”நாள்தோறும் காலையில் கட்சியினரால் எந்த புது பிரச்னையும் உருவாகி இருக்கக் கூடாது என்ற நினைப்போடுதான் கண் விழிக்கிறேன். அமைச்சர் உள்ளிட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகள், என்னை தூங்கவிடாமல் செய்கின்றன…” - பொதுவெளியில் ஒரு முதல்வரால் பகிரங்கமாக இதற்கு மேல் எப்படி தனது உணர்ச்சியைக் கொட்டித் தீர்க்க முடியும்? இதைச் சொல்லி கிட்டத்தட்ட 11 மாதங்கள் ஆகின்றன. திருந்துவதாக தெரியவில்லை கட்சி நிர்வாகிகள். இப்போது அடுத்த எபிசோட்! “தி.மு.க. முதல்முறையாக ஆட்சிக்கு வந்தபோது பேரறிஞர் அண்ணா மகிழ்ச்சி அடையவில்லை. மாறாக, கவலைப்பட்டார். எதற்காக? இனி கட்சி என்ன ஆகுமோ? என்பதற்காகத்தான். அதே கவலை தற்போது எனக்கும் ஏற்பட்டுள்ளது. அதற்குக் காரணம் நீங்கள்தான்” - ஆகஸ்ட் 5ம் தேதி சென்னையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கலக்கத்துடன் பேசிய வார்த்தைகள் இவை! கட்சி நிர்வாகிகள் செய்யும் அட்ராசிட்டிகளின் வெளிப்பாடு இது. “என்ன நடந்தது, ஸ்டாலினுக்கு ஏனிந்த கலக்கம்?” என்று தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். “ஆகஸ்ட் 5-ம் தேதி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நடந்தது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய கூட்டத்தில் 72 மாவட்டச் செயலாளர்களும் கலந்துகொண்டனர். ஸ்டாலின் ஆரம்பத்தில் கூலாகதான் ஆரம்பித்தார்… ‘தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழா என்று சொல்கிறோம் என்றால் அதுவும் தேர்தல் பரப்புரையில் ஒரு அங்கம்தான். தலைவர் கலைஞர் பெயரைச் சொல்லி பொதுமக்களின் கவனத்தை நம்மை நோக்கி ஈர்த்தாக வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாம் இப்போதே தயாராகிவிட்டோம். வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40-க்கு 40 இடங்களையும் தி.மு.கழக தலைமையிலான கூட்டணி கைப்பற்றும் வகையில் நம்முடைய பரப்புரையை தொடங்கியிருக்கிறோம். பா.ஜ.க.வை பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே வைக்கலாமா என யோசிப்பதாக டெல்லியிலிருந்து நமக்கு வரும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. அதனால் நாடாளுமன்றத் தேர்தலை எப்போது அறிவித்தாலும், அதனை சந்திக்க தி.மு.க. தயாராக இருக்க வேண்டும். ஆகவே, பூத் கமிட்டிகளை பலப்படுத்தும் பணிகளை மாவட்டச் செயலாளர்கள் விரைந்து மேற்கொள்ள வேண்டும். அதேபோல் ஆளும்கட்சியாக இருந்துகொண்டு நாம் புதிய உறுப்பினர் சேர்க்கையில் பெரிதாக சாதிக்கவில்லை. இதற்குக் காரணம் நிர்வாகிகள் புதிய உறுப்பினர் சேர்க்கையில் ஆர்வம் காட்டாததுதான்…” என்ற முதல்வரின் முகம் சற்றே மாறியது, தொடர்ந்து கடுமையாக பேச ஆரம்பித்தார்” என்றவர், அதற்கான பின்னணியை விவரித்தார். “செந்தில் பாலாஜியின் துறையை முத்துசாமிக்கு ஒதுக்கியப் பிறகு, நடந்த அலப்பரைகள் தமிழகம் அறிந்தது. டாஸ்மாக் சரக்கை டெட்ரா பேக்கில் கொண்டு வரவும், வேலைக்குச் செல்லும் கூலித் தொழிலாளர்களின் நலன் கருதி ஏழரை மணிக்கே டாஸ்மாக் கடையை திறக்கவும் பரிசீலித்து வருவதாகக் கூறி விமர்சனத்திற்கு