`உங்களிடம் இருந்து பறிக்க முடியாது கல்வி ஒன்றுதான்' என்று மேடைதோறும் முழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், அதிகாரிகள் கவனக்குறைவு, அலட்சியம் காரணமாக பொழுதுவிடிந்தால், முதல்வருக்கு தலைவலியை தேடி தருகிறார்கள். அதுவும் சமீப நாட்களாக கல்வி நிலையங்களில் நடக்கும் வன்முறைகள் பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்துகின்றன. நாங்குநேரி சம்பவத்தின் ரத்தம் காய்வதற்குள் அடுத்த கொடூரத்தைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர், சென்னையின் பள்ளி மாணவர்கள். அது அமைச்சர் உதயநிதியின் தொகுதி என்பதால் விவகாரத்துக்கு எண்ட் கார்டு போட காவல்துறை முயற்சிப்பதுதான், கலவரமூட்டும் கள நிலவரம்! என்ன நடந்தது? குமுதம் ரிப்போர்ட்டருக்கு கிடைத்த எக்ஸ்குளூசிவ் தகவல்கள் இதோ! “ராயப்பேட்டை காவல்நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ளது, அந்த தனியார் பள்ளி. கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி பிளஸ் டூ படிக்கும் படிக்கும் மாணவர்கள் ஏக்நாத் - யுவன் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) ஆகிய இருவரும் தங்களுக்குள் அடித்துக் கொண்டுள்ளனர். இதில், யுவன் என்ற மாணவன் தனது கையில் மோதிரத்துடன் பிணைக்கப்பட்டிருந்த பிளேடை வைத்து, மாணவர் ஏக்நாத்தை கொடூரமாக தாக்கியுள்ளான். ஆனால், அதிர்ஷ்டவசமாக பெரிய காயங்கள் ஏற்படவில்லை. காலை 10.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இரு மாணவர்களும் அடித்துக்கொண்ட தகவலையறிந்து, ஆசிரியர்கள் ஓடிச் சென்று மாணவர்களைத் தடுத்துள்ளனர்'' என தொடக்கத்தை விவரித்த ராயப்பேட்டை காவல்நிலைய காவலர் ஒருவர், அடுத்த நடந்த பகீர் சம்பவங்களைப் பட்டியலிட்டார். ``பள்ளி வளாகத்துக்குள் சண்டை போட்டுக்கொண்ட இரு மாணவர்களையும் தனியார் பள்ளி நிர்வாகம் அப்போதே வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டது. அன்று மாலை மூன்று மணியளவில் பள்ளி வேலை நேரம் முடிந்து வெளியில் வரும்போது, பத்து நண்பர்களை மாணவன் யுவன் அழைத்து வந்துள்ளான். அப்போது அங்கு வந்த ஏக்நாத்தின் நண்பனான சார்லஸை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருசக்கர வாகனத்தில் தூக்கிச் சென்றுவிட்டனர். ஓர் இருட்டு அறையில் அடைத்து வைத்து சார்லஸை யுவனும் அவனது நண்பர்களும் அடித்து மிரட்டியுள்ளனர். ஏக்நாத் வீட்டை அடையாளம் காட்டுமாறுகூறி சுமார் 2 மணிநேரமாக தனது கட்டுபாட்டில் யுவன் தரப்பினர் வைத்துள்ளனர். ஒருகட்டத்தில் அடிதாங்க முடியாமல், ஏக்நாத்தின் வீட்டை அடையாளம் காட்டியிருக்கிறான், சார்லஸ். அதன் பின்னரே சார்லஸ் விடுவிக்கப்பட்டான். ஏக்நாத் வீட்டைத் தெரிந்துகொண்ட யுவனும் அவனின் நண்பர்களும் மூடியிருந்த கேட்டை தாண்டிக் குதித்து கிரிக்கெட் பேட், ஸ்டம்புடன் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அங்கிருந்த ஏக்நாத்தை அடிக்கத் தொடங்கிவிட்டனர். திடீரென நடந்த இந்தத் தாக்குதலால் ஏக்நாத் நிலைகுலைந்து விழ, அவரின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். மகன் மீது நடந்த தாக்குதலைத் தடுக்க முடியாமல் கதறி கூச்சல் போடவே, அக்கம்பக்கம் உள்ளவர்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து யுவன் மற்றும் அவனின் நண்பர்களைத் தடுத்துள்ளனர். அதில், மூன்று பேரை மட்டும் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து, யுவனின் பெற்றோரை அழைத்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இருவரும் 12-ம் வகுப்பு மாணவர்கள் என்பதால் எந்த வழக்கையும் பதிவு செய்யாமல், யுவனுக்கும் அவனின் நண்பர்களுக்கும் அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தனர்" என்றார் விரிவாக..மாணவர்களுக்கிடையே நடந்த மோதல் குறித்து நம்மிடம் பேசிய தனியார் பள்ளியின் ஊழியர் ஒருவர், “12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் யுவனின் வீடு புதுப்பேட்டையில் உள்ளது. யுவனின் தந்தை தி.மு.க.வில் பொறுப்பில் உள்ளார். 11-ம் வகுப்பு படிக்கும்போதும், இதேபோல சக மாணவர்கள் பலரை யுவன் தாக்கியுள்ளான். 