-மனோசௌந்தர்ஆபத்துக் காலத்தில் 100-க்கு போன் செய்தால், ஆபத்பாந்தவனாக போலீஸார் வருவார்கள் என்று நீங்கள் நினைத்தீர்களானால், எச்சரிக்கை! இருக்கிற ஆபத்து பத்தாது என்று உங்களுக்குப் புதிதாக ஓர் ஆபத்து முளைத்துவிடலாம்..‘ஏரியாவுல ஒரு சின்னப் பிரச்னை. தெரியாத்தனமா 100க்கு போன் பண்ணிட்டேன். நேரங்காலம் இல்லாம யார்யாரோ போன் பண்ணி போலீஸ்னு சொல்லி மிரட்டறாங்க. ஊர்ப் பிரச்னையைத் தீர்க்கப்போய், சொந்த செலவுல சூனியம் வைச்சுகிட்டாமாதிரி ஆகிடுச்சு…!’ போன் காலில் வந்த ஒருவர் பதற்றத்தோடு சொல்ல, அதன் உண்மைத் தன்மையை அறியத் தயாரானோம். பொதுமக்கள், காவல்துறையில் எளிதாகப் புகார் கொடுக்க அவசர தொலைபேசி எண் 100 செயல்பட்டு வருகிறது.இதற்கென ஒவ்வொரு மாவட்ட, மாநகர காவல் அலுவலகங்களிலும் தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீஸார் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த எண்ணுக்கு போன் செய்வோருக்குதான், தலைபோகும் பிரச்னைகள் தலைதூக்குகின்றன என்பதை அறிந்து, புகார் ஒன்றைத் தேடினோம்..அப்போது நம் கண்ணில் பட்டது, சென்னை வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவில் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையை ஆக்கிரமித்து முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் கட்டியுள்ள கான்கிரீட் தூண். அது போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக லோக்கல்வாசிகளும் சொல்ல, உடனே 100க்கு போன் செய்து புகார் அளித்தோம். அடுத்த நிமிடமே அவசரபோலீஸின் அட்ராசிட்டி ஆரம்பமானது. போனில், கோடம்பாக்கம் போக்குவரத்து எஸ்.ஐ. கணேசன், நம்மை அழைத்தார். ‘நீங்க சொன்ன இடத்துல சிமென்ட் தூண் கட்டியிருக்காங்கதான். இதுல ட்ராஃபிக் போலீஸ் எதுவும் செய்யமுடியாது. லா அண்ட் ஆர்டர் போலீஸ்,கார்ப்பொரேஷன் எல்லாம் சேர்ந்துதான் நடவடிக்கை எடுக்கணும்.’ என்றவர், ‘ஆமா, இதைப்பத்தி நீங்க சம்பந்தப்பட்டவங்ககிட்டேயே பேசியிருக்கலாமே?’ என்றார், ’ஏன், 100க்கு போன் செய்தீர்கள்?’ என்கிற தொனி அவர் குரலில் தொனித்தது.. ‘சார், நேர்ல போய்க்கேட்டா பிரச்னை வராதா? அதனாலதான்…’என்றதும்அவர் சொன்னதுதான் திடுக். ‘ஓ… நீங்க தப்பிச்சுக்க எங்கள மாட்டிவிடலாம்னு பார்க்குறீங்களா?’ என்று ஷாக் கொடுத்தார். ‘அதுக்குதானே சார் சம்பளம் வாங்குறீங்க? நீங்கதானே இதையெல்லாம் கேட்கணும்’ என்றதும் சட்டென்று போனைத் துண்டித்தார். சற்றுநேரத்தில், புது எண்ணில் இருந்து நம்மைத் தொடர்பு கொண்டநபர், ‘நான் யார் தெரியுமா ……….. போலீஸ். ஆர் -8 ஸ்டேஷன்லேர்ந்து பேசுறேன். ட்ராஃபிக்கு இடைஞ்சலா ஒரு தூண் இருக்குன்னு நூறுல கம்ப்ளைண்ட் பண்ணுனீங்களாமே? ஏன், அங்கேதான் வழி இருக்குல்ல. கொஞ்சம் ஒதுங்கிப் போனா என்ன?’ என்று தொடங்கிய குரலில் கடுமை கூடியது,’ நீ எங்கே இருக்க? அந்தத் தெருவுலதானே? முதல்ல உன் அட்ரஸை சொல்லு!” என்று மிரட்டிவிட்டு இணைப்பைத் துண்டிக்க, அழைத்தவர் யார் என விசாரித்தோம். .அப்போது தெரியவந்ததுதான் அதிர்ச்சி ரகம். பேசியவர், போலீஸ் அல்ல. கான்கிரீட் தூண் கட்டியிருப்பதாக, நாம் புகார் கொடுத்த கோயில் நிர்வாகி ஏழுமலைதான் அவர். அவருக்கு நம் போன் எண்ணைக் கொடுத்து ‘உதவியவர்’ கோடம்பாக்கம் போக்குவரத்து எஸ்.ஐ.நம் அனுபவத்தோடு சென்று, ஏற்கெனவே அவசரபோலீஸுக்கு போன் செய்து இதேபோன்ற அவஸ்தையில் சிக்கித் தவிக்கும் சென்னையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் டேவிட் மனோகரை சந்தித்துப் பேசினோம்.‘ஆரம்பத்துல இருந்தே எனக்கு சமூக அக்கறை அதிகம். அதனால, அநியாயம் எங்கேயாவது நடந்தா அவசர போலீஸ் 100க்கு போன் பண்ணுவேன். கொஞ்ச நேரத்துல, ‘நீங்க நேர்ல வாங்க’ ன்னு கூப்பிடுவாங்க. இல்லைன்னா, பேட்ரல் பி.சி. பேசுறேன், ஏட்டு பேசுறேன், எஸ்.ஐ. பேசுறேன்னு வரிசையா போன் பண்ணி வெறுத்துப்போக வைப்பாங்க.சரி, போன் பண்ணினாதானே தொல்லைன்னு, காவல் கட்டுப்பாட்டு வாட்ஸ் ஆப் நம்பரான 79977 00100 க்கு டீடெய்லா எழுதி போட்டோவோட புகார் அனுப்பினா, வாட்ஸ் ஆப் அனுப்புன நம்பரைத் தொடர்புகொண்டு, ‘டீடெய்ல் என்ன? உங்களுக்கு அதனால என்ன பிரச்னை. சம்பந்தப்பட்ட பார்ட்டிகிட்டே பேசினீங்களா?’ இப்படியெல்லாம் கேட்டுக்கேட்டே அழவைச்சுடுவாங்க.நான் அடிக்கடி 100க்கு போன்பண்ணி புகார் கொடுப்பேன்கறதை தெரிஞ்சுகிட்டு, ‘கன்ட்ரோல் ரூமுக்கு போன் பண்ணாதீங்க, நேரடியா எங்ககிட்டே கம்ப்ளெயிண்டை சொல்லுங்க’ன்னு சில போலீஸ்காரங்க தங்களோட போன் நம்பரைக் கொடுப்பாங்க. ஏன்னா, 100க்கு போன் செஞ்சா, எல்லாமும் ரெக்கார்ட் ஆகும். அந்தப் புகாருக்கு என்ன நடவடிக்கை எடுத்தாங்கன்னு ஃபாலோ அப் மேலதிகாரிகளுக்கு சொல்லணும். அதனால தனிப்பட்ட முறையில தகவல் சொல்லச் சொல்றாங்க. இதுல கலெக்ஷன் பஞ்சாயத்து நடந்தாலும் நடக்கலாம்,சொல்றதுக்கு இல்லை!” என்றவர் அடுத்து சொன்னது பகீர் ரகம்.“எங்க ஏரியாவுல எங்கேயாவது பில்டிங் கட்டிகிட்டு இருந்தா, அங்கே போய், நான் கம்ப்ளெய்ண்ட் குடுத்திருக்கறதா சொல்லி அவங்களை மிரட்டி கலெக்ஷன் பார்க்கற வேலையையும் செய்யுது போலீஸ். இதுனால, அவசரத்துக்கு போலீஸை அழைக்கறது ஆபத்தையே அழைக்கறமாதிரி ஆகிடுமோன்னு பயமா இருக்கு!” என்றார், பதற்றத்துடன்..கோடம்பாக்கம் போக்குவரத்து எஸ்.ஐ. கணேசன் போட்டுக்கொடுத்தது தொடர்பாக, சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை எண் துணை ஆணையர் ஆரோக்கியம், கோடம்பாக்கம் போக்குவரத்து துணை ஆணையர் சக்திவேல், ஏ.சி. ராஜா ஆகியோரிடம் ஆடியோ ஆதாரங்களுடன் தெரிவித்தபோது, “இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்கள். அவசரபோலீஸைப்பத்தின புகாருக்குன்னே தனியா ஒரு நம்பர் ஒதுக்கணுமோ!