உள்ளானார். அதேபோல் நெல்லை மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் மாநகராட்சி கவுன்சிலர்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து மேயருக்கு குடைச்சல் கொடுத்ததால் பதவி இழந்தார். மகளிர் உரிமைத் தொகை வழங்குவது தொடர்பான முகாமில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடியிடம் விழுப்புரம் பெண்கள் தக்காளி விலை உயர்வு குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு, மோடியைப் போய் கேளு, நாங்க ஆயிரம் கொடுக்கிறோம், அதைப்பத்தி மட்டும் கேளுÕ என பொன்முடி வாய்த்துடுக்காய் பதிலளித்தது சர்ச்சையானது..ஆகஸ்ட் 3-ம் தேதி தீரன் சின்னமலை பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் சென்னை மேயர் ப்ரியா ராஜனை, முன்னாள் எம்.எல்.ஏ., ரங்கநாதன் கையை இறுகப் பிடித்து அருகில் நிற்க வைத்திருக்கிறார். அப்போது மேயர் ப்ரியா அவரது பிடியிலிருந்து திமிறி உதறிய சம்பவமும் வீடியோவாக வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவும் உளவுத்துறை மூலம் உடனடியாக ஸ்டாலின் கவனத்துக்கு சென்றது. அதிர்ச்சி அடைந்தவர், யதேச்சையாக நடந்ததா அல்லது உள்நோக்கத்துடன் இப்படி நடந்துக்கொண்டாரா என்பது குறித்து விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறார். இது மட்டுமல்ல, மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடுமையைக் கண்டித்து கடந்த ஜூலை மாதம் மகளிரணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது தென்காசியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் சிவபத்மநாபனும், மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவி தமிழ்ச்செல்வியும் மீடியாக்கள் முன்னிலையில் கடுமையாக மோதிக்கொண்டார்கள். ‘நம்மக் கட்சிக்குள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கா? நீங்க மணிப்பூரைப் பத்தி பேச வந்துட்டீங்க’ என்று கொந்தளித்தார் தமிழ்ச்செல்வி. அப்போது தமிழ்செல்வியிடம் இருந்து மைக்கைப் பிடுங்கிய சிவபத்மநாபன், மிகவும் தரம் தாழ்ந்த வார்த்தைகளால் அவரை வசைபாடினார். இதுவும் வீடியோவாக வெளியாகி தலைவர் ஸ்டாலினை அதிர்ச்சி அடைய செய்துவிட்டது. ‘நமது கட்சியினரா இப்படி பேசுவது?’ என்று நொந்துவிட்டார். அப்போதே மாவட்டச் செயலாளர் சிவபத்மநாபனின் பதவியைப் பறித்து உத்தரவிட்டார். இதேபோல அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் அவரது மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போதும் கட்சி நிர்வாகிகள் அமைச்சர் முன்னிலையிலேயே கடுமையாக மோதிக்கொண்டனர். கைகலப்பு சூழல் ஏற்பட்டது. இதுவும் ஸ்டாலின் கவனத்துக்குச் சென்று கடுமையாக டென்ஷன் ஆனார். இதை எல்லாம் மனதில் வைத்துதான் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின், ’பலர் கட்சியில் சீனியராக இருந்துகொண்டு இப்படிச் செயல்படுவது எனக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. கட்சி என்பது அனைத்து தொண்டர்களுக்கும் பொதுவானது. நிர்வாகிகளுக்கு மட்டுமே கட்சி சொந்தம் இல்லை. இனியாவது நான் சொல்வதைக் கேட்டு பொது