`உலகில் போர் மூளும்' என்று நாஸ்டர்டாம் கணிப்பு; `உலகின் கடைசி நாளை அறிவித்த மாயன் காலண்டர்' என ஒவ்வொரு காலகட்டத்திலும் குபீர் விவாதங்கள் கிளம்புவது வாடிக்கை. அந்தவரிசையில், ஆற்காடு பஞ்சாங்கத்தை முன்வைத்து முளைவிட்டிருக்கிறது, புதிய சர்ச்சை ஒன்று.சுனாமி முதற்கொண்டு தக்காளி விலையேற்றம் வரை கணித்திருப்பதாகக் கூறப்படும் ஆற்காடு பஞ்சாங்கத்தின் உரிமையாளரான கே.என்.சுந்தரராஜனை சந்தித்தோம்.`` முதலில் ஒரு விஷயம். நாங்கள் சொல்வதெல்லாம் நடக்கிறது என்பதைவிட, என்னென்ன நடக்கும் என்பதைக் கூறியிருக்கிறோம். `ஜோதிடர்கள் எல்லாம் பொய்யர்கள், சுனாமி, வெள்ளம் பாதிப்பு, கொரோனா வைரஸ் தொற்று, பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றியெல்லாம் யாராவது சொன்னார்களா?' என்று டி.வி நிகழ்ச்சி ஒன்றில் ஒருவர் சவால்விட்டிருக்கிறார்..இவர்களுக்கெல்லாம் பதில் சொல்வதே அநாவசியம். அதேசமயம், `2004ல் கடலில் அதீத கொந்தளிப்பால் ராட்சத அலைகள் தோன்றி சென்னை, பாண்டிச்சேரி சுற்றுப்புறங்களை பாதிக்கும்' என அந்த வருடப் பஞ்சாங்கத்தில் சொல்லியிருந்தோம். இது, சுனாமி பற்றிய முன்னறிவிப்பு. `2013-ம் ஆண்டு 14.8.2013 அன்று இந்தியக் கடல் பகுதியில் கப்பல் தீ விபத்து ஏற்படும். 22.11.2015ல் பேய் மழையில் சென்னை மிதக்கும்' என எழுதியவை எல்லாம் நடந்துள்ளதே? `2016-2017ல் நவம்பர் 12ம் தேதிக்குள் வங்கிகளில் புதிய மாற்றம் ஏற்படும். கணக்கில் இல்லாத கருப்பு பணத்தைக் (?) கண்டுபிடிக்க நேரும்' எனச் சொல்லியிருந்தோம். அதேதேதியில் பணமதிப்பிழப்பு ஏற்பட்டு வங்கிகளில் கூட்டம் அலைமோதியதே. `2019-2020ல் உலகில் ஒரு புதிய வைரஸ் நோய் உருவாகும்' என்றும் `அதை மூலிகை வைத்தியம் கட்டுப்படுத்தும்' எனவும் குறிப்பிட்டிருந்தோம். கொரோனா வைரஸ் தொற்றியது; அதைத் தடுக்க கபசுரக் குடிநீர் பருகச் சொன்னதும் தெரிந்ததுதானே. பழம்பெரும் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிக்கும்; வெட்டுக்கிளி கூட்டமாக வந்து கோதுமைப் பயிர்களை நாசம் செய்யும். இவையும் முன்பே கணித்தவைதான். அவ்வளவு ஏன், 2023ம் வருடம் ஆடி மாதம் தக்காளி விலை ஏறும்; குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திராவில் பெரும் வெள்ளம் ஏற்படும் என்று எழுதியிருக்கிறோம். அது இப்போது நடந்து கொண்டிருக்கிறது'' என்றார்..தொடர்ந்து பேசுகையில், ``எந்த ஜாதகமும் தமிழ்நாட்டுக்கு என்று தனியாகக் கணிக்கப்படுவதில்லை. ஜகத் ஜாதகம் என்று உலகம் முழுமைக்குமாகவே ஜாதகம் எழுதப்படுகிறது. ஏனென்றால், பஞ்சபூதங்கள்; எட்டுத் திசைகள்; திதி, வாரம் (கிழமை), யோகம், கரணம், நட்சத்திரம் எனும் ஐந்து அங்கங்கள் என இவை எல்லாமே உலகத்துக்குப் பொதுவானவை.ஒவ்வொரு ஆண்டும் சதுர் மாச விரதம் (ஆடி மாத பௌர்ணமியில்தொடங்கும் விரதம்) இருந்து விடியற்காலையில் எழுந்து, சூரியனையும் சுக்ரனையும் வைத்து, 90 நாட்களில் பஞ்சாங்கத்தை எழுதி முடிப்போம். பஞ்சாங்கத்தைக் கணிக்கும்போது ஆண்டு முழுக்க எந்தெந்தத் தேதியில் என்னென்ன நடக்கும் என்பது தெரியவரும்.அதைத்தான் எழுதுகிறோம். இதே நடைமுறையில் 1900 வருடத்தில் எங்கள் பாட்டன் கா.வெ.சீதாராமய்யர் காலம் தொடங்கி, இப்போது நான்காவது தலைமுறையாக நாங்கள் எழுதிக்கொண்டிருக்கிறோம்'' என்கிறார்.``சரி.. தமிழகத்தில் அடுத்து ஆட்சியை பிடிக்கப்போவது யார்? எதிர்க்கட்சிகளின் நிலை என்ன?'' என்று கேட்டோம். ``அரசியலை நாங்கள் நேரடியாக எழுதுவதில்லை. சூட்சுமமாகத்தான் எழுதுவோம். ஒன்றுமட்டும் சொல்லலாம். தேர்தலின்போது, பல எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் நிற்கும்'' என்றார்.ஆற்காடு பஞ்சாங்கத்தின் கணிப்பு குறித்து திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்முரசுவிடம் கேட்டோம். “பிறப்பென்று ஒன்று இருந்தால் இறப்பென்று ஒன்று இருக்கும் என்பதைப்போல, இயற்கைக்கும் மாற்றம், சீற்றம் உண்டு. உலகப் பொருளாதார நிலையை வைத்து பெட்ரோல், தங்கம் விலை உயரும். அதேபோல், காய்கறிகள் விளைச்சல் கூடும் குறையும் காலத்தை வைத்து, விலை ஏறும் இறங்கும். இவையெல்லாம் பொதுவாக எல்லா வருடமும் நிகழ்பவைதான்.பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா? என்று கேட்டால் ஒரு ஜோதிடர் ஆண் என்பார், இன்னொருவர் பெண் என்பார். இரண்டில் ஒன்றுதானே பிறக்கும். இதில் யார் சொன்னது நடக்கிறதோ அவரை நம்பத் தொடங்கிவிடுகிறார்கள். ஆயிரம் பேருக்கு சொல்வதில் யாரோ சிலருக்கு நடப்பதைப் பிடித்துக்கொண்டு, பலிக்காதவற்றை மறந்துவிடுகிறார்கள். ஜோதிடம் என்பதே காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதைதான். அது அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் எதிரானது'' என்கிறார்.ஆக, மெய்ப்பொருள் காண்பது அறிவு! - அன்புவேலாயுதம்