ரய்யான்பாபு படங்கள். ம.செந்தில்நாதன்மனதில் பட்டதை படாரென உடைத்து டிவிட்டரில் தட்டிவிடுவார் கார்த்தி சிதம்பரம். அவரது பலமும் அதுதான், பலவீனமும் அதுதான். ஓ.டி.டி-யில் படங்களைப் பார்த்தபடியே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ரேஸிலும் ஓடிக்கொண்டிருக்கும் கார்த்தி சிதம்பரத்தை சந்தித்துப் பேசினோம்..தமிழக அரசியலில் அதிக ஆர்வம் காட்டுவதில்லையே, ஏன்?“எம்.பி.யாகி டெல்லி செல்வதைவிட, தமிழகத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்பதுதான் என் விருப்பம். கட்சியில் பதவி வாங்க வேண்டும். காங்கிரஸை தமிழ்நாட்டில் வலுப்படுத்த வேண்டும். வருங்காலங்களில் கணிசமான எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் சார்பில் தமிழக சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். இதையெல்லாம் வரும் செய்ய வேண்டும் என்பதுதான் எனது ஆசை. விரைவில் நடக்கும்.”ஆசை இருந்தால் போதுமா, ’சத்தியமூர்த்தி பவனுக்கு வருவதே இல்லை, கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுகூட கிடையாது’ என்றெல்லாம் உங்கள் மீது புகார் சொல்கிறார்களே?“சத்தியமூர்த்தி பவனுக்குள் உட்கார்ந்துகொண்டு அரசியல் செய்ய எனக்கு விருப்பமில்லை. பவனைத் தாண்டி கட்சி இருக்கிறது. என்னை பொறுத்தவரைக்கும் நான் தலைவரானால், ஒரு மாதத்தில் 20 நாட்கள் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் செய்வேன். மீதமிருக்கும் 10 நாட்கள் மட்டும்தான் சத்திய மூர்த்தி பவனுக்கு செல்வேன்.”.பாட்னாவில் ஒன்று கூடிய எதிர்க்கட்சிகள் கூட்டத்தை பா.ஜ.க. விமர்சனம் செய்திருப்பது ?“அதை கொச்சையான அரசியல் விமர்சனமாகத்தான் பார்க்கிறேன். 53 நாட்களாக மணிப்பூர் எரிகிறது. அதை தடுத்து நிறுத்த துப்பில்லை. ஆனால், மாநில முதல்வர்கள் ஒன்று கூடுவது அமித்ஷாவுக்கு எரிகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸை மையப்படுத்தி வலுவான கூட்டணி அமையும். அந்தத் தேர்தலில் தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.”செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை நடவடிக்கையை எப்படி பார்க்கிறீர்கள். ?“என்னை பொறுத்தவரை அமலாக்கத்துறையே இருக்கக் கூடாது. அந்தத் துறை நாட்டின் எல்லைகளில் பயங்கரவாத செயல்பாடு, சட்டத்திற்கு புறம்பான பணப்பரிமாற்றம், ஆயுதக்கடத்தல், கஞ்சா, அந்நிய செலாவணி மோசடி என வரும் புகார்களை விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட துறை. ஆனால், காவல்துறை பதிவு செய்யக்கூடிய எந்த புகாராக இருந்தாலும், அதில் மூக்கை நுழைக்கலாம் என்ற நிலையை உருவாக்கி, துறையையே மாற்றிவிட்டார்கள். பேசாமல், அமலாக்கத்துறையை மூடிவிட்டு, சி.பி.ஐ-யில் உள்ள பொருளாதாரக் குற்றப் பிரிவில் இணைத்து விசாரிக்க செய்யலாம். ஆவணங்களை வைத்து விசாரிக்க ரெய்டு, கைது போன்றவை தேவையில்லை. ஆவணங்களில் சந்தேகம் இருந்தால் கேள்வி எழுப்பலாம். சரியாக பதில் வரவில்லை என்றால், நீதிமன்றத்துக்கு செல்லலாம். அதைவிடுத்து, பா.ஜ.க.விற்கு எதிராக இருப்பவர்களை மிரட்ட அமலாக்கத்துறை ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.”.தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை சாதித்து விட்டாரா ?