Reporter
வலை வீசும் வானதி...தி.மு.க கூட்டணிக் கட்சிகளே எங்கள் கூட்டணிக்கு வரும்
தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது சொன்னது ஒன்று. ஆனால், ஆளுங்கட்சியான பிறகு செய்வது ஒன்று. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தி.மு.க அரசு தோல்வி அடைந்துவிட்டது. தமிழகத்தின் சிறப்பே சட்டம் ஒழுங்கு பராமரிப்புதான். அதிலும் தி.மு.க. அரசு கோட்டைவிட்டுவிட்டது. திடீரென ஒரு மசோதாவை கொண்டுவருகிறார்கள். அதற்கு எதிர்ப்பு வந்தால் திரும்பப் பெறுகிறார்கள். இது தி.மு.க. அரசின் நிர்வாக திறமையின்மையைக் காட்டுகிறது.