`ஈட்டி எட்டிய வரை மட்டுமே பாயும்' என்பார்கள். ஆனால், செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஈ.டி வீசும் ஈட்டிகளை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது, கரூர் குரூப். `குற்றம் சாட்டப்பட்டவர் அல்ல, குற்றவாளியே அவர்தான்' என குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து அடுத்த வெடியை கொளுத்திப் போட்டிருக்கிறது, அமலாக்கத்துறை. அப்படியென்ன இருக்கிறது, குற்றப்பத்திரிகையில்? அமலாக்கத்துறையின் வழக்கறிஞர்கள் தரப்பில் பேசினோம். ``தி.மு.க ஆட்சிக்கு வந்ததுமே அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் செய்த மோசடிகளில் இருந்து விடுபட முயற்சி செய்தார், செந்தில் பாலாஜி. அது உச்ச நீதிமன்றத்தில் எடுபடவில்லை. இந்த வழக்கை விரைந்து முடிக்குமாறு உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்தச் சூழலில், சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் செய்ததாகக் கிடைத்த தகவலின்பேரில் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி செந்தில் பாலாஜியை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரித்தது அமலாக்கத்துறை. பிறகு, ஆகஸ்ட் 12ம் தேதி 124 பக்க குற்றப்பத்திரிகையையும் மூன்றாயிரம் பக்கங்களுக்கும் மேலான ஆவணங்களையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி நீதிபதி ரவி முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நேரில் ஆஜரான செந்தில் பாலாஜியிடம் மூன்றாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிகையில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் இவைதான். `நாங்கள் நடத்திய விசாரணையிலும் சேகரித்த ஆதாரங்கள் வழியாகவும் செந்தில் பாலாஜி பணமோசடிக் குற்றத்தை செய்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. செந்தில் பாலாஜி, அவரின் தம்பி அசோக்குமார் மற்றும் அவரின் நெருங்கிய வட்டாரங்கள் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை செய்திருக்கும் டிஜிட்டல் ஆதாரங்கள் சிக்கியுள்ளன. பொது ஊழியராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, ஊழல் மற்றும் சட்ட விரோதமான வழிகளில் ஈட்டிய வருமானத்தை நேரடியாக பெற்றிருக்கிறார். திட்டமிடப்பட்ட குற்றத்தின் மூலம் ஈட்டிய பணத்தை தனது குடும்பத்தினர் தொடர்புடைய வங்கிக் கணக்குகளில் `டெபாசிட்’ செய்து மோசடி செய்திருக்கிறார். மாநகரப் போக்குவரத்து மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களில் காலியாக இருந்த பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனை தொடர்பான இமெயில் குறிப்புகளும் சிக்கியுள்ளன. அதில், அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர்களாக இருந்த சண்முகம், கார்த்திகேயன் ஆகியோர் ஆலோசனை நடத்திய தகவல்கள் உள்ளன. இதுகுறித்த சில எக்செல் ஷீட்டுகளும் கிடைத்துள்ளன. அதில், பணியில் சேரும் நபர் பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அது மட்டுமல்ல, சில சந்தேகத்துக்குரிய நபர்கள் (இடைத் தரகர்கள்) குறித்த விவரங்களும் சிக்கியுள்ளன. இவர்கள் செந்தில் பாலாஜிக்கும் வேலை தேடி விண்ணப்பித்தவர்களுக்கும் இடையே மீடியேட்டர்களாக செயல்பட்டுள்ளனர். மேலும், இந்த இடைத்தரகர்கள் பலரிடம் இருந்து பணம் வசூலித்து செந்தில் பாலாஜியின் உதவியாளர் சண்முகத்தின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ததாக கூறியுள்ளனர். இது சட்டவிரோத ஆதாயம். தவிர, காலிப் பணியிடங்களுக்கான நேர்காணல் நடந்தபோது, `பென்சில்களை பயன்படுத்தி மட்டுமே மதிப்பெண்ணை குறிக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளனர். இது சட்டவிரோதமானது. அது மட்டுமல்ல, மாநகர போக்குவரத்துக் கழகத்தில் நேர்காணல் செயல்முறை முடிந்ததும், பல விண்ணப்பதாரர்கள் செந்தில் பாலாஜியின் கூட்டாளிகளை அணுகியுள்ளனர். இதன்பின்னர், பணி நியமன ஆணைகளை வழங்க பணம் வசூலித்துள்ளனர். இடஒதுக்கீடு கொள்கைகளும் பின்பற்றப்படவில்லை. இதையடுத்து, பணம் செலுத்தியவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்க ஏதுவாக அந்தந்த விண்ணப்பதாரர்களின் நேர்காணல் மதிப்பெண் மாற்றப்பட்டுள்ளன. இதனை மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ஐம்பதுக்கும் மேற்பட்ட தகவல்கள் பதிவு செய்து வைத்திருந்தது, தெரியவந்துள்ளது. அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்ட விரோத நடவடிக்கைகள் மூலம் பணத்தை ஈட்டி அதை வங்கிக்கணக்கில் சேர்த்து வைத்தது ஆதாரபூர்வமாக கண்டறியப்பட்டிருக்கிறது. இதுவரை குற்றம் சாட்டப்பட்டவராக இருந்த செந்தில் பாலாஜி, `குற்றவாளி' என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது" என ‘டாப் டு பாட்டம்’ வரை விவரித்தார். இதுகுறித்துப் பேசிய அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர், `` செந்தில் பாலாஜியின் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக மேலும் சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டபூர்வமான நடவடிக்கைகளும் விசாரணைகளும் தொடரும்" என்று மட்டும் பதில் அளித்தார். இந்த வழக்கில், ஜாமீன்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், `மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்' எனக் கூற, உடனே சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கைக் கொண்டு சென்றனர் தி.மு.க வழக்கறிஞர்கள். அங்கும், `சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க முடியுமா என உயர் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்திவிட்டு வாருங்கள்' எனக் கூறிவிட்டது. இதனால் நொந்து நூடுல்ஸாகியிருக்கிறார், செந்தில் பாலாஜி. `அடுத்து என்ன நடக்கும்?' என கரூர் தி.மு.க மட்டுமல்ல, அரசியல் வட்டாரமே எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. - ஜி.ஜி.கே.