“அரசியல் அறிவு, கொள்கை, கோட்பாடு என்று எதுவும் இல்லாதவர் அண்ணாமலை. ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவர் பின்னால் சுற்றலாம் என்று காவல்துறை பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தார். அது நடக்காது என்று தெரிந்ததும் பாதி வழியில் பா.ஜ.க. பஸ்ஸில் ஏறிக்கொண்டார். பத்திரிகைகள்தான் அவரை ஊதிப்பெருக்கவைத்துவிட்டன. மற்றபடி கீழ்மட்டத்தில் போய் பார்த்தால் பா.ஜ.க. வளரவே இல்லை, வாக்கு வங்கியும் உயரவில்லை. இன்றைக்கும் நிரகாரிக்கப்படும் கட்சியாகதான் தமிழகத்தில் பா.ஜ.க. உள்ளது. குற்றவாளிகள், வழக்கில் தண்டனை பெற்றவர்கள்தான் தங்களை பாதுகாத்துக்கொள்ள பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளார்கள்.”ஆளுநர் ஆர். என்.ரவியின் செயல்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள் ?“நாகலாந்து அமைதி பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற்றிருந்தவர் ஆர்.என்.ரவி. அந்த பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியதற்கு தண்டனையாக அவருக்கு தமிழக ஆளுநர் பதவி வழங்கப்பட்டது. எப்போதுமே அரசியல் சாசனத்தை மீறி நடப்பவராகத்தான் அவரை பார்க்க முடிகிறது. சரித்திரத்தை திரித்து சொல்வதையே வழக்கமாகக்கொண்டவர். அவரது செயல்பாட்டை தமிழக மக்கள் பார்த்துகொண்டுதான் இருக்கிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க. வீழ்ச்சிக்கு ஆர்.என்.ரவியின் செயல்பாடும் முக்கிய காரணமாக இருக்கிறது. ஆர்.என்.ரவியின் இதேபோன்று நடந்துகொண்டால், தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு இன்னும் அதிக வாக்குகள் கிடைக்கும்.”.சசிகலா, ஓ.பி.எஸ்., எதிர்கால அரசியல் எப்படி இருக்கும்?“சசிகலாவுக்கு ஒருகாலத்தில் அ.தி.மு.க.வில் பெரும் செல்வாக்கு இருந்தது. அதன் அடிப்படையில்தான் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வை கைப்பற்றி வழிநடத்துவார் என யூகித்தேன். ஆனால், எனது கணக்கு தப்பாகிவிட்டது. சசிகலா அரசியல் வாழ்க்கை இப்படி ஆனது எனக்கும் கொஞ்சம் வருத்தம்தான். அ.தி.மு.க. தொண்டர்கள் பெரும்பாலானோர் தற்போது எடப்பாடி பின்னால் நிற்கிறார்கள். அவரை மீறி ஓ.பி.எஸ். போன்றவர்கள் அ.தி.மு.க.வில் பெரியதாக தலையெடுக்க முடியும் என நம்பவில்லை. அதே போன்று பா.ஜ.க. வாடை, பா.ஜ.க. நிழல், பா.ஜ.க. சாயம் ஆகியவற்றை அ.தி.மு.க வைத்து கொண்டிருக்கும்வரை தேர்தலில் வெற்றி பெற முடியாது.”விஜய் அரசியல் வருவதை எப்படி பார்க்கிறீர்கள் ?“புதிய அரசியல் கட்சிக்கு தமிழகத்தில் தேவையிருப்பதாக தெரியவில்லை. அவர் ஒரு பிரபலமான திரைத்துறையைச் சேர்ந்தவராக இருக்கலாம். அவரது அரசியல் நிலைப்பாட்டை அவர் முதலில் சொல்ல வேண்டும். விஜயகாந்தும் அரசியலுக்கு வந்தபோது வாக்குகளைப் பிரித்தார். ஆனால், அவரால் அரசியல் களத்தில் நிலைத்து நிற்க முடியவில்லை. விஜய்க்கும் அதே நிலைதான் ஏற்படும்.இன்னொரு பக்கம் அரசியலில் விஜய் யாரை சார்ந்திருக்கப் போகிறார், யாரை எதிர்த்து அரசியல் செய்ய போகிறார், இல்லை... நடுநிலையோடு செயல்பட போகிறாரா? இப்படி அவரது அரசியல் வருகை கேள்விக்குறிகளால் சூழப்பட்டிருக்கும் நிலையில் நாம் எதையும் கணிக்க முடியாது.”