எப்போதும் `ஜென்' மனநிலையிலேயே இருப்பதில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி சுதர்சன நாச்சியப்பனை மிஞ்ச முடியாது. மீண்டும் காங்கிரஸ் தலைவர் ரேஸில் அவரது பெயர் அடிபடவே, `ஒருகாலத்தில் இந்தப் பதவிக்காக தவமிருந்தேன். இப்போது எந்த எதிர்பார்ப்பும் இல்லை' என பற்றற்ற முனிவர்போல பேசியவரை இடைமறித்து கேள்விகளை முன்வைத்தோம். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றப்பட வாய்ப்புள்ளதா? ஒரு கட்சிக்குள்ளே யாரை கொண்டு வந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்பதை அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும். தலைவர் பதவிக்கு முயற்சி செய்யும் தலைவர்கள் பேட்டி கொடுத்து ஒரு கருத்தை உருவாக்குகிறார்கள். ஒரு காலத்தில் நானும் கேட்டேன். சோனியாதான் எனக்கு ராஜ்யசபா எம்.பி., பதவியை கொடுத்தார். நாடாளுமன்ற நிலைக்குழு தலைவராகவும் அமைச்சராகவும் ஆக்கினார். எனவே, அவரே முடிவு செய்யட்டும். ராகுலின் அரசியல் பயணத்தை பிரதமர் மோடி முடக்கப்பார்ப்பதாக காங்கிரஸ் விமர்சிக்கிறதே? ஓர் அவதூறு வழக்கின் அடிப்படையில் நீதிமன்றத்தால் ராகுல் தண்டிக்கப்பட்டார். நாடாளுமன்றத்துக்கு வரமுடியவில்லையே தவிர, மக்கள் பணிகளில் இருந்து ராகுல் ஒதுங்கவில்லை. மத்திய அரசின் தவறுகளை தொடர்ந்து சுட்டிக்காட்டினார். இப்போது மீண்டும் நாடாளுமன்றம் செல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரை முடக்கிப்போட யார் நினைத்தாலும் அது முடியாது. மோடியை எதிர்க்க ராகுல் காந்தியால் முடியுமா என்ன? காங்கிரஸை பொறுத்தவரை சிறந்த வழிகாட்டியாக திகழ்கிறார் ராகுல். இந்தியாவை பொறுத்தவரை மோடி வெர்சஸ் ராகுல் என்ற இமேஜ் உருவாகிவிட்டது. அதை காலப்போக்கில் எப்படி கட்டமைக்கப்போகிறோம் என்பதை பொறுத்துதான் எங்களின் வெற்றி இருக்கிறது. காங்கிரஸை பொறுத்தமட்டில் ஒரே தலைமைதான். இந்தியா கூட்டணியில் முரண்பாடுகள் இருப்பதாக தகவல் வருகிறதே? பிரிவினை இல்லாத ஒரு நாட்டை உருவாக்க மாநில கட்சிகள் இணைந்து செயல்படுகின்றன. வளர்ச்சிக்காக அவை ஒன்று சேர்கின்றன. இந்தியா கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் இதுவரை மூன்று முறை கூடிப் பேசிவிட்டார்கள். அவர்களுக்கு இடையில் சில முரண்பாடுகள் இருக்கின்றன. இது காலப்போக்கில் சரிசெய்யப்படும். பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு ஒற்றுமையான முடிவுக்கு வந்துவிடுவார்கள். அமைச்சர் உதயநிதியின் சனாதன பேச்சு, இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதே? தி.மு.க.வின் கொள்கையைத் தெரிந்துகொண்டுதான் கூட்டணியில் எல்லோரும் ஒன்றுசேர்ந்துள்ளனர். சனாதனத்தைப் பற்றியோ சனாதன ஒழிப்பை பற்றியோ பேசுவதற்காக இக்கூட்டணி உருவாக்கப்படவில்லை. இந்திய நாட்டின் வளர்ச்சிக்கும் இந்திய மக்களை உள்ளடக்கிய வளர்ச்சிக்காகவும்தான் இந்தியா கூட்டணி உருவானது. எனவே, சனாதன எதிர்ப்பு என்பது கூட்டணியில் எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தவில்லை. கூட்டணியில் இருக்கும் ஒரே பிரச்னை, மாநில நலன் சார்ந்ததுதான். ராகுல் பிரதமராக வாய்ப்பு இருக்கிறதா? இந்தியா கூட்டணியில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு மாறுபட்ட கருத்து இருக்கிறது. இந்த நேரத்தில் ‘இவர்தான் பிரதமர்’ என்பதைச் சொல்லி குழப்பத்தை உருவாக்க விரும்பவில்லை. கூட்டணி ஜெயித்த பிறகு பிரதமரை முடிவு செய்வோம். அதுவரை எதையும் உறுதி செய்ய முடியாது. இந்தியாவை ‘பாரத்’ என பெயர் மாற்றுவது சரியா? இந்தியா என்ற பாரதம் என்றுதான் அரசியல் சட்டம் ஆரம்பிக்கிறது. புதிதாக ’பாரதம்’ வரவில்லை. இந்தி பேசுபவர்கள் இந்தியா என சொல்லமாட்டார்கள். பாரதியார்கூட ’பாரத் மாதா கீ ஜெய்’ என்றுதான் சொல்கிறார். `பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்’ என்கிறார். ஈரானியர்கள் இங்கு வந்து நிலப்பரப்பின் அடிப்படையில் வைத்த பெயர்தான் இந்தியா. இதைத் தவறு என சொல்ல முடியாது. `ஒரே நாடு ஒரே தேர்தல்' சாத்தியமா? இது நடைமுறையில் சாத்தியம் இல்லை. 11 மாநிலங்களின் ஆட்சியை 5 ஆண்டுகளுக்குள் கலைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அரசியல் சட்டத்தை திருத்தவேண்டும். அப்படி திருத்தினால் விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லும். அது தேவையா இல்லையா? என்பதை நீதிமன்றம்தான் அந்த ரிஸ்க்கை மோடி அரசு எடுக்காது. ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள பா.ஜ.கவில் உட்கட்சி பிரச்னை இருக்கிறது. எனவே, இதை மறைக்க நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து மாநில தேர்தலையும் நடத்த வேண்டும் என மோடி நினைக்கிறார். மீண்டும் சிவகங்கையில் போட்டியிடுவீர்களா? நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கையில் போட்டியிடுவேனா இல்லையா என்பது என் கையில் இல்லை. கட்சி சொல்வதை செய்வேன். வாய்ப்பு என்பது ஆசைப்படுபவர்களுக்குத்தான் கிடைக்கும். நான் சொல்வதைக் கேட்கும் தொண்டனாக மட்டுமே இருக்கிறேன். கேஸ் மற்றும் பெட்ரோலை குறைந்தவிலையில் தர முடியும் என உத்தரவாதம் கொடுக்க முடியுமா? பொதுமக்களை மிகவும் பாதித்துள்ள கேஸ் மற்றும் பெட்ரோலை மிக குறைந்த விலையில் எங்களால் தரமுடியும். உலக சந்தை மதிப்பில் கச்சா ஆயிலின் மதிப்புக்கு ஏற்ப கேஸ் மற்றும் பெட்ரோலை விற்பனை செய்வோம். 500 ரூபாய்க்கு சிலிண்டர், 60 ரூபாய்க்கு பெட்ரோல் என்பது இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நிச்சயம். - கணேஷ் குமார்