ஒரே நாடு… ஒரே தேர்தல் கோஷம்தான் இப்போது தேசமெங்கும் எதிரொலிக்கும் சர்ச்சைப் புயல். முதல்வர் ஸ்டாலினும், ‘மாநில அரசுகளை எல்லாம் கலைக்கும் நோக்கமா இது? தேர்தல் செலவுகளை குறைக்க வேண்டும் என்றால், கொள்ளை அடிப்பதை நிறுத்துங்கள்’ என்று வரிந்துக்கட்டிக்கொண்டு கொந்தளித்துள்ளார். தவிர, இந்தியா கூட்டணியை சிதறடிக்கதான் இப்போது ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கான குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கொந்தளிக்கின்றன எதிர்க்கட்சிகள். பின்னணியில் என்ன நடக்கிறது, இவர்கள் என்ன சொல்கிறார்கள்? “பா.ஜ.க.வின் திட்டம், பகல் கனவுதான்!” கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், தி.மு.க. செய்தித்தொடர்பு செயலாளர் செப்டம்பர் 1ம் தேதி ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடந்து முடிந்த பிறகு, அனைத்துத் தலைவர்களும் சொன்ன விஷயம், ‘நாங்கள் பதவிக்காக ஒன்றுசேரவில்லை. இந்தியாவை காப்பாற்றுவதற்காக ஒன்றுசேர்ந்திருக்கிறோம்’ என்பதே. இதை கிட்டத்தட்ட `இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப்போர்' என்றே சொல்லலாம். இந்தச் சூழ்நிலையில் திடீரென்று சம்பந்தமே இல்லாமல் `ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற கோஷத்தை மத்திய அரசு முன்வைத்துள்ளது. இதன் நோக்கம். ‘இந்தியா’ கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும், எதிர்க்கட்சிகளை சிதறடித்துவிட்டு மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான். `ஒரே நாடு ஒரே தேர்தல்' அமலாகும்பட்சத்தில், ஒரே நேரத்தில் மாநிலங்கள் மற்றும் ஒன்றியத்துக்கு தேர்தல் நடைபெறும். அப்போது மாநிலங்களில் எதிரும் புதிருமாக உள்ள ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிக்குள் குழப்பம் ஏற்படும். பொது எதிரி பா.ஜ.க.வை மறந்துவிட்டு, தங்களுக்குள் மோதிக்கொள்வார்கள் என்று பா.ஜ.க திட்டம் போடுகிறது. ஆனால், பா.ஜ.க.வின் இந்தத் திட்டம் வெறும் பகல் கனவுதான். காரணம், பா.ஜ.க நினைப்பதுபோல அவ்வளவு சுலபத்தில் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை அமல்படுத்திவிட முடியாது. முதலில் அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்ற வேண்டும். அடுத்தது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். இந்த இரண்டுமே எளிதில் சாத்தியமில்லாத ஒன்று. அடுத்து, இந்தியா முழுவதும் 4,400 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அத்தனை சட்டமன்றங்களிலும் இதற்கு ஒப்புதல் வாங்கவேண்டும். இதெல்லாம் நடக்கிற காரியம் அல்ல. நடைமுறைப்படுத்த முடியாத, நடைமுறைப்படுத்த தேவையில்லாத ஒரு விஷயத்தைத்தான் கொண்டுவந்து அரசியல் செய்ய நினைக்கிறது பா.ஜ.க. காரணம், ‘இந்தியா’கூட்டணி மீதுள்ள பயம். வரப்போகும் தேர்தலில் ‘இந்தியா’கூட்டணி அபார வெற்றிபெறும் என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது. அதனாலேயே, கூட்டணியில் குட்டையைக் குழப்பி அதில் மீன் பிடிக்க பா.ஜ.க முயற்சி செய்கிறது. பா.ஜ.க.வின் இந்த சூழ்ச்சியை நிச்சயம் முறியடிப்போம்!.“தி.மு.க.வுக்கு பயத்தைக் கொடுத்துள்ளது!” பேராசிரியர் ராமசீனிவாசன், பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் இந்தியாவின் முதல் தேர்தல் 1952ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலும் ஒரேநேரத்தில்தான் நடைபெற்றது. அதன்பிறகு 1959ம் ஆண்டு முதன்முதலில் கேரளாவின் இ.எம்.எஸ் நம்பூதிரிபாடு ஆட்சியை நேரு கலைத்தார். பிறகு, ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தியால், எமர்ஜென்சி கொண்டுவரப்பட்டது. பல மாநிலங்களில் ஆட்சி கலைக்கப்பட்டது. அதன்பிறகு மத்தியில் ஏற்பட்ட சந்திரசேகர் ஆட்சி, வாஜ்பாய் ஆட்சி மெஜாரிட்டி இல்லாமல் கவிழ்ந்தது. இதுபோன்ற சூழ்நிலைகளால்தான், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்துவருகின்றன. இதனால் நாட்டிற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை மாற்றி, `ஒரே நாடு ஒரே தேர்தல்' என்று கொண்டுவந்தால், 45 ஆயிரம் கோடி ரூபாய் செலவு நாட்டுக்கு மிச்சம் என்று ஏழு ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வறிக்கை தெளிவுபடுத்திவிட்டது. தற்போதைய சூழலில் 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவுகூட மிச்சப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. தவிர, நாட்டின் ஏதாவது ஒரு மாநிலத்தில் தேர்தல் நடந்துகொண்டே இருப்பதால் மத்திய அரசின் திட்டங்களை உரிய நேரத்தில் செயல்படுத்த முடியாமல் போகிறது. இப்படி பல சிக்கல்கள் இருப்பதால்தான் ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது. மக்கள்நலன் காரணமாகவே ஒரே நாடு ஒரே தேர்தலை செயல்படுத்த மத்திய அரசு நினைக்கிறது. தி.மு.க கூறுவதுபோல, இது செயல்படுத்த முடியாத விஷயம் அல்ல. அதேபோல எதிர்க்கட்சிகளை உடைப்பதற்காக பா.ஜ.க இதைச் செய்யவில்லை. மாநிலங்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் வரும்பட்சத்தில், மக்களின் வாக்குகள் தேசியத்தை மனதில் வைத்தே செலுத்தப்படும். அது தேசியக் கட்சிகளுக்கு ஆதரவாக முடியும். முன்பு அது காங்கிரஸுக்கு ஆதரவாக இருந்தது. தற்போது தி.மு.க.வுக்கு இது பயத்தைக் கொடுத்துள்ளது. எனவேதான், `இதற்குப் பின்னால் அரசியல் சூழ்ச்சி உள்ளது' என்கிறார்கள். மக்கள் மீது உண்மையாகவே அக்கறை கொண்டு களப்பணியாற்றும் யாரும் இப்படி பயப்படமாட்டார்கள்! - அபிநவ்