`வரதட்சணை புகாரை வாபஸ் வாங்கு... இல்லைன்னா ஆபாச வீடியோஸ் லீக் ஆகும்' என சொந்த மருமகளையே பதறவைத்திருக்கிறது, பா.ம.க எம்.எல்.ஏ குடும்பம். காவல்துறை நெருக்கடியால் முன்ஜாமீனுக்காக ஓடிக் கொண்டிருக்கிறார், மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவம்.சேலம் மாவட்டம், மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. சதாசிவத்துக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகன் சங்கருக்கும் சேலம் அருகிலுள்ள சர்க்கார் கொல்லபட்டியை சேர்ந்த மனோலியா என்ற பெண்ணுக்கும் கடந்த 2019ல் திருமணம் செய்து வைத்தார், சதாசிவம்.இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இவர்களின் இல்லற வாழ்க்கையும் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஒருகட்டத்தில், `கணவர் வெளியே அதிகம் தங்குகிறார். பல பெண்களுடன் தொடர்பு’ என்று திடீர் பிரச்னை முளைக்கவே, மனக்கசப்பு ஏற்பட்டு தந்தை வீட்டுக்கே சென்றுவிட்டார், மனோலியா.இந்நிலையில், எம்.எல்.ஏ குடும்பம் மீது சேலம் சூரமங்கலம் காவல்நிலையத்தில் வரதட்சணைப் புகார் ஒன்றை மனோலியா கொடுத்திருக்கிறார். ‘எம்.எல்.ஏ மீதே புகாரா?’ என காவல்துறை கமுக்கமாக இருக்கவே, ஒரு கட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு வரை பஞ்சாயத்து போனது. அவரும் இதனைக் கண்டுகொள்ளவில்லை..சதாசிவம் குடும்பத்தினர் அளித்த தொல்லைகள் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளிவரவே, கடந்த ஞாயிறன்று சதாசிவம், மனைவி பேபி, மகள் கலைவாணி, மகன் சங்கர் ஆகியோர் மீது வரதட்சணை, கொடுமைப்படுத்துதல் உட்பட ஆறு பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.``நடவடிக்கை எடுப்பதில் ஏன் தாமதம்?'' என போலீஸாரிடம் கேட்டபோது, ``மூன்று வாரத்துக்கே முன்பே மனோலியா புகார் கொடுத்தார். கல்யாணத்துக்காக ஒரு காரும் 250 பவுனும் வரதட்சணையா கொடுத்திருக்காங்க. 2020க்குப் பிறகு தொடர்ச்சியா வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் புகார்.இந்தப் புகாரை வாபஸ் வாங்கலைன்னா, அவரின் ஆபாச வீடியோக்களை அடுத்தடுத்து வெளியிடப் போவதாக மிரட்டுவதாகவும் புகாரில் சொல்லியிருந்தாங்க. புகாரில் கூறப்படுகிறவர் எம்.எல்.ஏ என்பதால் காத்திருந்தோம். உரிய உத்தரவு வந்ததால் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது’’ என்கின்றனர்.மனோலியாவிடம் பேசியபோது, ``புகார் கொடுத்திருக்கேன். அதன்மேல் நடவடிக்கை எடுக்கப்படணும். உதவி தேவைப்பட்டா கூப்பிடறேன்'' என்றவரிடம், ``என்ன நடந்தது?'' எனக் கேட்டபோது, ``என் வக்கீலிடம் பேசிவிட்டு உங்களை அழைக்கிறேன்'' என்று மட்டும் பதில் அளித்தார்.அதேநேரம், இந்த விவகாரம் குறித்துப் பேசும் எம்.எல்.ஏ சதாசிவம் தரப்பு உறவினர்கள் சிலர், ``எம்.எல்.ஏ ஆகும் முன்பே மகனுக்கு கல்யாணம் செஞ்சு வச்சுட்டார், சதாசிவம். கல்யாணத்துக்கு கார் கொடுத்தது உண்மை. நகை எவ்வளவு போட்டாங்கன்னு தெரியல. ஒரு வருஷம் நல்லாத்தான் குடும்பம் நடத்தினாங்க. அதன்பிறகு அந்தப் பொண்ணு அப்பா வீட்டுக்குப் போறதும் வர்றதுமா இருந்துச்சு..ஒரு தடவை சங்கர் பொண்டாட்டியை அடிச்சு கொடுமைப்படுத்தினார். அதுக்கு பிறகு அப்பா வீட்டுக்கு போன மனோலியா திரும்ப வரலை. நாலு தடவை நியாயம் பேசிப் பார்த்தாங்க. `பெண் குழந்தைய கொடுங்க'ன்னு எம்.எல்.ஏ தரப்பு கேட்டும் மனோலியா கொடுக்கலை. இப்போ ஒட்ட முடியாத அளவுக்குப் பிரச்னை வெடிச்சுடுச்சு.குடும்பரீதியா ரெண்டு பேருமே மாத்தி, மாத்தி தரக்குறைவா பேசி மரியாதையைக் குறைச்சுகிட்டாங்க. குடும்ப விவகாரத்தை உள்ளுக்குள்ளயே பேசி முடிச்சிருக்கலாம். அது முடியாம போனதால இந்தளவுக்கு வந்திருக்கு. இப்ப பா.ம.க தலைவர் அன்புமணிகிட்ட பஞ்சாயத்து போயிருக்கு'' என்றனர்.வரதட்சணை புகார் குறித்து, சூரமங்கலம் உதவி கமிஷனர் நிலவழகனிடம் பேசினோம். ``மனோலியா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வரதட்சணை வழக்குதான். இனிமேல் எம்.எல்.ஏ குடும்பத்துக்கு சம்மன் கொடுத்து விசாரிப்போம்'' என்றார்.எம்.எல்.ஏ சதாசிவத்தை தொடர்பு கொண்டும் அவரிடம் பேச முடியாததால், அவரின் மகன் சங்கரிடம் பேசினோம். “மேட்டூர் கோர்ட்டில் விவகாரத்து வழக்கு நடக்குது. மூன்று லட்சம் ஜீவனாம்சம் கேட்டு மனோலியா வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் போலீஸில் கொடுத்த அத்தனை புகாருக்கும் விளக்கம் கொடுத்திருக்கிறோம். அப்படியிருந்தும் எஃப்.ஐ.ஆர் போட்டிருப்பதை என்னவென்று சொல்வது?பல தகவல்களை வெளியில் சொல்ல விரும்பவில்லை. மனோலியா சொல்லும் நகைக் கணக்கு உண்மையில்லை. மூன்று லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஒரு பெண் வாழ ஆசைப்படுபவரா? நீங்களே நியாயம் சொல்லுங்கள்?'' எனக் கேட்டவர், ``அப்பாவிடம் பேசிவிட்டு மீண்டும் பேசுகிறேன்'' என்றதோடு முடித்துக் கொண்டார்.வீதிக்கு வந்த பிறகு விளக்கம் சொல்லி என்ன பயன்?-கே.பழனிவேல்