நிகழ்ச்சிகளில் கண்ணியத்தை கடைபிடியுங்கள். திரும்பத் திரும்ப ஒரு விஷயத்தைச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அமைச்சர்கள் - மாவட்டச் செயலாளர்கள் சிலரிடையே ஒற்றுமை இல்லை என்று எனக்கு தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. மாவட்டச் செயலாளர்களும் அமைச்சர்களும் ஒன்றாக செயல்படுவதே மிக முக்கியம். நட்பாக இருங்கள். உங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளைப் பேசி சரி செய்யுங்கள். அதுதான் கட்சிக்கும் நல்லது. உங்களுக்கும் நல்லது. முக்கியமாக யாரும் யாரையும் ஒருமையில் பேசவேண்டாம். அதுபோலவே ஆட்சியும் அனைவருக்கும் பொதுவானது, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமே ஆட்சி சொந்தமல்ல. தி.மு.க. முதல்முறையாக ஆட்சிக்கு வந்தபோது பேரறிஞர் அண்ணா மகிழ்ச்சி அடையவில்லை. கவலைதான் பட்டார். இனி கட்சி என்ன ஆகுமோ என்று வருத்தப்பட்டார். அதே கவலை, வருத்தம் தற்போது எனக்கும் ஏற்பட்டுள்ளது. அதை நீங்கள்தான் ஏற்படுத்தியுள்ளீர்கள். தலைவர் கருணாநிதி கட்சியையும் ஆட்சியையும் ஒருசேர வளர்த்தெடுத்தார். நானும் தலைவர் வழியில் கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்திச் சென்றுவிடலாம் என நினைக்கிறேன். ஆனால், எனக்கு கட்சியில் மாவட்ட செயலாளர்களும் ஆட்சியில் அமைச்சர்களும் ஒத்துழைப்புத் தருவது கிடையாது. தொண்டர்கள் மத்தியில் மாவட்ட செயலாளர்கள் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மாவட்ட செயலாளரை மாற்றுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லைÕ என்றவர், மீண்டும் பா.ஜ.க. நடவடிக்கை குறித்து பேசினார்..பா.ஜ.க.வை பொறுத்தவரை இது அவர்களுக்கு வாழ்வா, சாவா தேர்தல். மீண்டும் ஆட்சியைப் பிடிக்க எதையும் செய்வார்கள். தமிழ்நாட்டில் அவர்கள் எடுக்கின்ற முயற்சிகள் எல்லாம் தோல்வியே அடைந்திருக்கின்றன. அதனால் கோபம் அதிகமாகும். நம்மை நோக்கிப் பாய்வார்கள். கடந்த காலங்களில், இதுமாதிரி பல தடைகளை சமாளித்துத்தான் நம்முடைய கழகம் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த முறையும் நாம் முழுமையான வெற்றியைப் பெறவேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம்’ என்று கலக்கத்துடன் பேசி முடித்தார்” என்று விரிவாக சொல்லி முடித்தார் அந்த நிர்வாகி. ஸ்டாலின் ஆவேசப்பட்டது பற்றி விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான செஞ்சி மஸ்தானிடம் பேசினோம். “மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பல அறிவுரைகளை தலைவர் கொடுத்தார். ’அடிமட்டத் தொண்டனாக இருந்துதான் பொறுப்பிற்கு வந்தோம் என்பதை முதலில் உணரவேண்டும். கட்சி அடிமட்டத் தொண்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரவேண்டும். எல்லோரையும் அரவணைக்க வேண்டும், எல்லாரையும் அனுசரிக்க வேண்டும்’ என்று அனைவருக்கும் தலைவர் அறிவுரை வழங்கினார். குறிப்பாக, எனக்கு தலைவர் சொன்ன அறிவுரைகளை ஏற்றுக்கொண்டு செயல்படும் தொண்டனாக நான் இருப்பேன்” என்றார். சொந்தக் கட்சிக்கே சூனியம் வைக்கலாமா? - பாபு படங்கள் : ம.செந்தில்நாதன்