’கஜினி’ படத்தின் ’மொட்டை மாடி கல்பனா’ கேரக்டர் ரொம்பவே ஃபேமஸ். கோவையிலோ, மொட்டை மாடியில் இருந்து யூரினை எதிர் வீட்டில் ஊற்றியதாக மேயர் கல்பனாவின் சகோதரர் மீது பகீர் புகார் கிளம்ப… மொத்த உடன்பிறப்புகளும் மூக்கைப் பிடித்துக்கொண்டு சிதறி ஓடுகிறார்கள்!விவகாரம் இதுதான்... கோவை மாநகராட்சியின் மேயர் கல்பனாவுக்கு ஆர்.எஸ்.புரத்தில் அரசு பங்களா ஒன்று உள்ளது. ஆனால், கடந்த சில வாரங்களாக மணியகாரன்பாளையத்தில் உள்ள தன் அம்மாவின் வீட்டிலிருந்துதான் வந்து சென்று கொண்டிருக்கிறார். இந்தநிலையில், அவரின் எதிர்வீட்டில் வசிக்கும் சரண்யா, மேயர் மற்றும் அவரின் குடும்பம் மீது சில குற்றச்சாட்டுகளைக் கொட்டியுள்ளார்.சரண்யாவை சந்தித்தோம். “எங்க சொந்த ஊர் மன்னார்குடி, எங்க அப்பா அங்கே நீண்டகால திமு.க. உறுப்பினர். எங்க வீட்டுக்காரர் கோபிநாத் கோவையில ஒரு கம்பெனியில வேலை பார்க்கிறார். அதனால இங்க இருக்கறோம். இந்த காம்பவுண்டுக்குள்ள நாலு வீடு இருக்குது. இதுல ஒண்ணு மேயர் கல்பனாவோட அம்மா வீடு, இன்னொரு வீட்டுல அவங்க அத்தை குடியிருக்காங்க, இன்னொரு வீட்டுல அவங்களுக்கு தெரிஞ்சவங்க குடியிருக்காங்க, மீதி இருக்கிற ஒரு வீட்டுலதான் நாங்க குடியிருக்கிறோம்..மேயர் ஆகுறதுக்கு முன்னாடி ரொம்ப சாதாரண குடும்பம்தான் கல்பனாவோடது. அவங்க தம்பி குமார் எங்க வீட்டுக்காரர்ட்ட கடன் கேட்டு வாங்குவார், திருப்பிக் கொடுப்பார். ஒரு தடவை தன் அம்மா காளியம்மாளோட மருத்துவ செலவுக்காக பதினைந்தாயிரம் வாங்கினார். அதுல ஐந்தாயிரம்தான் திருப்பித் தந்தார். இந்தநிலையில கல்பனா மேயராயிட்டாங்க. அதன்பிறகு ஒருநாள் குமாரிடம் மீதி பணம் கேட்டதுக்கு, `சிட்டி மேயர் தம்பி நான். என்னையவே வழியில மறிச்சு பணம் கேட்பியா?’ன்னு கோபப்பட்டார். அதுல இருந்து அவங்கட்ட பேச்சை நிறுத்திட்டோம்.மேயர் கல்பனா தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு வீட்டை விட்டுட்டு கடந்த ஜூன் மாசத்துல இருந்து இங்கேதான் தங்குறாங்க. அவங்க இங்கே தங்க ஆரம்பிச்சதுல இருந்து அந்தக் குடும்பத்தோட டார்ச்சர் ஓவராக போயிருச்சு. அழுக்குத் தண்ணியை எங்க கார் மேலே ஊத்துறது, ஸ்நாக்ஸ் சாப்பிட்டுட்டு மிச்சத்தை காருக்கு கீழே வீசுறதுன்னு ஆரம்பிச்சாங்க..இப்ப அவங்களோட நோக்கமே எங்களை இந்த வீட்டுல இருந்து காலி பண்ண வைக்கிறதுதான். எங்களை அனுப்பிட்டா, இந்த காம்பவுண்ட் முழுக்கவே அவங்களோட கட்டுப்பாட்டுல இருக்கும்னு நினைக்கிறாங்க. அதுக்காக டார்ச்சர் பண்றாங்க. எங்க வீட்டு கிச்சனுக்கு பின்னாடி இருந்து திடீர்னு யூரின் ஸ்மெல் வரத் தொடங்குச்சு. அழுகுன பழம், முட்டை, மிஞ்சுபோன சோறுன்னு ஆரம்பிச்சு சொன்னா கேவலம்... யூஸ் பண்ணிய நாஃப்கின்கூட கிடந்துச்சு. இந்த கருமங்களாலே கிச்சன் பக்கமே போக முடியாத அளவுக்கு மோசமான நாத்தம்.