தார் பாலைவனத்துக்கே டஃப் கொடுக்கும் வேலைகளில் தண்ணீர் மாஃபியாக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். அந்தளவுக்கு நிலத்தடி நீரை உறிஞ்சியெடுத்து சோலைவனங்களை எல்லாம் பாலைவனங்கள் ஆக்குவதுதான் சென்னை புறநகரின் லேட்டஸ்ட் ஷாக். சில இடங்களில் அசுர வேகத்தில் பாயும் இந்த லாரிகள் மனிதர்களின் உயிரைப் பறிப்பதுதான் சோகம்! உலகின் மொத்த பரப்பளவில் மூன்று பங்கு நீர் நிறைந்திருந்தாலும், குடிநீரின் தேவை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதேவேளையில், தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு அதல பாதாளத்துக்குச் சென்று கொண்டிருப்பதாக அலாரம் அடிக்கின்றனர், நீரியியல் நிபுணர்கள். மத்திய நிலத்தடி நீர் வாரியம் சமீபத்தில் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, நிலத்தடி நீரை அதிகமாகச் சுரண்டும் பெரிய மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கிறது. இங்கே, கணக்கிடப்பட்டுள்ள 1,166 வட்டங்களில், 409 வட்டங்கள் தவிர மீதமுள்ளவற்றில் நிலத்தடி நீரை உறிஞ்சும் அளவு மிக மோசமாக உள்ளது. அதாவது அனுமதிக்கப்பட்ட அளவைவிட பலமடங்கு அதிகம் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது..குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள ஏரிகள், நீர்நிலைகளில் அனுமதிக்கப்படாத நிலையிலேயே திருட்டுத்தனமாக தண்ணீர் எடுக்கப்படுகிறது. அண்மையில், சென்னை கீழ்க்கட்டளை ஏரியிலிருந்து தனியார் லாரிகள் நீரைத் திருடுவது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் பேசினோம். “கீழ்கட்டளை பகுதியைப் பொருத்தவரை இப்பகுதியின் முக்கிய நீராதாரம் ஏரிதான். ஏரியைச் சுற்றி நிறைய வீடுகளில் போர்வெல் மற்றும் கிணறுகள் உள்ளன. ஏரியில் நீர் இருக்கும்வரை கிணறுகள் வற்றுவதே இல்லை. அது எடுக்க எடுக்க சுரக்கும். இதனை தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இவர்கள், அரசின் விதிகளைமீறி கீழ்க்கட்டளை ஏரியில் அளவுக்கு அதிகமான நீரை எடுக்கின்றனர். போதாக்குறைக்கு, சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள நிலங்களின் உரிமையாளர்கள் சிலருடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, அவர்களின் கிணறு, போர்வெல்லில் இருந்தும் நீரை உறிஞ்சி எடுக்கின்றனர். இதற்காக பல்லாவரம், துரைப்பாக்கம் இடையே செல்லும் ரேடியல் சாலை வரை சுமார் 3 கிலோமீட்டருக்கு அரசின் விதிகளைமீறி ஐம்பதுக்கும் அதிகமான பைப்லைன்கள் போடப்பட்டிருப்பதுதான், கொடுமை..ஏரி மற்றும் கிணறுகளில் இருந்து மோட்டார் மூலம் நீரை உறிஞ்சி, பைப்லைன் வழியாக ரேடியல் சாலை வரை கொண்டு வருகின்றனர். அங்கிருந்து லாரிகளில் ஏற்றி நகரப் பகுதியில் உள்ள ஓட்டல், பெரிய பெரிய நிறுவனங்கள், வணிக வளாகங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். அறுபதுக்கும் மேற்பட்ட லாரிகளில் தினமும் நீர் எடுத்துச் செல்கின்றனர். தினமும் பல லட்சம் லிட்டர் நீரை திருட்டுத்தனமாக எடுத்து ஓட்டல்கள், அபார்ட்மென்டுகளுக்கு அதிக விலைக்கு விற்கின்றனர். இவ்வாறு காலநேரமின்றி கணக்கு வழக்கின்றி பல லட்சம் லிட்டர் நீரை எடுப்பதால், விரைவில் இப்பகுதியே வறண்டு பாலைவனமாகும் வாய்ப்புகள் அதிகம். அதிலும், காலை 7 மணி முதல் 10 மணி வரையும் மாலையில் 3 மணி முதல் 6 மணி வரையிலும், இரவு 10 மணிக்கு மேலும் தண்ணீர் லாரிகளில் தண்ணீர் எடுக்கவோ, சாலைகளில் இயங்கவோ தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விதிமுறைகளை யாரும் கடைபிடிப்பதில்லை. ரேடியல் சாலையில் அணிவகுத்து நிற்கும் லாரிகளால் சாலைகளும் சேதமடைந்துவிட்டன. கடும் நெரிசலும் ஏற்படுகிறது. தண்ணீர் திருட்டு கண்கூடாக தெரிந்தாலும் இதைத் தடுக்க எந்த அதிகாரியும் முன்வருவது கிடையாது” என்கின்றனர், வேதனையுடன். பள்ளிக்கரணை பகுதிகளிலும் இதேபோன்று தண்ணீர் திருட்டு நடக்கிறது. குடியிருப்புப் பகுதியில் வசிப்போருக்கு நீராதரமாக உள்ள கிணறுகளிலேயே சிலர் நீரைத் திருடி, டேங்கர் லாரிகள் மூலம் கடத்தி விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்..நீரைத் திருடும் குற்றத்தைச் செய்வதோடு, அதற்காகப் பயன்படுத்தப்படும் டேங்கர் லாரிகளின் அசுர வேகமும் மக்களை அச்சுறுத்துவதாக இருக்கிறது. சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கீர்த்தி என்பவர், சில நாள்களுக்கு முன்பு தனது 10 வயது மகளை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தண்ணீர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ``தண்ணீர் திருட்டை தடுக்கவே முடியாதா?'' என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்திடம் கேட்டபோது, “விபத்து நடைபெற்ற இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தபோது, இப்பகுதியில் தண்ணீர் லாரிகள் சட்டவிரோதமாக நீரை எடுப்பதும் தடை செய்யப்பட்ட நேரத்திலும் லாரிகளை இயக்குவதும் கண்டறியப்பட்டுள்ளது. விரைவில் வருவாய்த்துறை, காவல்துறை, மாநகராட்சி ஆகியவற்றை உள்ளடக்கி ஒரு குழு அமைக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார், உறுதியாக. சொன்னது மட்டுமல்லாமல், மறுநாளே தண்ணீர் திருட்டைத் தடுக்க ஆட்சியர் களமிறங்கியதுதான் ஹைலைட். நடவடிக்கை தொடர்ந்தால் நல்லதுதானே! - அரியன் பாபு