அரசுத் துறையில் அசிஸ்டென்ட் பணி என்றால்கூட பி.ஹெச்டி படித்தவர்களே ஆளாய்ப் பறக்கும் நிலையில், போலி சான்றிதழைப் பெற்றுக் கொண்டு அரசுப் பணி வழங்கிய சம்பவம், தேனி மின்வாரியத்தின் லேட்டஸ்ட் ஷாக். “கடந்த 10 ஆண்டுகளாக தேனி மின்வாரியத்தில் நியமனம் செய்யப்பட்ட பணியாளர்களில் ஐம்பது பேருக்கும்மேல், போலியாக மதிப்பெண் சான்றிதழை தயார் செய்து கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனர். இதில், எட்டாம் வகுப்பு ஃபெயில், எட்டாம் வகுப்பு பாஸ் என்ற அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்களும் பத்தாம் வகுப்பு ஃபெயில் என்ற அடிப்படையில் வேலைக்குச் சேர்ந்தவர்களும் அடங்குவர்'' எனக் குறிப்பிடும் தேனி மின்வாரிய ஊழியர்கள், தொடர்ந்து நடந்த மோசடியை விவரித்தனர். ``மின்வாரியத்தில் பணியில் சேர்ந்தவர்களுக்குப் பிடிக்காதவர்கள்தான் புகார் கடிதங்களை அனுப்பியுள்ளனர். அவர்களில், தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் உள்ள மின்வாரிய பண்டக சாலையில் உதவியாளராகப் பணியாற்றிய பாண்டியராஜன், சின்னமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய சுந்தரி, கூடலூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் கணக்கீட்டு பணியாளராக பணியாற்றிய கண்ணன் ஆகிய மூன்று பேரும் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர்கள் 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்றனர். ``கல்விச் சான்றிதழ்களில் மட்டுமில்லை, சாதிச் சான்றிதழ்களிலும் பலர் போலியாக கொடுத்து பணியில் சேர்ந்ததோடு, பதவி உயர்வும் பெற்றுள்ளனர். புதிரை வண்ணார் என்ற சமூகத்தினர் தேனி மாவட்டத்திலேயே இல்லை. ஆனால், அந்த சாதிப் பெயரில் ஒருவர் பணியில் இருக்கிறார். .அவரின் உறவினர்களுக்கிடையே சண்டை வந்தபோது, ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்டேன். அதைக் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார்கள். மின்சார வாரியத்தில் விஜிலென்ஸ் அமைப்பு உள்ளது. இதுபோல், முறைகேடாக கல்விச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ்களில் முறைகேடு செய்து வேலைக்குச் சேர்ந்தவர்களை அந்த அமைப்பு கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த பத்து ஆண்டுகளில் அவர்கள் வாங்கிய ஊதியத்தையும் ரெக்கவரி செய்யவேண்டும்” என்கிறார், `இந்தியன் குரல்' அமைப்பின் தென்மண்டல அமைப்பாளர் ராமகிருஷ்ணன்.மின்வாரியம் மீதான புகார்கள் குறித்து தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சகாயராஜிடம் கேட்டபோது, “மதிப்பெண் பட்டியலில் திருத்தம் செய்து மூன்று பேர் பணியில் சேர்ந்தது உண்மைதான். அவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளோம். இவர்கள் வேலைக்குச் சேர்ந்தபோது, சரியான சான்றிதழைக் கொடுத்துள்ளனர். ஆனால், பதவி உயர்வின்போது போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்துள்ளனர்” என்றவரிடம்,``இவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படுமா?" என்று கேட்டபோது, “அப்படியான நடைமுறை எங்கள் வாரியத்தில் இல்லை. இவர்கள் பதவி உயர்வு நிறுத்தப்பட்டு பழைய இடத்துக்குச் செல்லும் நிலைதான் ஏற்படும். இது எல்லா இடங்களிலும் நடப்பதுதான். இங்கு இது பெரிதாகிவிட்டது” என்றார்.`பழைய இடம்தான்...பணிநீக்கம் இல்லை' என்பது சரிதானா? - பொ.அறிவழகன்