குப்பை, வெறி நாய்கள், தண்ணீர் பஞ்சம் ஆகிய மூன்றும் தான் இன்றைய கோவை மாநகராட்சியின் அக்மார்க் அடையாளம். சிட்டியின் சீரழிவைப் பத்தி கொஞ்சமும் கவலைப்படாமல் இருப்பது தான், தி.மு.க. மேயர் கல்பனாவின் ஸ்பெஷாலிட்டி. மனிதவள மேம்பாட்டு தொண்டு நிறுவனமொன்று கடந்த சில வருடங்களுக்கு முன், இந்தியாவில் மகிழ்வாக வாழத் தகுதியான 10 மாநகரங்கள் பற்றி சர்வே எடுத்ததில், ஐந்தாவது இடத்தில் வந்து நின்றது தமிழகத்தின் மான்செஸ்டர் எனப்படும் கோவை சிட்டி. இப்போது அந்த சர்வே எடுக்கப்பட்டால், ஐம்பதுக்குள்ளாவது இடம் கிடைக்குமா என்று மிகப்பெரிய அதிருப்தி மற்றும் ஆதங்கத்தில் கொதிக்கிறார்கள் மக்கள்.என்னதான் நடக்கிறது மாநகராட்சியில்? என்ற கேள்வியுடன் களமிறங்கி அலசினோம். மேயரின் சொந்த வார்டிலேயே பொங்கி வழியுது பிரச்னைகள். மணியகாரன்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியின் மேலாண்மை குழு உறுப்பினரான பெரியவர் முருகேசன், ” எங்க வார்டு கவுன்சிலர் மேயராகிட்டாங்க அப்படின்னதும் எங்களுக்கு சந்தோஷத்துல தலகால் புரியலை கண்ணு. பெருசா ஒண்ணும் எதிர்பார்க்கல, வார்டுல இருக்கிற நரக வேதனைகள் தீர்ந்துடுமுன்னு நம்புனோம். ஆனால் ஏமாற்றம் மட்டும்தான் மிஞ்சியிருக்குது. மேயர் முயற்சியால மாநகராட்சி பள்ளியில கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படுது, பரவலா கழிவுநீர் பாதை உருவாகிட்டு இருக்குது. ஆனா, அந்த கழிவுநீர் பாதை கட்டுமான தரத்தை பார்த்தீங்கன்னா மகா மட்டம், சில வாரங்கள்ளேயே இடிஞ்சு விழுந்துட்டு இருக்குது. இதுல எவ்வளவு ஊழல் நடந்திருக்குதுன்னு தெரியலை..மேயர் ஒண்ணும் பல வருஷ அரசியல்வாதியோ, வசதியான குடும்பமோ கிடையாது. சாதாரண நடுத்தர குடும்ப லேடிதான். அதனால சக மக்களோட பிரச்னைகளை தெரிஞ்சு அதை சரி பண்ணுவாங்கன்னு ஆசைப்பட்டோம். அது நடக்கல. மேயர் வார்டின் மிகப்பெரிய துரதிர்ஷ்டம்னா இங்கே இருக்கிற ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தின் கழிப்பறை கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படாத நிலைதான். பொது வெளியில் திறந்து விடப்படக் கூடிய அந்த அசிங்கமானது மேல்நிலைப்பள்ளி மற்றும் அம்மா உணவகத்தின் பின்பக்க பகுதியில் தேங்கி நிற்குது. இதனால கெட்ட நாற்றமும், கொசுக்களும், புழுக்களும் உருவாகுது. உணவகத்துல சாப்பிடுறவங்களுக்கு குமட்டிட்டு வருது, பள்ளிக் குழந்தைகளோட ஆரோக்கியம் கடுமையா பாதிக்கப்படுது. இந்த கேடுகெட்ட பிரச்னை மேயருக்கு நல்லாவே தெரியும். அவங்க நினைச்சா ஒரேயொரு உத்தரவில் இதை சரி பண்ணிடலாம். ஆனால் மனசு இல்ல பாவம். கமிஷனர் பிரதாப்கிட்டேயும் சொல்லியாச்சு, எந்த நல்லதும் நடக்கல.மாநகராட்சிக்கு நடையா நடந்து பிரச்னைகளை சொல்லப்போனால் வார்டு மக்களை மேயர் திட்டிவிடுறாங்க. உண்மையை சொல்றோமுங்க, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மாதிரியான சூழல்களில் மேயரால் இந்த வார்டுக்குள் நுழைந்து ஓட்டு கேட்க முடியுமாங்கிறது சந்தேகம்தான்...” என்றார்..மாநகராட்சி மாமன்ற முன்னாள் ம.தி.மு.