அப்பாவிகளின் ஆசையைத் தூண்டி, அவர்களை ஏமாற்றும் அயோக்கியர்களுக்கு எண்ட் கார்டு இல்லவே இல்லை என்பதற்கு சமீபத்திய உதாரணம், புதுக்கோட்டை ஜெரால்டு. தலைமைச் செயலாளர் இறையன்புக்கு நெருக்கம் என்று சொல்லியே நடந்திருக்கிறது, மெகா சுருட்டல்.ஏமாந்தவர்களில் ஒருவரான சிவானந்தம், ‘’நான் டிரைவரா இருக்கேன். கடந்த 2021 ல கலைசெல்வங்கிறவரு எனக்கு ஜெரால்டை அறிமுகப்படுத்தி வச்சாரு. அஞ்சு லட்ச ரூபாய் குடுத்தா உங்களுக்கு அரசாங்க டிரைவர் வேலை வாங்கித்தர்றேன்னு சொன்னாரு. அவர் பேச்சை நம்பி கொஞ்சம் கொஞ்சமா 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை குடுத்துட்டேன். அவரு சி.எம்.னு ஒரு வாட்ஸ் ஆப் குழு ஆரம்பிச்சி எங்களோட ரோல் நம்பர், ரெஜிஸ்ட்ரேஷன் நம்பரெல்லாம் போட்டு காலையில அட்டென்டன்ஸ் போடச் சொன்னாரு. என்னோட சேத்து பதினோரு பேரு அதே மாதிரி போட்டுக்கிட்டு இருந்தோம். 2022ல மலையூர்ல ஒரு மண்டபம் புடிச்சி, அவரிடம் பணம் கட்டுனவங்க குடும்பங்களை அழைச்சி ஒரு விழா மாதிரி நடத்துனாரு. புதுக்கோட்டை கலெக்டர் இந்த ஃபங்ஷனுக்கு வர்றாருன்னு பேனர் வச்சாரு. ஆனா யாரும் வரலன்னதும் சந்தேகப்பட்டு நெருக்க ஆரம்பிச்சோம். எங்க ஊரு பெரியவங்க கிட்ட சொல்லி பஞ்சாயத்து பேசினோம். ஒரு மாசத்துல வேலை வரலனா பணம் தந்தர்றேன்னு சொல்லிட்டு காஞ்சிபுரம் போய்ட்டாரு. அதன் பிறகு அவரை பிடிக்க முடியலைன்னதும் புகார் குடுத்துட்டோம்’’ என்றார்..தொடர்ந்து பேசிய காஞ்சிராங்கொல்லை முத்துச்சாமி, ‘’என்னோட அக்கா பையன் கலைச்செல்வனிடம் காஞ்சிபுரம் ஹூண்டாய் கம்பெனியில் வேலை பார்க்கிறதா சொல்லியிருக்கான் ஜெரால்டு. அவன் சொன்னதை அப்படியே நம்பியிருக்கான் கலைச்செல்வன். ஜெரால்டின் உறவுமுறையில் தம்பி தலைமைச்செயலாளர் இறையன்புன்னு சொல்லியிருக்கான். அதை நம்பி கலைச்செல்வன் என்கிட்டே, ’இறையன்பு எனக்கு வேலை போட்டுத் தர்றேன்னு சொல்லியிருக்காரு. எனக்கு அஞ்சு லட்ச ரூபாய் பணம் வேணும்’னு கேட்டான். அவ்வளவு குடுக்க முடியாதுன்னு 3 லட்சத்தைக் குடுத்தேன்.அதுக்குப்பிறகு எனக்கு யாருமில்ல நீங்க தான் எனக்கு கல்யாணம் செஞ்சி வைக்கணும்னு ஜெரால்டு வந்துட்டான். என்னை வளர்த்ததே இறையன்புன்னு சொல்லி எங்கள தேவகோட்டைக்கு அழைச்சிக்கிட்டு போய் ஒரு சைட்டை காட்டுனான். இந்த இடம் இறையன்பு சாருக்கு சொந்தமானதுன்னு காட்டுனான். நானும் அதை நம்பி என்னோட அத்தை பொண்ணு வித்யாவை கல்யாணம் செஞ்சி குடுத்தேன். இறையன்பு சார் தாலி எடுத்துக் குடுத்தாத்தான் கல்யாணம் நடக்கும்னு சொல்லி பெரிய செலவு பண்ண வச்சான். ஆனா யாருமே கல்யாணத்துக்கு வரல. கேட்டதுக்கு, உக்ரைன் போரில் சொந்தக்காரங்க இறந்துபோனதால அவரு வரலன்னு காரணம் சொல்லி ஏமாத்திட்டான்...’’ என்றார் வருத்தத்துடன்..சீட்டிங்கிற்கு பிள்ளையார் சுழி போட்ட கலைச்செல்வத்திடம் பேசினோம். ’’என்னை காஞ்சிபுரத்துக்கு அழைச்சிக்கிட்டு போய் வேலை வாங்கித்தர்றேன்னு சொல்லி பணம் வாங்கினாரு. வாங்கின பணத்துக்கு இறையன்பு சார் கையெழுத்து போட்ட அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் குடுத்தாரு. மாசம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் குடுத்தாரு. ஆறுமாசம் சம்பளம் குடுத்துக்கிட்டு இருந்தவரு அப்புறம் குடுக்கல. எனக்கு சம்பளம் குடுத்ததால நானும் மத்தவங்களுக்கு நம்பிக்கையா சொன்னேன்.திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் ஆபீஸ்க்கு என்னை அழைச்சிக்கிட்டு போவாரு. நான் காரு ஓட்டிக்கிட்டு போவேன். அங்க போனதும், ‘இந்த நம்பருக்கு பணம் போடுங்க’ன்னு சொல்லிட்டு ஆபீஸ் உள்ளே போயிடுவார். அரைமணி நேரம் கழிச்சி வந்துடுவார். எங்க பகுதியில பதினோரு பேருகிட்டயும், புதுக்கோட்டை காந்திநகர் பகுதில நாலஞ்சு பேருகிட்டயும் இப்படி வேலை வாங்கித் தர்றேன்னு பணம் வாங்கியிருக்காரு. அப்புறம் தஞ்சாவூர் ஏலக்குறிச்சி கிராமத்திலும், காஞ்சிபுரத்துலயும் பணம் வாங்கியிருக்காரு. இறையன்பு சார் நம்பர், கண்ட்ரோல் ரூம் நம்பருன்னு அவர் பேசினது எல்லாமே அவரோட செல்போன் நம்பருதான்னு அவரோட மனைவி வித்யா சொன்னபிறகுதான் எல்லாம் புரிஞ்சது... போலீஸ்ல புகார் கொடுத்திருக்கிறோம்’’ என்றார்..ஜெரால்டின் மனைவி வித்யாவை தேடிச் சென்றோம். அவர் இல்லை என்றதால், அவரது தாய் ராசம்மாளிடம் பேசினோம். ‘’எனக்கு மூணு பொண்ணுங்க.. எம்பொண்ணு வித்யா கோயம்புத்தூர்ல நர்ஸ் வேலை பாத்துக்கிட்டு இருந்துச்சி. அப்பதான் முத்துச்சாமி நாங்க செலவு பண்ணி உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்குடுக்குறோம்னு சொல்லி இந்த பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க. அப்புறம்தான் அந்த பையனோட பித்தலாட்டம் எம்பொண்ணுக்கு தெரிய வந்துருக்கு. அது சம்பந்தமா கேட்டதும், ரெண்டு பேருக்குள்ள பிரச்சினை வந்து போயிட்டாரு. பத்து நாளைக்கி முன்னால காந்திநகர்ல இருந்து பத்து பதினஞ்சி பேரு வந்து உங்க மருமகன் எங்ககிட்ட பணம் வாங்கி ஏமாத்தி இருக்காருன்னு எம்பொண்ணையும் என்னையும் அடிச்சிட்டாங்க. கழுத்துல கெடக்கிற செயினை வித்து அவங்க பணத்தைக் குடுக்க நினைச்சோம்.. அதுக்குள்ள போலீஸ் அவனை பிடிச்சுட்டாங்க... சாகப் போற காலத்துல இதையெல்லாம் பார்க்கணும்னு என் தலையில எழுதியிருக்கே...’’ என்று அழ ஆரம்பித்தார்..ஜெரால்டு மீது 5ம் தேதி புகார் கொடுத்த பிறகும், 15ம் தேதி வரை போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், புதுக்கோட்டை மாவட்ட சி.பி.எம் கட்சி போராட்டத்தை அறிவித்தது. அதன் பிறகே கைது நடவடிக்கையில் இறங்கியது போலீஸ். இதுகுறித்து சி.பி.எம். மாவட்டச் செயலாலர் கவிவர்மன், ‘’நாங்க போராட்டம் அறிவிச்ச பிறகுதான் காஞ்சிபுரத்தில் இருந்த ஜெரால்டை கைது செய்து ரிமாண்ட் செய்திருக்கிறார்கள். நேர்மையான அதிகாரிகளின் பெயரை தவறாக பயன்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கவே இத்தனை நாட்களாகிறது. ஒரு ஃபிராடை கைது செய்வதற்கும் போராட வேண்டியுள்ளது’’ என்று வருந்தினார்.காவல்துறை தரப்பில் பேசியதும், ‘’புகாரின் பேரில் ஜெரால்டை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியிருக்கிறோம். விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை நிச்சயமாக இருக்கும்’’ என்றனர். இப்படி பண்றீங்களேப்பா... - வீ.மாணிக்கவாசகம்.