புலனாய்வுப் பத்திரிகையின் ஆசிரியர் குழு மீட்டிங் நடந்துகொண்டிருந்தது. உதவி ஆசிரியர் முதல் நிருபர்கள் வரை ஆளாளுக்கு யோசனை சொல்லிக்கொண்டிருந்தார்கள்.“சார், அந்த ..... சினிமாவில் நடித்த நடிகை இப்போ லைம் லைட்ல இருக்காங்க. அவங்களப்பத்தி ஏதாவது நியூஸ் போட்டா...!” நிருபர் ஒருவர் சொல்ல… “சார், இப்பல்லாம் சின்னத்திரை, பெரியதிரைன்னு வித்தியாசம் இல்லாம யூத்தான நடிகைகள்ல இருந்து ஆண்டீஸ் ஆகிட்ட நடிகைகள் வரைக்கும் அவங்களே இன்ஸ்டால தாறுமாறா ஸ்டில்ஸ் போடறாங்க. குத்துப் பாட்டுக்கு டான்ஸ் ஆடறது, ஆண்களோட நெருக்கமா இருக்கறது, தூக்கலான ட்ரெஸ்ஸை துணிஞ்சு போட்டுகிட்டு போஸ் தர்றது இப்படி ஸ்டில்ஸ் மட்டுமல்லாம, வீடியோ ஷாட்ஸே போடறாங்க. நாமகூட அந்த மாதிரி செய்தியையும், படத்தையும் போட முடியாது. அந்த அளவுக்குத் துணிஞ்சு ‘இறங்கிட்டாங்க’ நடிகை நியூஸ் எல்லாம் சரிவராது!” சொன்னார், இன்னொரு நிருபர். “யாராவது அரசியல் கட்சி தலைவரைப்பற்றின கசமுசா காட்சி, ஆடியோ விவகாரத்தை செய்தியாக்கினால் என்ன?”“ஊஹூம்... அரசியல்வாதிகள், சாமியார்கள் லீலையெல்லாம் பற்றி மக்கள் இப்போ பெரிசா கவலைப்படறது கிடையாது. அரசியல்வாதிகளோட கட்சித் தலைமை, தொண்டர்கள், சாமியாரின் சீடர்கள் இதை எல்லாம் கண்டுக்கறதோ, கண்டிக்கறதோ கிடையாது. ‘கூந்தல் இருக்குற கொண்டை போடுறா... நமக்கு என்ன?’ங்கற ரேஞ்சுல இருக்காங்க, எல்லாரும். இன்னும் சொன்னா, ட்விட்டர், ஃபேஸ் புக் இப்படி சமூக வலைதளங்கள்ல இதையெல்லாம் தூக்கி சாப்பிடற மாதிரி பயங்கரமான சீன் எல்லாம் இருக்கு.”. “இப்படி எல்லாத்துக்கும் ஒரு காரணம் சொன்னா, வேற என்னதான்யா நியூஸ் போடறது?”“விஜய், அஜித், ரஜினி இப்ப சிவகார்த்திகேயன்னு வெறி பிடிச்ச ரசிகர்கள் இருக்காங்க. நடிகைகள்ல சமந்தா, கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் இருக்காங்க. இவங்களைப் பத்தி ஏதாவது கோக்க முடியுமான்னு பாருங்க!”“மூன்றெழுத்து நடிகையால் மூன்றெழுத்து நடிகர்கள் இருவருக்கு இடையே அடிதடி தகராறு... இப்படி ஏதாவது செய்ய முடியுமா பாருங்கள். அதுவும் முடியாவிட்டால், சினிமா ஃபீல்டில் இருந்து யாராவது ஒரு இத்துப் போன குஸ்திவீரர், பழைய தயாரிப்பாளர் என்று யாரையாவது பிடித்துப் பேட்டி எடுங்கள்!”“ ஆட்டோ சங்கர், வீரப்பன், சாமியார்கள், அரசியல் பேட்டி என்று எல்லோரும் செம்மையா செய்கிறார்கள். யூடூப் சேனல் வேறு தொடங்கி விஷூவலாக போடுகிறார்கள். ஏதாவது செய்து நாமும் இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ள வேண்டும். அப்போது தான் நமக்கு மரியாதை. பரபரப்பாக பேசப்பட்டால்தான், பத்திரிகைக்கு விளம்பரமும் வரும். அரசு அதிகாரிகள் யாராவது லஞ்சம் வாங்கினால் அவர்களைப் பற்றி செய்தி ஆக்குங்கள்; அதுதான் பிரச்னை வராது. ஐடியாக்கள் இப்படியே போனால் நாம் சீக்கிரம் கடையை மூடிக்கொண்டு போகவேண்டியதுதான்” என்றார், ஆசிரியர்.அதுவரை அமைதியாக இருந்த புது நிருபர், எழுந்தான்.“நேற்று ஒரு பைட்டு கிடைத்தது சார், இதோ இதைப் பாருங்கள் “என்று பென் டிரவ் ஒன்றைக் கொடுத்தான்.“என்னது இது?”என்றபடியே கம்பியூட்டர் சாக்கெட்டில் அதைச் செருகினார், ஆசிரியர். நடிகை, அரசியல் பிரமுகர், அல்லது சாமியார் என்று யாரோ ஒருவருடைய அஜால் குஜால் மேட்டராக இருக்கும் என்று ஆளுக்கு ஆள் வாய்பிளந்து காத்திருக்க, பென் ட்ரைவில் பதியப்பட்டிருந்த அந்தக் காட்சி, கம்ப்யூட்டர் திரையில் விரியத்தொடங்கியது..