-கரூர் அரவிந்த்கரூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தைக் கடந்து சென்றபோது, கண்ணில்பட்டது அந்த பகீர் போஸ்டர். ‘சிவபாரதி யார்? தாசில்தாரா, வருவாய் ஆய்வாளரா? பெண்களிடம் ஆசை வார்த்தை பேசும் சிவபாரதியைக் கைது செய்!’ - இப்படிப் போஸ்டர் அடித்து ஒட்டும் அளவுக்கு கரூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தின் பெயர் நாறிக்கிடக்கவே உடனடியாக ஸ்பாட்டில் ஆஜரானோம்....அங்கு கண்ணீருடன் நின்றிருந்தார் பெண்மணி ஒருவர். மெதுவாக அவரிடம் பேச்சுக் கொடுத்தோம்... “கரூர் மாவட்ட எல்லையான ரங்கமலைக்கு பக்கத்து கிராமத்துல வசிக்கிறேன். சில மாசத்துக்கு முன்னால, வி.ஏ.ஓ-வின் உதவியாளர் வேலைக்கு அரசாங்கம் தேர்வு நடத்தப்போறதா அறிவிப்பு வந்துச்சு. நானும் அதுக்காக அப்ளிகேஷன் போட்டேன்.என்னதான் தேர்வு எழுதினாலும் அரசியல்வாதிகளோட சப்போர்ட் இருந்தாத்தான் வேலை கிடைக்கும்னு சிலர் சொன்னாங்க.அதனால, அரசியல் சிபாரிச்சுக்கு யாரைப் பிடிக்கறதுன்னு விசாரிச்சப்போ, கரூர், அரவக்குறிச்சி பகுதி தாலூகா அலுவலகங்களில் புரோக்கராக இருக்கற நாசரைப்பத்தி சொன்னாங்க. நான் அவரைப் போய்ப் பார்த்தேன். விவரத்தைக் கேட்டவர், ‘தமிழக அமைச்சர்கள் பலரும் எனக்கு நெருக்கம். கொஞ்சம் பணம் செலவாகும்,வேலை வாங்கித்தர்றேன்’ன்னு சொன்னார். என்னால முடிஞ்ச அளவுக்குப் பணம் தர்றேன்னேன். சரின்னுட்டு என் மொபைல் நம்பரை வாங்கிக்கிட்டார்..ரெண்டு நாள் கழித்து போன் செஞ்சு, ‘உனக்கு வேலை கன்ஃபர்ம் ஆகியிடுச்சு, நான் திண்டுக்கல் வரைக்கும் போறேன் வா’ன்னு கூப்பிட்டார். ‘எதுக்காக வரணும்?’னு கேட்டதுக்கு, ‘சும்மா வா. டூவிலர்ல போறேன், ஜாலியா போயிட்டு வரலாம்’ன்னாரு.எனக்கு கோபம் வந்துடுச்சு. ‘நான் அதுமாதிரி பொம்பளை இல்லை. நான் கலெக்டர்கிட்ட மனு கொடுத்து வேலை வாங்கிக்கிறேன்’ சொல்லிட்டு போனைக் கட் பண்ணிட்டேன்.அப்புறமா விசாரிச்சப்பதான் என்னை மாதிரி கணவனை இழந்தவங்க, கணவனால கைவிடப்பட்ட ஆதரவற்ற பொண்ணுங்க அரசு நலத்திட்ட உதவி கேட்டு வி.ஏ.ஓ. ஆபீஸ், தாலுகா ஆபீஸுக்கு போகிறப்போ இவனை மாதிரி புரோக்கருங்க ஆசை வார்த்தை சொல்லி நாசமாக்குறது தெரிஞ்சது. அவங்ககிட்டே இருந்து மனுவோடு செல்போன் நம்பரையும் வாங்கிக்கிறானுங்க. அப்புறம் போன் பண்ணி, ‘புருஷன் இறந்த பிறகு, சாப்பாட்டுக்கு என்ன செய்யறே? புள்ளைங்கள எப்படிக் காப்பாத்தறேன்னெல்லாம் ஆதரவா கேட்கற மாதிரி கேட்டு மெதுவா வலை விரிச்சு, பொண்ணுங்கள