12-ம் வகுப்புக்கு வந்தபிறகும் யுவன் திருந்தவில்லை. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புகூட சக மாணவர் ஒருவரைத் தாக்கினான். இதில் அவனது முகம் கிழிந்து சதை தொங்கியது. அப்போது பள்ளி நிர்வாகம் யுவனின் பெற்றோரை அழைத்துக் கண்டித்ததோடு, வேறு பள்ளிக்கு மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது. ஆனால், யுவனின் பெற்றோரோ, `இனி தங்கள் மகன் அப்படிச் செய்யமாட்டான்' என மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தனர். ஆனால், யுவன் திருந்தவில்லை. ஆகஸ்ட் 18-ம் தேதி மாணவர் ஏக்நாத்தை தாக்கியுள்ளான். எங்கள் பள்ளியைப் பொறுத்தவரை மாணவர்கள் மோதிரம், காப்பு போன்றவற்றை அணிய தடை உள்ளது. ஆனால், யுவன் பிளேடு வைத்த மோதிரத்தைப் போட்டுக்கொண்டு வந்து, சக மாணவர்களைத் தாக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறான். குறிப்பாக, பிற மாணவர்களின் முகத்தை கிழித்து ரத்தம் பார்ப்பது அவனுக்கு ஒரு போதையைப்போல ஆகிவிட்டது. பள்ளி நிர்வாகம் யுவன் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி செய்தால், தி.மு.க.பிரமுகர்கள் அழுத்தம் தருகிறார்கள்” என்றார், வேதனையுடன். ``மாணவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?'' என தனியார் பள்ளியின் பொறுப்பாளர் வானதியிடம் பேசினோம். “இரு மாணவர்களுக்கிடையே நடந்த இந்த மோதல் எங்களுக்கும் மிகுந்த வேதனையைக் கொடுத்தது. பள்ளிக்கு வெளியே நடந்த சம்பவம், காவல்நிலையத்தில் தரப்பட்ட புகார் ஆகியவை குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. சண்டையில் ஈடுபட்ட இரு மாணவர்களையும் தற்காலிகமாக பள்ளியைவிட்டு நீக்கியிருக்கிறோம்’’ என்றார்..மாணவர் தயாரித்த நாட்டுவெடி! ராயப்பேட்டை நிலவரம்தான் இப்படியென்றால், வேளச்சேரி நிலவரம் அடுத்த அதிர்ச்சி! சென்னை கிண்டி-வேளச்சேரி சாலையில் உள்ள குருநானக் கல்லூரியில் மயிலாப்பூரை சேர்ந்த தனுஷ் என்பவர் 3-ம் ஆண்டு பொருளாதாரம் படித்து வந்தார். அதே கல்லூரியில் தாவரவியல் படிக்கும் மாணவர்கள் கடந்த 18ம் தேதி `கானா பாட்டு' பாடியதாகவும் அதனை தனுஷ் என்கிற மாணவர் கிண்டல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தாவரவியல் பிரிவு மாணவர்கள், தனுஷை தாறுமாறாக தாக்கியுள்ளனர். இதனை தாங்கிக் கொள்ள முடியாத தனுஷ், கடந்த 21-ம் தேதி கல்லூரியில் அரங்கேற்றிய சம்பவம் யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. தன்னைத் தாக்கிய தாவரவியல் பிரிவு மாணவர்களை நோக்கி இரண்டு நாட்டு வெடிகளை வீசியிருக்கிறார் தனுஷ். இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த கிண்டி போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதில், மாணவர்களுக்கிடையே நடந்த மோதலில் கோயில் திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் நாட்டு வெடியை பயன்படுத்தியதாகவும் அங்கு கத்தி போன்ற ஆயுதங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் சென்னை காவல்துறை விளக்கம் அளித்தது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு மாணவரை போலீஸார் கைது செய்தனர். கைதான மாணவர் உள்பட மோதலில் ஈடுபட்ட இரு தரப்பையும் சேர்ந்த 18 மாணவர்களை கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கி கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த மோதல் தொடர்பாக 12 மாணவர்கள் மீது கிண்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில், மேலும் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய மேலும் மூன்று மாணவர்களை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர். போலீஸை ஓடவிட்ட போதை மாணவர்கள்! வேளச்சேரிக்கு சவால்விடும் பூந்தமல்லியில் கடந்த 21-ம் தேதி மாணவர்கள் சிலர் நடத்திய சம்பவம், கொடூரத்தின் உச்சகட்டம். பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் சிலர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபடுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தப் பகுதியில் ரோந்து பணியில் இருந்து காவலர் சரவணன் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்றுள்ளார். அங்கு