சிவாஜிக்கு கைகூடாமல் போய், கமல்ஹாசனுக்கு இன்றுவரை கனவாக மட்டுமே உள்ள ஆஸ்கர் விருதை, `தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' படத்துக்காக கார்த்திகி கான்சால்வ்ஸ் வாங்கியபோது உலகமே வியந்தது. தற்போது அவர் மீதும் சர்ச்சைகள் அணிவகுப்பதுதான் ஊட்டியின் ஹாட் டாபிக்.நீலகிரி மாவட்டம், முதுமலையைச் சேர்ந்த பழங்குடியின தம்பதி பொம்மன் -பெள்ளி. யானைகளைப் பராமரிக்கும் இவர்களை முன்வைத்து, `தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்படம் வெளியானது. இந்தப் படம் ஆஸ்கர் விருதை வென்று சாதனை படைத்தது.இதையடுத்து, பொம்மன்-பெள்ளி தம்பதியை அழைத்து பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும், பெள்ளிக்கு காவடி என்ற அரசு வேலையை கொடுத்தார். இது பாகனுக்கு உதவியாக யானையைப் பராமரிக்கும் பணி ஆகும். கூடவே, ரூ.1 லட்சத்தையும் கொடுத்து கௌரவித்தார்.கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி முதுமலை, தெப்பக்காடு வனப்பகுதிக்கு வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவும் பொம்மன்-பெள்ளி தம்பதியை பாராட்டினார். இந்தநிலையில், ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கான்சால்வ்ஸ் மீது யானைத் தம்பதி வைத்துள்ள குற்றச்சாட்டுகள், பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன..கூடவே, 2 கோடி ரூபாயைக் கேட்டு ஆவணப்படத்தை தயாரித்த ஷிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் இயக்குநர் கார்த்திகி ஆகியோருக்கு சட்டரீதியான நோட்டீஸையும் அனுப்பியுள்ளனர்.``என்ன நடந்தது?'' என பெள்ளியிடம் பேசினோம். “கேமராவும் கையுமா அந்த பொண்ணு கார்த்திகி வந்துச்சுங்க. ‘உங்களையும் யானைகளையும் படமாக்கப் போறோம்’னு சொன்னப்ப ‘இங்கே போட்டோ எடுக்கக்கூட ஃபாரஸ்ட் அதிகாரிங்க விடமாட்டாங்களே’ன்னு சொன்னேன். உடனே, ‘எல்லா அனுமதியும் வாங்கியாச்சு. நீங்க தைரியமா பண்ணுங்க’ன்னு சொல்லுச்சு. ரெண்டு வருஷமா எங்களையும் யானைகளையும் வெச்சு வீடியோ எடுத்துட்டே இருந்தாங்க.கார்த்திகிகூட நல்லா பழக ஆரம்பிச்சோம், எங்க பொண்ணு மாதிரியே பார்த்துகிட்டோம். சிலநாள் அந்தப் பொண்ணு வீடியோ எடுக்க வரும், சில நாள் உதவியாளுங்களை அனுப்பி வீடியோ எடுத்துக்கும். அந்த ஆளுங்களுக்கு எங்க கையால சில தடவை சமைச்சும் கொடுத்திருக்கேன். இப்படித்தான் போச்சு அந்த நாளெல்லாம்.நானும் பொம்மனய்யாவும் கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி வீடியோ எடுக்கிறதுக்காக நிஜமாவே மரத்தடி கோயில்ல கல்யாணம் நடத்தினாங்க. இதுல விஷயம் என்னான்னா, ஊர் மக்களுக்கு சாப்பாடு, கோயிலுக்கான செலவு, புதுத் துணிகள்னு எல்லாமே எங்க செலவுதான். ‘கல்யாண செலவுக்கு இப்போதைக்கு உங்க பணத்தைக் கொடுங்க, அப்புறமா திருப்பி தர்றேன்’ன்னு அந்த பொண்ணு கார்த்திகி சொல்லுச்சு. நானும் நம்பி சம்மதிச்சேன்.என் பொண்ணு இறந்தப்ப வந்த பணத்தை போஸ்ட் ஆபீஸ்ல என் பேத்திக்காக போட்டு சேர்த்து வெச்சிருந்தேன். அதுல இருந்து ஒரு லட்சத்தை எடுத்து செலவு பண்ணினோம். ஆனா, அந்தப் பணத்தை கார்த்திகி திரும்ப தரலை. இந்த ஆவணப்படத்துல நடிக்கிறதுக்காக எங்களுக்கு வீடு கட்டி தருவேன், கார் வாங்கி கொடுக்குறேன், பேங்க்ல பணம் போட்டுவிடுவேன்னு அந்தப் பொண்ணு சொல்லுச்சு.எங்களுக்கு இதெல்லாம் தரப்போறதா ஊர்ல சில பேருக்கும் அந்தப் பொண்ணு சொல்லுச்சு. ஆனால், எதுவுமே நடக்கல, எங்களுக்கு எதுவும் கொடுக்கல. எனக்கு இப்ப அரசு வேலை கிடைச்சிருக்குது, அதுவே போதும். ஆனா ரொம்ப வெள்ளந்தியா இருந்து அந்தக் கார்த்திகிகிட்ட ஏமாந்துட்டோம். யானை மேய்க்கிறவங்கதானேன்னு எங்களை ஏமாத்திடுச்சோ என்னவோ, சரி அந்தப் பொண்ணு நல்லா இருக்கட்டும்” என்றார். தன் மனைவி பெள்ளி சொல்வதை பொம்மனும் ஆமோதித்தே பேசினார்..ஆஸ்கர் இயக்குநர் மீது இப்படி ஒரு புகார் கிளம்பியிருக்கும் நிலையில், ‘ஆஸ்கர் எனும் உலகப்புகழ் விருது கொடுக்குமளவுக்கு அந்த ஆவணப்படத்தில் என்ன தனிச்சிறப்பு இருக்கிறது? இதைக் கண்டுபிடித்து சொல்பவருக்கே ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்’ என்று திரைத்துறையினர் சிலரே சமூக வலைதளங்களில் பட்டாசுகளை கொளுத்திப் போடுகின்றனர்.பெள்ளியின் புகார் குறித்துப் பேசுவதற்காக ஆவணப்பட இயக்குநர் கார்த்திகியின் மொபைல் எண்ணில் அழைத்தோம். ஆனால் அது ஏற்கப்படவில்லை. ஊட்டியை சேர்ந்த அவரது உறவினர்கள் நம்மிடம், ``கார்த்திகி வெளிநாட்டில் இருக்கிறார். பொம்மன், பெள்ளியை குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் பாராட்டவும் உலகப்புகழ் கிடைக்கவும் ஒரே காரணம் கார்த்திகிதான். அதற்கான பலன்தான் இந்த புகாரெல்லாம்'' என நொந்துபோய் பேசினர்.தொடர்ந்து, ``ஆவணப்படத்தை எடுத்ததன் நோக்கம் என்பது, யானைப் பாகன்களின் சிரமங்களையும் அவர்களின் தொடர் முயற்சிகளையும் வெளிக்காட்டுவதுதான். இந்தப் படத்தின் மூலம் யானைப் பாகன்களுக்கு மிகப் பெரும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. பொம்மன்-பெள்ளி கூறும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை. என்ன நடந்தது என்பது குறித்து விரைவில் கார்த்திகி பேசுவார்'' என்றதோடு முடித்துக் கொண்டனர்.யானைகளை வைத்து இப்படியொரு சர்க்கஸா?-எஸ்.ஷக்தி