மாநகராட்சிகளிலேயே அதிக தொல்லை தரும் மாநகராட்சி என்ற நற்பெயரைப்(?) பெற்றிருக்கிறது, நெல்லை மாநகராட்சி. `கவுன்சிலர்களின் செயலால் மக்கள் பணி முடங்குகிறது, கவுன்சிலை முடக்குங்கள்' என முதல்வருக்கு கடிதம் எழுதப்பட்டிருப்பதுதான் லேட்டஸ்ட் தகவல்.நெல்லை மாநகராட்சியின் மேயர் பதவிக்கு சரவணனை, முன்னிறுத்தியவர் மாஜி மத்திய மா.செ அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. ஆனால், மேயரான பின்னர் சரவணன் தன்னிச்சையாக செயல்படவே, இருவருக்கும் இடையில் பிரச்னை உருவானது. மாநகராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் அப்துல் வஹாப்பின் ஆதரவாளர்கள். இதனால், மாமன்றக் கூட்டத்தையே நடத்த முடியாத அளவுக்கு ரகளை செய்தனர்.இதனால் மக்கள் பணிகளில் சுணக்கம் ஏற்படவே, விஷயம் முதல்வரின் கவனத்துக்குச் சென்றது. மாநகராட்சி நிலவரம் குறித்து முழுமையாக விசாரித்த முதல்வர், அப்துல் வஹாப்பை பொறுப்பில் இருந்து நீக்கினார்.அதையடுத்து புதிய பொறுப்பாளராக டி.பி.எம்.மைதீன்கான் நியமனம் செய்யப்பட்டார். அவர் பொறுப்புக்கு வந்த மறுநாளே, மாநகராட்சி மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் கூட்டத்தைக் கூட்டிய அவர். ‘மாமன்றக் கூட்டத்தில் யாராவது ரகளை செய்தால், நிச்சயம் நடவடிக்கை பாயும் என முதல்வர் கூறியிருக்கிறார்' என எச்சரித்ததையடுத்து, அடுத்த இரு கூட்டங்கள் அமைதியாக நடந்தன.இந்நிலையில், கடந்த ஜூலை 27ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், மீண்டும் தங்கள் ஆட்டத்தைத் தொடங்கியுள்ளனர், தி.மு.க கவுன்சிலர்கள். இதனால் மாநகராட்சி கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனை ஏற்க விரும்பாத தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சித் தலைவர் வியனரசு, `நெல்லை மாநகராட்சி கவுன்சிலை முடக்க வேண்டும்’ என்று முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.``ஏன் இப்படியொரு கடிதம்?" என வியனரசுவிடம் கேட்டோம். “கடந்த 27ம் தேதி நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் அப்துல் வஹாப் ஆதரவு கவுன்சிலர்கள், ‘தங்களுக்கு, மைதீன்கான் கொலை மிரட்டல் விடுக்கிறார், பெண்களாகிய எங்களுக்குப் பாதுகாப்பில்லை’ என்றெல்லாம் கூறி தர்ணாவில் ஈடுபட்டனர்..`உட்கட்சிப் பிரச்னையை மாமன்றத்தில் விவாதிப்பது முறையல்ல' என்று சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதை தடுக்கின்றனர். மக்கள் விரோதப்போக்கில் செயல்படுவதைத் தடுக்கவே, மாமன்றத்தை முடக்க வேண்டும் என்று முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்'' என்றார்.வியனரசுவின் கடிதம் குறித்து நெல்லை மேயர் சரவணனிடம் கேட்டபோது, “அப்படியா, எனக்கு அந்தப் புகார் பற்றிய விவரம் எதுவும் தெரியாதே. இருந்தாலும் என்னவென்று கவனிக்கிறேன்'' என்றார்.``ரகளையில் ஈடுபடும் கவுன்சிலர்களை ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்தால் போதும். அதோடு அவர்களைத் தூண்டிவிடும் நபரை கடுமையாக எச்சரித்தாலே எல்லாம் சரியாகிவிடும்” என்கிறார், முன்னாள் கவுன்சிலர் உமாபதி சிவன்,``மாமன்றத்தை முடக்க வழியிருக்கிறதா?'' என மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ``முதல்வர் மனது வைத்தால் நடக்கும். தமிழ்நாடு அரசு நகர்ப்புற உள்ளாட்சித்துறை சட்டம் 2022ல் இதற்கான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன'' என்றார்.முதல்வர் மனது வைப்பாரா? - துரைசாமி