூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம். மெர்லின் இப்படியொரு ஆடியோ வெளியிட்டு எனக்கு நெருக்கடி கொடுப்பதற்குப் பின்னணியில் சபையைச் சேர்ந்த சில நிர்வாகிகள் இருக்கிறார்கள். பிஷப்பான பக்தசிங் நிர்வாகத்தின் கீழ் கோடிக்கணக்கான நிதியில் முறைகேடு நடந்திருப்பதால் அதுகுறித்து சமீபத்தில் கணக்கு கேட்டேன். எனவே மெர்லினைத் தூண்டிவிட்டு என்னை பழிவாங்குகிறார்கள். இதற்கு மேல் என்னால் எதுவும் கூற இயலாது’’ என்றார்..அடுத்து பேசிய அட்வென்ட் கிறிஸ்டியன் சர்ச் விருகம்பாக்கம் கிளையின் முன்னாள் செகரட்டரி கிஸாந்த் இதுபற்றி, “1943-ல் இந்த சபை கட்டுவதற்கு 15 சென்ட் இடத்தைக் கொடுத்தது எங்களது குடும்பம். மெட்ரோ ரயில் திட்டத்திற்காக சி.எம்.ஆர்.எல். இந்த இடத்தை கையகப்படுத்தியது. விசுவாசிகள் யாருக்குமே தெரியாமல் பிஷப் பக்தசிங் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டார். 5 கோடியே 59 லட்சத்து 3 ஆயிரத்து 711 ரூபாய் இழப்பீடு தொகை கிடைத்தது. அதேபோல், பெரும்பாக்கம் சபை இடத்தையும் கொடுத்ததால் 2.80 கோடி ரூபாய் வந்தது. அத்தனை பணத்தையும் பிஷப் என்ன செய்தார் என்பது தெரியவில்லை. கணக்கு காட்டவும் இல்லை’’ என்று குற்றம் சாட்டினார்..சென்னை பட்டாபிராம் கிளை சபையின் முன்னாள் செகரட்டரி சுந்தர்ராஜன், “அட்வென்ட் கிறிஸ்டியன் சர்ச் நிர்வாகத்தின் கீழ் 18க்கும் மேற்பட்ட அரசு உதவிபெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. தற்போதைய பிஷப்பான பக்தசிங், சில ஆண்டுகளுக்கு முன் கோட்டூர்புரத்திலுள்ள அரசு உதவிபெறும் பள்ளியின் கரஸ்பான்டன்டாக இருந்தார். அப்போது, அப்பள்ளி வளாகத்தில் ‘கருணை உள்ளம்’ என்கிற ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தை நடத்த ஆனந்தராஜ் என்பவருக்கு லீஸுக்கு விட்டார். இந்த நிலையில்தான், ஆனந்தராஜின் இரண்டாவது மனைவி பக்தசிங் பற்றி அதிர்ச்சிகரமான ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், தற்போதைய பிஷப் பக்தசிங் பல பெண்களின் வாழ்க்கையை சீரழிப்பதாகவும், அதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்கும் போதெல்லாம் பக்தசிங்கை காப்பாற்றுவதே தனது கணவர் ஆனந்தராஜ் என்று குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்ல, அந்த கருணை உள்ளம் ஹாஸ்டலில் உள்ள சிறுவனிடம் ஆனந்தராஜின் மனைவி விசாரிக்கும் வீடியோவும் வெளியானது. அந்த வீடியோவில் சிறுவன் சொல்லும் தகவல்கள் அச்சில் ஏற்றமுடியாத போக்சோ வழக்கு பதிவுசெய்யும் அளவுக்கு பகீர் பாலியல் கொடுமைகள். அங்கு மாணவிகளின் கர்ப்பம் கலைக்கப்பட்டிருக்கிறது, சிறுவர்களும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருப்பதுடன் சித்ரவதை செய்யப்பட்டதும் வீடியோ வாக்குமூலத்தில் உள்ளது. இதையெல்லாம் ஃபெயித் ஆர்டர் கமிட்டி சேர்மன் பாஸ்டர் மகிமைதாஸ் கேள்வி எழுப்பியதால், அவரை பிஷப் பக்தசிங் டீம் பழி வாங்குகிறது’’ என்று கூறினார்..இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கோட்டூர்புரவாசிகளிடம் விசாரித்தோம். ‘‘சில வருடங்களுக்கு முன்பு, இப்பள்ளியில் படித்த மாணவி ஹாஸ்டலில் தூங்கிக் கொண்டிருக்கும்போது, அங்கிருந்த வாட்ச்மேன் குடிபோதையில் நள்ளிரவில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் நடந்தது. அதன் பிறகு பள்ளியின் ஆசிரியை அந்த ஹாஸ்டலில் மாணவிகளுடன் தங்கத் தொடங்கினார். இரவு நேரங்களில் அங்குவரும் ஆனந்தராஜ், அந்த ஆசிரியையிடம் தவறாக நடந்துகொண்டு சலசலப்பு ஏற்பட்டது. அப்போது பக்தசிங்கின் அலுவலகம் வேளச்சேரியில் இருந்தாலும் வாரத்திற்கு மூன்று நாட்கள் இந்த ஹாஸ்டலுக்கு வந்துவிடுவார். அவரை அன்போடு அழைத்துச் செல்லும் முன்னாள் மாணவியும் ஹாஸ்டல் வார்டனுமான ஜெயலட்சுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அறைக்குள் சென்று தனிமையில் இருப்பார்கள். இது தொடர்பாக சைல்டுலைன், கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் பள்ளி ஆசிரியை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, அந்த ஆசிரியையை இரண்டு முறை கொலை செய்யும் முயற்சி நடந்தன’’ என்றனர். .இதுகுறித்து ஆனந்தராஜை தொடர்புகொண்டு கேட்டபோது, “என் மனைவி வீடியோ வெளியிட்டார் என்பதே நீங்கள் சொல்லித்தான் தெரியும்’’ என ஒரே போடாக போட்டவர், “பிஷப் பக்தசிங் மீதும் என் மீதும் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்’’ என்று மறுத்தார்..பக்தசிங்கை தொடர்புகொண்டு கேட்டதும், “கணக்கு வழக்குகளை காண்பிக்க இன்னும் நாட்கள் இருக்கின்றன. என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என நிரூபிக்கப்பட்டிருக்கிறது’’ என்றார் கோபமாக.முழுமையான விசாரணை அவசியம்.- மனோ சௌந்தர்