ஆர்கன்சாஸ் மாநிலத்தில் பென்டோன்வில் உள்ள வால் மார்ட்டின் தலைமையகம். அன்றைய தினம் அங்கே நடந்த மீட்டிங்கில் முக்கிய மேலாளர்கள் எல்லாம் குழுமியிருந்தார்கள்.1962ம் ஆண்டு சிறியளவில் தொடங்கப்பெற்ற ஒரு கடை, வால்மார்ட். இன்று இருபத்தேழு நாடுகளில் 11,000 கடைகள். 22 லட்சத்துக்கும் அதிகமானோர் அங்கே வேலை செய்கிறார்கள். முதன்மைச் செயல் அலுவலர், பகுதி மேலாளர்கள், ஸ்டோர் மேலாளர்கள் ஆகியோர்தான் நிர்வாகம் செய்கிறார்கள். எடுக்கப்படும் முடிவுகளை ஸ்டோர் மேலாளர்கள், மற்ற துறை தலைவர்களுக்கு தகவலாக அனுப்புவர். இவர்களுக்கு என்றே ஒரு பிரத்தியோக மென்பொருள் உள்ளது.உலகம் முழுவதும் தங்களின் கடையில் என்னென்ன பொருட் கள் விற்பனையாகின்றன. எந்த விலையில் எந்த மாநில மக்கள் வாங்குகிறார்கள், என்று சப்ளை செய்பவர்கள் அவர்களின் இடத்திலிருந்தே பார்க்கலாம். “நமக்கு நம்பகமான சில தகவல்கள் வந்திருக்கின்றன. காங்கிரஸ் உறுப்பினர், தொலைக்காட்சி நிறுவனம், பத்திரிகை நிறுவனம், பங்கு சந்தை என எல்லா இடங்களிலும் இத்தகவலை உறுதி செய்திருக்கிறார்கள். எனவே, நாம் இந்த விஷயத்தை எளிதில் ஒதுக்க முடியாது.சீனாவில் 180 நகரங்களில் 400க்கும் அதிகமாக நம்முடைய கிளைகள் இருக்கின்றன. நம்முடைய கிடங்கில் எப்போதும் எழுபது பில்லியன் மதிப்புள்ள பொருட்கள் இருக்கும். அப்படி இருந்தால்தான் எந்த சரக்கு தேவைப்பட்டாலும் உடனடியாக நம்மால் சமாளிக்க முடியும். இப்போது மேலும் சரக்கு தேவைப்படுமா? அல்லது கடைகளை மூடவேண்டிய நிலை உருவாகுமா? இந்த இருவேறு நிலைகளில் எதனை எப்படி எதிர்கொண்டு சமாளிப்பது?” செயல் இயக்குநர் கேட்க, அங்கே இருந்த அனைவரின் முகமும் பேயறைந்ததுபோல் ஆயிற்று..`காசு.. பணம்.. துட்டு.. மணி..மணி' என சமத்துவபுர குடியிருப்புகளைக் கூவி கூவி விற்றுக் கொண்டிருக்கின்றனர், கடலூர் தி.மு.க.வினர். சாதிக்கொரு தெரு, வீதிக்கொரு அடையாளத்தை அழிப்பதற்காக உருவான சமத்துவபுரங்களுக்கு ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொள்ளிவைப்பதுதான், அனல்பரப்பும் டாபிக்.2006-2011 தி.மு.க ஆட்சியில் கடலூர் மாவட்டம் தொளார் ஊராட்சியில் சமத்துவபுரம் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து, கட்டடங்கள் கட்டும் பணி நடைபெற்றது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் 10 ஆண்டுகளாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 2021-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து கடந்த ஜூன் 28-ம் தேதி திறக்கப்பட்டது. இதில்தான், முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.தொ.குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பொ.அருணாசலம் பேசும்போது, “பரம்பரை பரம்பரையா விவசாயம் செஞ்சுகிட்டு இருந்த நிலத்துல, ‘சமத்துவபுரம் வருது.. நிலத்தைக் கொடுங்க’ன்னு சொன்னாங்க. நானும் என்னைப்போல பலரும் நிலங்களைக் கொடுத்தாங்க. எனக்கு சொந்தமாக மனையோ, வீடோ இல்லை. அதனால, சமத்துவபுரத்துல வீடு கிடைக்கும்னு நம்பினேன்.கலெக்டரும் தாசில்தாரும் எனக்குத் தகுதியிருக்கறதா சர்டிஃபிகேட் கொடுத்தாங்க. சென்னை ஐகோர்ட்டும் நிலம் கொடுத்தவங்கள்ல தகுதியுள்ள ஏழு பேருக்கு இடம் கொடுக்கணும்னு உத்தரவு கொடுத்துச்சு. ஆனா, அதைக் கண்டுக்காம அம்பதாயிரத்துல இருந்த ஒன்றரை லட்சம் வரைக்கும் காசு கொடுத்தவங்களுக்கு வீடு ஒதுக்கிட்டாங்க. இதைச் செஞ்சது தொளாரில இருக்கற தி.