க. உறுப்பினரான கிருஷ்ணசாமி, “கோவை மாநகராட்சி முழுக்க முழுக்க லஞ்சம், ஊழல்தான் நின்னு பேசுது. லஞ்சமின்றி எந்த வேலையும் நடப்பதில்லை. கட்டிட அனுமதிக்காக மாநகராட்சிக்கு போகிற மக்கள் கதறிட்டுதான் வெளியில் வர்றாங்க அந்தளவுக்கு கமிஷன் மேளா தான்.மாநகராட்சி முழுக்க குடிநீர் பஞ்சம் பேயாட்டமாடுது. மேயரோட சொந்த வார்டிலேயே குடிநீர் தட்டுப்பாடு மிக கடுமையா இருக்குது. 12 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் வருது. ஆனால் இதையெல்லாம் அவங்க எங்கே கண்டுக்குறாங்க? தினமும் 24 மணி நேரம் குடிநீர் தரும் சூயஸ் திட்டம்னு ஒன்றை மக்களோட எதிர்ப்பையும் மீறி கடந்த ஆட்சியில் கொண்டு வந்தாங்க. இப்போதைக்கு சில வார்டுகளில் அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்குது. தண்ணீர் பத்து, பனிரெண்டு நாட்களுக்கு ஒரு தடவைதான் வருதுன்னாலும், அதுக்காக மாட்டப்பட்ட மீட்டர் ஆட்டோவை விட மோசமா ஓடுது. பல குடும்பங்களுக்கு எட்டாயிரம், பத்தாயிரம்னு வாட்டர் பில் வர்றதா மக்கள் கதறுறாங்க. இந்த கொடுமைகளை என்னாண்ணு எங்கேயாவது போயி மேயர் ஆய்வு பண்ணியிருக்காங்களா? இல்லையே.மாநகராட்சி முழுக்கவே மேயருக்கும் மக்களுக்கும் எந்த தொடர்புமில்லைங்க. உண்மையை சொல்றதுன்னா, இவங்கதான் மேயர்னு லட்சக்கணக்கான மக்களுக்கு தெரியாது. குறை சொல்ல வருவோரிடம் அணுசரணையா பேசுவதில்லை. முன்னாடியெல்லாம் மேயருக்கு மக்கள் போன் பண்ணினால் அவங்க கணவர்தான் எடுத்து, விளக்கம் கொடுப்பார், வகுப்பெடுப்பார், கடிஞ்சுக்குவார். அது பிரச்னையாயிடுச்சு. அதனால இப்ப மேயருக்கு போன் பண்ணுனா யாருமே எடுக்கமாட்டாங்க. நமது அழைப்பும், கோரிக்கையும் அவங்க கவனத்துக்கே போகாமல் அநாதையா கிடக்கும் அவ்ளோதான்.சமீபத்தில் மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கலாச்சு அப்ப, நிதிக்குழு, கல்விக்குழு தலைவர்கள் தங்களோட அதிருப்தியை வெளிப்படையா காட்டினாங்க. இதன் மூலமா மேயரின் நிர்வாகம் எப்படியிருக்குதுன்னு புரியும்...’’ என்றார். .மாநகராட்சியின் அ.தி.மு.க. குழு தலைவரான பிரபாகரன் நம்மிடம் “ நான் எதிர்க் கட்சிக்காரன் அப்படிங்கிறதாலே குறை சொல்லலை, யதார்த்த துயரங்களை சொல்றேன். அதாவதுங்க கடந்த இருபது வருஷமா இப்படியொரு மோசமான மாநகராட்சி நிர்வாகத்தை பார்த்ததில்லை. மேயர் கல்பனாவுக்கு கொஞ்சம் கூட நிர்வாகத் தெளிவு இல்லை. மாநகராட்சியின் எல்லை கூட அவருக்கு தெரியாது. அதிகாரிகளுடன் கலந்து பேசி செயல்படுறதும் இல்லை.மேயர் அப்படிங்கிற பதவிக்கு கிடைக்கிற மரியாதை, அந்தஸ்து, சலுகைகளை அனுபவிக்கிற கல்பனா அதற்கான கடமைகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்றாம இருக்குறதுதான் அவலம். மாநகராட்சி பார்க் எல்லாமே போன மாசம் அந்தந்த திமுக கவுன்சிலர்களுக்கு டெண்டர் கொடுத்திருக்காங்க. வருஷத்துக்கு சில லட்சங்கள் பராமரிப்புக்குன்னு ஒதுக்கப்படும், அதை அப்படியே அவங்க ஒதுக்கிக்குவாங்க. அதேமாதிரி மாநகராட்சி வழங்கக்கூடிய உப்பு தண்ணீர் சப்ளை நிர்வாகத்தையும் இப்படித்தான் கவுன்சிலர்களின் கட்டுப்பாட்டுக்கு கொடுத்திருக்காங்கன்னு உறுதியான தகவல். இதெல்லாம் மக்களை சுரண்ட போட்டுக் கொடுத்த ரூட். இதை எப்படி மேயர் அனுமதிச்சார்? .