கஞ்சா போதையில் நின்றிருந்த மூன்று இளைஞர்களையும் இரண்டு மாணவர்களையும் விசாரித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த ஐந்து பேரும் நடுரோட்டில் போலீஸ்காரரை கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். அவரைக் குத்துவதற்கும் விரட்டிச் சென்றுள்ளனர். கஞ்சா போதையில் போலீஸ்காரரை இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டி விரட்டும் காட்சிகள், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. லத்தி இருந்தும் அவர்களை எதிர்கொள்ள முடியாமல் காவலர் ஓடும் காட்சிகள், அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து, காவலரை மிரட்டியதாக காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சபரி, சூர்யா, சந்தோஷ் ஆகிய மூன்று பேரை பூந்தமல்லி போலீஸார் கைது செய்ததனர். சம்பவ இடத்தில் இருந்த இரண்டு மாணவர்கள் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இது ஏதோ இந்த ஒரு மாதத்தில் அரங்கேறிய சம்பவங்கள் மட்டுமல்ல, ஆண்டு முழுவதும் எங்கோ ஒரு பள்ளியில் புதுப்புது வடிவங்களில் வன்முறைகள் தலையெடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன. `மாணவர்களுக்கு பழையபடி நன்னெறி வகுப்புகளை நடத்த வேண்டும்; விளையாட்டுகளை நடத்தி அவர்களை மடைமாற்ற வேண்டும், அனைவரும் சமம் என்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்' என்றெல்லாம் கல்வியாளர்கள் கருத்துகளை முன்வைக்கின்றனர். `கல்வி என்பது இருளில் இருந்து ஒளியை நோக்கி நகர்வது' என்பது பொன்மொழி. இதனை உணர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் மாணவர்களும், அதை உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்களும் உள்ளனர். கலவர சூழலை உருவாக்கும் மாணவர்களால் கல்வித்துறைக்கு ஏற்படும் களங்கத்தைப் போக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது, பள்ளிக்கல்வித்துறை. என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?.பாக்ஸ் ஆமாம், பிரச்னை நடந்தது உண்மைதான்! மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ராயப்பேட்டை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் தனசேகரிடம் பேசினோம். “இரண்டு தரப்பும் சமாதானமாகிப் போயிட்டாங்களே சார்? இருவருமே மாணவர்கள். ஃபுட்பால் விளையாடுறதுல பிரச்னை அவ்வளவுதான்”. ``ஏற்கனவே அந்த மாணவர் மீது புகார்கள் இருப்பதாகவும் வீட்டுக்கே ஆட்களை அழைத்து சென்று தாக்கியதாகவும் சொல்கிறார்களே?" ``அப்படி எதுவும் நடக்கவில்லை. இது தவறான தகவல்". ``புகாருக்குள்ளான மாணவர் குறித்து அரசின் குழந்தைகள் நல குழுவுக்கோ, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களுக்கோ தகவல் கொடுக்கப்பட்டதா?''. ``குழந்தைகள் நலக்குழுவுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங் தேவையில்லை என்று கூறிவிட்டார்கள்” என்றார். சென்னை குழந்தைகள் நலக்குழு (தெற்கு) உறுப்பினர் சர்ச்சில் ஜோசப், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் ஆகியோரிடம் கேட்டபோது, “இப்படியொரு தகவலே எங்கள் கவனத்துக்கு வரவில்லை” என்று அறவே மறுத்தனர். - மனோ செளந்தர்.பாக்ஸ்ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு தேவை! பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் முனைவர் அறிவொளியிடம் பேசினோம். ``மாணவர்கள் மத்தியில் சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர்களின் கூட்டங்களில் பேசியிருக்கிறோம். மாணவர்களுக்கு பள்ளிகளில் மனநல பயிற்சிகளை அளித்து வருகிறோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்கள் குறிப்பிடும் பிரச்னை என் கவனத்துக்கு வரவில்லை. இந்த விவகாரத்தில் காவல்துறை, வருவாய், சமூக நலத்துறை என ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. கலெக்டர்களும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தென்மாவட்டங்களில் மட்டுமல்ல, அனைத்து மாவட்டங்களிலும் போதிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம்'' என்றார். - கணேஷ்குமார்