`நாத்து நட்டு எட்டு மாசமாகியும் நெல்லு விளையல...வெறும் தோகைதான் கரும்புக் கணக்காக விளைஞ்சிருக்கு' எனக் கண்ணீர் வடிக்கிறார், தருமபுரி விவசாயி ஒருவர். வேளாண் அதிகாரிகளின் வார்த்தையை நம்பி அவர் ஏமாந்துபோனதுதான் கொடுமை. தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த சென்னம்பட்டியைச் சேர்ந்த விவசாயி அண்ணாதுரையிடம் பேசினோம். “எனக்குச் சொந்தமான சுமார் 6 ஏக்கர் நிலத்தில கரும்பு, வாழை, மக்காச்சோளம், மஞ்சள், நெல் என விளைவிச்சுட்டு வர்றேன். உணவு முறையை ஊக்குவிக்கறதுக்காக பாரம்பரிய நெல் விதைகளை வேளாண்துறையே விற்பனை செய்யறதா கேள்விப்பட்டேன். உடனே, மொரப்பூர் வேளாண் ஆபீஸ் போய் கருப்பு கவுனி நெல், சீரக சம்பா நெல்லுன்னு தலா மூனு கிலோ வாங்கினேன். இதுல ஒரு கிலோ 100 ரூபாய். கடந்த ஜனவரி மாசம் நாத்துவிட்டு பிப்ரவரி மாதத்தில் நட்டு வச்சேன். எட்டு மாசம் ஓடிப்போயிருச்சு. கருப்பு கவுனி ரகத்தில் நெல் கதிரே வரலை. அதுக்கு மாறா கரும்பு போல தோகை வளர்ந்து நிக்குது. அதேநேரத்தில், சீரக சம்பா நெல்லு அறுவடைக்கு வந்துச்சு. ஆனால், விளைச்சல் குறைவு. இதனால கடுப்பாகி, ‘வந்து பாருங்க’ன்னு மொரப்பூர் வேளாண் அதிகாரிகள்கிட்ட சொன்னேன். அவங்களும், ‘கருப்பு கவுனி நெல்லுன்னா அப்படித்தான் இருக்கும். ஒரு மருந்து வாங்கி தெளி’ன்னு எழுதிக் கொடுத்தாங்க. அதை தெளிச்சும் பலனில்லை..விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் புகார் கொடுத்தேன். வேளாண் அதிகாரிகள் ஓடோடி வந்தாங்க. ‘நீங்க சரியான பட்டத்துல விதைக்கல... அதனாலதான் நெல் அறுவடைக்கு வரலை’னு காரணம் சொன்னாங்க. ‘அப்புறம் எதுக்கு பட்டம் இல்லாத சீசனில் நெல் விதைகளை விற்பனை செஞ்சீங்க?’னு கேட்டேன். ‘அதிகாரிகள் பிரஷர்’னு சொல்றாங்க. இவங்களால காலவிரயமும் அறுபதாயிரம் நஷ்டம் ஆனதுதான் மிச்சம். அந்த சீசன்ல தக்காளி போட்டிருந்தா 1 லட்சம் வந்திருக்கும். லாபமும் பார்த்திருப்பேன். நட்ட பயிரை அறுத்து மாடுகளுக்கு இப்போது தீவனமா கொடுக்கறேன். வேளாண்மை இணை இயக்குநர் விஜயாவிடம் முறையிட்டால், நான் கொடுத்த ரசீதை கிழித்துவிட்டு என் மேலயே புகார் சொல்றார்” என்றார் கண்ணீருடன்.. தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராமகவுண்டர், ``பாரம்பரிய நெல் விதைகளை வாங்கி பராமரிக்கும் விவசாயிகளுக்கு 3 லட்சம் ஊக்கத்தொகை அளிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கு ஆசைப்பட்டு பல விவசாயிகள் பாரம்பரிய நெல் விதைகளை வாங்கியிருக்கிறார்கள். அண்ணாதுரை மட்டும்தான் மாட்டிக்கொண்டிருக்கிறார். மற்றவர்கள் சுதாரித்துவிட்டனர். பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகாரிகள் கொடுத்திருந்தால் சிக்கல் வந்திருக்காது” என்றார். விவசாயியின் புகார் குறித்து, மொரப்பூர் வேளாண் உதவி அலுவலர் ரங்கநாதன் மற்றும் தருமபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் விஜயாவிடம் விளக்கம் கேட்டு, பலமுறை தொடர்பு கொண்டும் பதில் வரவில்லை. இறுதியாக, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தைத் தொடர்புகொண்டோம். அவரிடம் இருந்தும் பதில் வராததால் வாட்ஸ்ஆப்பில் தகவல் அனுப்பினோம். அதற்கும் பதில் இல்லை. இப்படியிருந்தால், விவசாயம் எப்படி செழிக்கும்? - பொய்கை. கோ.கிருஷ்ணா