அரியலூர் அனிதா தொடங்கி குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன் வரையில் நீட் தற்கொலைகள் ஓய்வதாகத் தெரியவில்லை. `நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்து போடவே மாட்டேன்' என ஆளுநர் ரவி அடம்பிடிப்பதும் அதை எதிர்த்து தி.மு.க போராட்டத்தை அறிவித்திருப்பதும் அரசியல் களத்தில் அனல் பரப்பியிருக்கிறது.தமிழ்நாட்டில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட 2017ம் ஆண்டில் இருந்து இதுவரையில் 30 பேர் வரை தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி சென்னை, குரோம்பேட்டையை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன், நீட் தேர்வில் மதிப்பெண் எடுத்தும் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத துயரத்தில் உயிரை மாய்த்துக் கொண்டார். இதற்கு மறுநாளே மாணவரின் தந்தை செல்வசேகரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது..`நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒருபோதும் ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட மாட்டேன்’ என ஆகஸ்ட் 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்த நிலையில் அடுத்தடுத்து இந்தச் சம்பவங்கள் நடந்தது, அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியது.ஜெகதீஸ்வரன், தந்தை செல்வசேகர் ஆகியோரின் மரணம், அவர்களின் குடும்பத்தாரை மட்டுமின்றி, அவர்களின் நண்பர்களையும் வெகுவாக பாதித்துள்ளது. ஜெகதீஸ்வரனின் நண்பரும் மருத்துவ மாணவருமான ஃபயாசுதீன் பேசுகையில், ``நான் நீட் தேர்வில் ஜஸ்ட் பாஸ். எங்க அப்பாவால காசு கொடுக்க முடிந்த ஒரே காரணத்தால்தான் இன்று மருத்துவம் படித்து வருகிறேன். ஆனால், என்னைவிட நன்றாகப் படிக்கும் ஜெகதீஸ்வரனால் மருத்துவம் படிக்க முடியவில்லை. நான் இந்த சீட்டுக்கு தகுதியானவன் இல்லை. ஜெகதீஸ் போன்றவர்களால்தான் எனக்கு மக்கள் பணி செய்யும் எண்ணமே வந்தது..தனியார் பள்ளியில் படித்த எங்களாலேயே முடியவில்லை என்றால் அரசுப் பள்ளி மாணவர்கள் இதை எப்படி எதிர்கொள்வார்கள். ஒரு மாணவர் நீட்டில் 720-க்கு 720 மார்க் வாங்கியுள்ளார். அவர் ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 படிப்புக்கே ரூ.15 லட்சம் செலவழித்துள்ளார். மருத்துவப் படிப்புக்கு ரூ.1.5 கோடி போட்டுவிட்டு மருத்துவராக வருபவருக்கு மக்கள் பணியில் எப்படி நாட்டம் செல்லும். போட்ட காசை எடுக்கத்தானே பார்ப்பார்கள்? அப்படியென்றால் எதிர்கால சுகாதார சேவை கட்டமைப்பு எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்" என்றார் கண்ணீருடன்.நீட் தேர்வு எழுப்பும் சர்ச்சை குறித்து, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம். “நீட் என்பது மருத்துவ படிப்புக்கான தேர்வு அல்ல. இது ‘சந்தையின் சூதாட்டம்’ என்பதைக் கடந்தகால நிகழ்வுகள் நிரூபணம் செய்துவிட்டன. இதில் சேர்ந்து படிக்க ஒரு மாணவருக்கு குறைந்தபட்சம் 13 லட்சம் முதல் 25 லட்சம் வரை பணம் வேண்டும். ஏற்கனவே, கோச்சிங் சென்டர்கள் லட்சக்கணக்கில் கட்டணம் பெறுகின்றன. இதை நாம் அனுமதித்துக் கொண்டே இருக்கப் போகிறோமா?.தமிழக மாணவர்கள் நீட் பிரச்னையால் செத்துக் கொண்டிருக்கிறார்கள். மனக்கவலையில் உழல்கிறார்கள். அப்படி இருக்கும்போது இதில் காலம் கடத்துவது நியாயமா? இந்திய அரசுக்கு அதற்குரிய இறையாண்மை இருப்பதுபோல மாநில அரசுக்கும் உள்ளது; மக்களுக்கும் உள்ளது. அந்த மக்கள், அரசமைப்புச் சட்டம் தங்களுக்கு வழங்கியுள்ள உரிமையின் அடிப்படையில் கேட்கும்போது, அதைக் கொடுப்பதுதானே மத்திய அரசின் தார்மீக கடமை. ஒரு மாநில அரசின் சட்டமன்றம் ஏகோபித்து அனுப்பிய மசோதாவை இப்படி அலைக்கழிப்பு செய்வது எந்தவிதத்தில் நியாயம்?'' என்றார், கொதிப்புடன்..கல்வியாளர்களின் எதிர்ப்பு குறித்து, பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம், “நீட் தேர்வே இருந்திருக்கவில்லை என்றால்கூட மூன்று வருடங்களுக்கு முன்பு சி. பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் 424 மதிப்பெண் பெற்ற ஜெகதீஸ்வரனால், அரசுக் கல்லூரியில் சேர்ந்திருக்க வாய்ப்பேயில்லை. நீட் தேர்வு என்ற திட்டம் இருந்ததால்தான் மேலும் மூன்று ஆண்டுகள் மருத்துவப் படிப்புக்கான முயற்சியை அந்த மாணவரால் மேற்கொள்ள முடிந்தது. ஒருவேளை, அதிக மதிப்பெண் பெற்றிருந்தால் நீட் தேர்வின் மூலம் மட்டுமே அந்த வாய்ப்பு கிடைத்திருக்கும்.தற்கொலை செய்துகொண்ட இருவரின் இழப்பும் தாங்க முடியாததுதான், அது வருத்தமானதுதான் என்றாலும், சில அரசியல்வாதிகளும் சில ஊடகங்களும் உண்மை நிலையை உலகுக்குச் சொல்லாமல், உணர்ச்சிகளை தூண்டிவிட்டு பதட்டத்தை உருவாக்குவது பொறுப்பற்ற செயல். அவ்விரு மரணங்களை முன்வைத்து அரசியல் செய்வது, உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவு செய்வது நியாயமற்ற, அராஜக செயல்" என்றார், ஆவேசத்துடன்..``நீட் தேர்வில் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் இருந்தே கேள்விகள்தான் கேட்கப்படுகின்றன. இதனால் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வில் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். நீட் தேர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டியது மத்திய அரசின் கைகளில்தான் இருக்கிறது'' என்கின்றனர், கல்வியாளர்கள்.அதுவரை ஜெகதீஸ்வரன்களுக்காக ஃபயாசுதீன்களின் குரல் ஒலித்துக் கொண்டுதான் இருக்கும். -அரியன்பாபு படங்கள் : செந்தில்நாதன்