சிக்க வைக்கிறானுங்க. இவனுங்க வலையில சிக்கற பொண்ணுங்களை, சில அதிகாரிகளுக்கும் சப்ளை செய்யறதால அவனுங்களை ஒண்ணுமே செய்ய முடியலை. அதனாலதான் இப்படியெல்லாம் போஸ்டர் அடிச்சு ஒட்டியும் கிழிச்செறிஞ்சுட்டு தைரியமா சுத்திவர்றானுங்க” மூக்கை சிந்தியபடி சொன்னவர், “இந்த மாவட்டத்துல ஆளும் கட்சியின் மாஜி பொருளாளர்தான் இப்போ இந்த விஷயத்துல நெம்பர் ஒன் புரோக்கர்” என்ற ரகசியத் தகவலையும் சொல்லிவிட்டு நகர்ந்தார். .இது குறித்து சாமானிய மக்கள் இயக்கத் தலைவர் சண்முகத்திடம் பேசினோம். “கரூர் தாலூகா அலுவலகத்தில் பேக்கேஜ் முறையில் லஞ்சம் வாங்குகிறார்கள். எங்கு திரும்பினாலும் புரோக்கர்கள் தென்படுகிறார்கள். அதிலும் கணவனை இழந்தோர் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட ஏழைப் பெண்களை ஆசை வார்த்தை கூறி வலை விரிக்கும் புரோக்கர்கள்தான் அதிகம். புரோக்கர்களாக தொழிலைத் தொடங்குபவர்கள், முதலில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல் கேட்டு தினமும் அதிகாரிகளுக்கு குடைச்சல் கொடுப்பார்கள். ஒருகட்டத்தில் அதிகாரிகளை வழிக்குக் கொண்டுவந்து தங்களின் புரோக்கர் தொழிலை ஜோராக துவங்குவார்கள். புரோக்கர்களுக்குள் யார் பெரியவர் என்கிற போட்டியால்தான் போஸ்டர் ஒட்டும் அளவிற்கு கரூர் தாலுகா அலுவலக மானம் கப்பல் ஏறியிருக்கிறது” என்றார். போஸ்டரில் உள்ள சிவபாரதியிடம் பேசினோம்... ”நான் புரோக்கர் கிடையாது. தகவல் அறியும் உரிமை சட்ட போராளி. நான் அட்வகேட் கிடையாது. ஆனால் இலவச சட்ட ஆலோசனை மையம் வைத்திருக்கிறேன். அரசிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்ய தாலூகா அலுவலகம் வருவேன். இந்த போஸ்டர் அடித்து ஒட்டியிருப்பவர்கள் மீது கரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறேன். எனக்கு இரண்டு பேர் மீது சந்தேகம் இருக்கிறது பெயர் சொல்ல விரும்பவில்லை” என்று முடித்துக்கொண்டார். கரூர் தாசில்தார் சிவகுமார், “அந்த போஸ்டர் எல்லாம் கிழிச்சாச்சே” என்று தொடங்கியவர், ”கரூர் தாலூகா அலுவலகத்தில் புரோக்கர் என்ற பேச்சுக்கே இடமில்லை. மனு கொடுக்க வரும் பெண்களை புரோக்கர்கள் ஆசை வார்த்தை கூறி நாசமாக்குகிறார்கள் என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். போஸ்டர் ஒட்டியவர்களைக் கண்டுபிடிக்க போலீஸில் புகார் கொடுத்திருக்கிறோம்” என்றார் சீரியஸாக!எப்படி ஆபீஸர் சிரிக்காமல் சீரியஸாக இப்படி பதில் சொல்றீங்க!