மு.க. முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன்தான்.அவர்கிட்ட போய் கேட்டா, `நாங்கதான் ஆளுங்கட்சி. நாங்க வச்சதுதான் சட்டம்’னு சொல்றார். நல்லூர் பி.டி.ஓ.கிட்ட கேட்டா, பதிலே சொல்லாமல் துரத்தறார்" என்றார் வேதனையுடன்..தொளார் கொல்லத்தங்குறிச்சியைச் செர்ந்த கௌதமனின் மனைவி ராஜேஸ்வரியோ, “நான் மாத்து சமூகத்தைச் சேர்ந்த ஒருத்தரை கல்யாணம் பண்ணிகிட்டேன். எங்களுக்கு மூனு குழந்தைக இருக்காங்க. அவர் வீட்லயும் வசதியில்லை. அதனால சமத்துவபுரத்துல வீடு வேணும்னு மனு கொடுத்தேன். ஊர்த் தலைவர், துணைத்தலைவர், வார்டு மெம்பர்னு எல்லாருமே, ‘உனக்கு வீடு கிடைக்கும்’னு உறுதியாக சொன்னாங்க. இப்போ, `பணம் கொடுத்தாதான் வீடு கிடைக்கும்'னு சொல்றாங்க. வீடு ஒதுக்குற வேலையை முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் பண்றதா கேள்விப்பட்டு அவர் வீட்டுக்குப் போய் கேட்டேன்.ராஜேந்திரனோ, ‘நீ ஏன் இங்கே வர்ற? சமத்துவபுர வீட்டை ஒதுக்கறதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ன்னு சொன்னார். அவரோ மனைவியோ, ‘இது என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா? நாலு பங்கா பிரிச்சுக் கொடுக்க’ன்னு கேட்கறார். என் வீட்டுக்காரர் விபத்துல அடிபட்டு கால் நடக்க முடியாம இருக்காரு. இதையெல்லாம் பார்த்த அதிகாரிகளும் எனக்கு வீடு ஒதுக்கலை. மழை பெஞ்சா வீடு ஒழுகும். எங்களுக்குன்னு சொந்த வீடு இருந்தா இந்த நிலைமை வருமா?” என்றார் கண்ணீருடன்.அ.தி.மு.க. ஐ.டி. பிரிவின் நல்லூர் மேற்கு ஒ.செ.வும் தொளார் ஊராட்சி மன்றத் தலைவருமான அருள்மணியிடம் கேட்டபோது, “சமத்துவபுர விவகாரத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் என்ற முறையில் என்னிடம் எந்த அதிகாரிகளும் ஆலோசனை கேட்கவில்லை. திறப்பு விழாவுக்குக்கூட மக்களோடு மக்களாகவே சென்றுவந்தேன். 78 வீடுகளில் சுமார் எட்டு பயனாளிகளுக்கு சொந்தமாக வீடு இருப்பதைக் கண்டறிந்து அவர்களை நீக்கியிருக்கிறார்கள்” என்றார்..சமத்துவபுர சர்ச்சை குறித்து, தி.மு.க. முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரனிடம் விளக்கம் கேட்டோம். “மொத்தமுள்ள 541 விண்ணப்பங்களை 90, 90 ஆக பிரித்து தாசில்தார்கள் ரவி, கார்த்தி, சங்கர் உள்ளிட்ட ஐந்து பேர் விசாரணை செய்து அதனை சப்கலெக்டரிடம் ஒப்படைத்து தேர்வு செய்தார்கள். இதில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அரசியல்ரீதியாக என்னைப் பிடிக்காத சிலர் தூண்டிவிட்டு வீண்பழி சுமத்துகிறார்கள்” என்றார்.நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயகுமாரியிடம் பேசியபோது, “இதெல்லாம் எனக்கு முன்னாடி இருந்த அதிகாரிகள் பீரியடில் நடந்தது. ஏற்கெனவே தேர்வு செய்து பயனாளிகளிடம் வீட்டை ஒப்படைத்துவிட்டார்கள். எங்களால் எதுவும் செய்ய முடியாது” என்றார்.கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜின் கவனத்துக்கு இதைக்கொண்டு சென்று கேட்டபோது, ``ரூரல் டெவலப்மென்ட் சப்கலெக்டர் மதுபாலனிடம் பேசுங்கள்" என்றார். அவரோ, “இதுவரை 63 பயனாளிகளுக்கு மட்டுமே வீடு கொடுத்திருக்கிறோம். முறைகேடு சம்பந்தமாக என்ன விவரம் இருந்தாலும் எனக்கு அனுப்பி வையுங்கள், நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார்.சமத்துவபுரங்களின் நோக்கம் நிறைவேறட்டும்! - பி.கோவிந்தராஜு