மேயரால் தன் கட்சி கவுன்சிலர்களையே கன்ட்ரோல் பண்ண முடியலை. கோவை மாநகராட்சி ஆளுங்கட்சியில் பெண் கவுன்சிலர்கள் அதிகமுங்க. அவங்க அஞ்சு பேர், பத்து பேர்னு கோஷ்டி கோஷ்டியா சேர்ந்துகிட்டு மாநகராட்சி நிர்வாகத்துலேயே உள்ளடி அரசியல் பண்றாங்க. மேயர் இருக்குற டீமை மற்ற டீம் ஓப்பனா முறைக்கிறாங்க... கோவைங்கிறது சர்வதேச அளவில் தொழில் முக்கியத்துவம் வாய்ந்த மாநகரம். தினம் தினம் சர்வதேச தொழில் அதிபர்கள் வந்து செல்லும் இந்த சிட்டியை எப்படி சிறப்பா வெச்சிருக்கணும்! அப்படியா இருக்குது நிலைமை? போன பட்ஜெட்டில் என்னவோ அதேதான் இந்த பட்ஜெட்டில். புதிய ஸ்கீம் எதுவும் கிடையாது. மேயராக இந்த லேடி ஏதாவது கொண்டு வந்திருக்காங்களா? ஒண்ணும் இல்லை. பில்லூர் 3வது குடிநீர் ஸ்கீம் இன்னும் முடியலை. மார்ச்சில் முடிக்க வேண்டியது இழுக்கிறது. வெள்ளலூர் குப்பைக் கிடங்கினால் சுற்றுவட்டார மக்களுக்கு உருவாகியிருக்கும் சூழல் சீர்கேடு விவகாரத்தை சரி பண்ணுவேன்னு சொன்னது என்னாச்சு? முதல்வர் ஒதுக்கும் நிதியெல்லாம் கோவை மாநகராட்சியில் கட்டிங் அடிக்கப்படாமல் ஒழுங்கா பயன்படுத்தப்படுதான்னு உளவுத்துறை மூலம் ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம். இருக்கும் நூறு வார்டுகளில் கலெக்டர், கமிஷனர், மேயர்னு முக்கியமானவர்களின் பங்களாக்கள் இருக்கும் இடங்களை தவிர மற்ற அத்தனை பகுதிகளிலும் குப்பை பொங்கி வழியுது. குப்பை ஆட்டோ சர்வீஸுக்கோ, எஃப்.சி.க்கோ போனால் திரும்பி வார்டுக்கு வர ஆறு மாசமாகுது. என் வார்டில் 2 ஆட்டோக்கள் செப்டம்பர், ஜனவர்யில் எஃப்.சி.க்கு போச்சு இன்னும் வரல. மேயர் கூடுதல் ஆட்டோ தர்றேன்னு சொன்னாங்க. ஆனால் நடப்பதில்லை. மாநகராட்சியில் புது லைட் போட்டதா காட்டுங்க பார்க்கலாம். நகைக்கடை ஓப்பனிங், கலைநிகழ்ச்சிகள்னு போறதுல காட்டுறா அக்கறையை மக்களிடம் குறைகேட்க போவதில் காட்டலாம் மேயர்...’’ என்று கொதித்தார். .இந்த விமர்சனங்களுக்கு விளக்கம் வேண்டி மிகுந்த சிரமத்திற்குப் பிறகு மேயரிடம் பேசினோம். “ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பொண்ணு, முதல்வரின் ஆசியால் இவ்வளவு பெரிய நிலைக்கு வந்திருப்பதை எதிர்க்கட்சி நபர்களால் ஜீரணிக்கவே முடியலை. அதனாலதான் வாய்க்கு வந்தபடி, பொய்யான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுறாங்க. அ.தி.மு.க. ஆட்சியில சீர்கெடுக்கப்பட்ட கோவை மாநராட்சியை கொஞ்சம் கொஞ்சமா மீட்டெடுத்துட்டு இருக்கிறோம். அடிப்படை வசதி மேம்பாடு, மாநகராட்சி அழகுபடுத்துதல்னு எல்லா தளங்களிலும் கோவையை இன்னும் சிறப்பாக்க உழைச்சுட்டுதான் இருக்குது எங்க டீம். மாநில அளவில் சாதனை படைத்து, விருது வாங்கும் நகராட்சியை ‘மோசமான நிர்வாகம்’னு சொல்றது மூலமாவே தெரியலையா இவங்களின் சிறு புத்தி!மாநகராட்சி நிர்வாகம் பற்றி எதுவும் தெரியாமல்தான் வந்தேன். ஆனால் இப்ப எவ்வளவோ கத்துட்டு இருக்கிறேன். என்னோட நிர்வாகத் திறமை பற்றி இவங்க வைக்கிற வதந்தியான விஷம விமர்சனங்களை நான் லட்சியம் பண்ணல. என் வார்டு உள்ளிட்ட ஒட்டுமொத்த மாநகராட்சியின் அத்தனை தேவைகளும் மிக விரைவில் நிறைவேற்றப்படும். விளக்கிட்டு இருக்குறதை விட வேலையில் சாதிக்கணும்னு ஆசைப்படுறேன்” என்றார்.கவனிப்போம் மேயரே!- எஸ்.ஷக்தி