எப்படி இது நடக்குதுன்னு எவ்வளவோ யோசிச்சும் புரியலை. அதனால அதை தெரிஞ்சுக்க மொட்டை மாடியில கேமரா வெச்சோம். அப்பதான் புரிஞ்சுது அந்த அக்கிரமம். மேயரோட தம்பி குமார், மொட்டை மாடிக்கு வந்து ஒரு பக்கெட்ல யூரினை கொண்டு வந்து எங்க வீட்டு கிச்சன் ஜன்னல் பக்கம் கொட்டிட்டு போறதும் மேயரோட அம்மா காளியம்மாள் எங்க ஜன்னலுக்குகீழே குப்பை கொட்டுறதும் வீடியோவாகவே சிக்குச்சு. எங்களை சாப்பிடவோ… நிம்மதியா தூங்கவோகூட வழியில்லாம பண்றாங்க. தி.மு.க. மேயரால தி.மு.க. விசுவாசி குடும்பத்துக்கே இப்படியொரு டார்ச்சர். முதல்வர்தான் எங்களை காப்பத்தணும்” என்று முடித்தார்..இதற்கெல்லாம் மேயர் கல்பனாவின் பதில் என்ன? அவரிடமே பேசினோம். “நீங்க சொல்ற சரண்யாவை எங்களுக்கெல்லாம் பிரியாங்கிற பெயர்லதான் தெரியும். ஆக, சொந்தப் பெயர்லேயே அந்தம்மாகிட்ட உண்மை இல்லை. அவங்க செய்யறது எதுவுமே சரியில்லை. எப்ப பார்த்தாலும் மொபைலை எடுத்துக்கிட்டு அடுத்த வீட்டுக்கு வர்றவங்க போறவங்களை வீடியோ எடுக்கிறது, பேசுறதை ரெக்கார்டு பண்றதுன்னு வில்லங்க வேலைகளை பண்றதுதான் பொழப்பு. ஏற்கனவே, அந்த காம்பவுண்ட்ல இருந்த இன்னொரு லேடிகூட சண்டை போட்டு விரட்டியே விட்டாங்க. இப்ப எங்களை வம்புக்கு இழுக்கிறாங்க.என் தம்பியும் அம்மாவும் அசைவமே சாப்பிட மாட்டாங்க. அப்புறம் எப்படி முட்டை தோலை போட முடியும்? என் தம்பி யூரினை கொட்டுனார்னு எந்த அடிப்படையில சொல்றாங்க? அந்த தண்ணீர் யூரின்தான்னு நிரூபிக்க முடியுமா இவங்களால? எங்க அம்மா வீட்டுல இருந்த காய்ஞ்சு போன பூவைதான் அங்கே கொட்டினாங்க. இந்த லேடியோட வீட்டுக்கு பின்னாடி மாடு, குதிரை வளர்க்குற தோட்டம் இருக்குது. அங்கே இருந்து வரும் ஸ்மெல்லை இப்படி ட்விஸ்ட் பண்ணி பேசுனா என்ன பண்ண?.நாங்க அவங்க வீட்டை கைப்பற்றி என்ன பண்ணப் போறோம்? நான் எனக்குன்னு இருக்கிற மேயர் இல்லத்தில்தான் தங்கியிருக்கேன். பகல் முழுதும் மக்கள் பணியை பார்த்துட்டு நைட்டு தூங்கதான் அம்மா வீட்டுக்கு போறேன்.பொறுப்பா வேலையை பார்க்கிற என்னை இப்படிப் படுத்தி எடுத்தா என்ன பண்றது? பிரியா சொல்லும் அத்தனை விஷயமும் முழு பொய்தான்.சாதாரண தொண்டரான என்னை முதல்வர் பெருந்தன்மையாக மேயர் ஆக்கியிருக்கார். என்னோட வளர்ச்சியை பிடிக்காத எங்க கட்சி நபர்கள் செய்ற விஷம தூண்டுதல்தான் இதெல்லாம் ‘’என்றார்.என்னான்னு கொஞ்சம் கவனிங்க முதல்வரே!- எஸ்.ஷக்தி