-எஸ்.அண்ணாதுரைபரமண்டலத்தில் இருக்கும் பரமப்பிதா பாவிகளையே மன்னிக்கச் சொல்கிறார். ஆனால், தூத்துக்குடி நாசரேத் சி.எஸ்.ஐ. திருமண்டலத்தில் இருக்கும் நிர்வாகிகளோ பழிவாங்கும் உணர்வோடு பள்ளி ஆசிரியர்களைப் பந்தாடுவது கண்டு கதிகலங்கி நிற்கிறார்கள் மாணவர்கள்!சமீபத்தில் ஓட்டப்பிடாரம் அருகே பெரியநத்தம் கிராமத்தில் இருக்கும் திருமண்டலத்திற்கு பாத்தியப்பட்ட தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சாமுவேல்துரை, கவர்னகிரி தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஜெபராஜ், தலையால் நடந்தான்குளம் கிராம தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆசீர்வாதம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து மாணவர்களும் பெற்றோர்களும் போராட்டத்தில் குதிக்க, இடமாறுதல் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது..என்ன பிரச்னை? ஸ்ரீவைகுண்டம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல உறுப்பினருமான டேவிட்செல்வினிடம் கேட்டோம். “திருமண்டல நிர்வாகத்திற்கு வருகிறவர்கள் அதிகார போதைக்கு அடிமையாகிவிட்டனர். பதவியைக் காப்பாற்றிக்கொள்ள அடிதடி ரகளை வரை ஈடுபடுகின்றனர். ஒவ்வொருமுறையும் நிர்வாகம் மாறும்போது, திருமண்டல வளர்ச்சிக்கு என்ன செய்யலாம் என்று யோசிப்பதற்கு மாறாக, தேர்தலில் நமக்கு எதிராக வேலை செய்தவர்களை எப்படிப் பழிவாங்கலாம் என்றுதான் யோசிக்கிறார்கள். முன்பு திருமண்டலப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஓட்டுரிமை இருந்தது. அவர்கள் ஏதாவது ஓர் அணிக்கு ஆதரவாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால், அவர்களின் ஓட்டுரிமை பறிக்கப்பட்டுவிட்டது.அப்படி இருக்கும்போது அவர்களைப் பழிவாங்க வேண்டிய அவசியம் என்ன? 2017-ம் ஆண்டில் பணியமர்த்தப்பட்ட 150 ஆசிரியர்களுக்கே இன்னும் அரசின் அனுமதி கிடைக்கவில்லை. அரசு உதவி பெறும் பள்ளிகளில் இனிமேல் புதிதாய் ஆசிரியர்கள் நியமிக்கக் கூடாது என்று நீதிமன்ற உத்தரவும் இருக்கிறது. இப்படியிருக்க, இங்கே புதிதாக ஆசிரியர்கள் பணியமர்த்தும் வேலை நடக்கிறது. அதற்காக பணபேரம் நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.பாதிக்கப்பட்ட ஆசிரியர்களோடு மாணவர்களும் போராட்டம் நடத்திவருகிறார்கள். இந்த நேரத்தில் திருமண்டல லே செயலாளர் கிப்ஸ்டன், மேனேஜர் பிரேம்குமார், பிஷப் (பொறுப்பு) திமோதி ரவிந்தர் ஆகியோர் தென் கொரியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார்கள். இதற்காகவா மக்கள் ஓட்டுப் போட்டு இவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்?’’ என்றார் காட்டமாக..திருமண்டல பொருளாளர் மோகனிடம் கேட்டோம். “முந்தைய நிர்வாகம் செய்த தவறை நாங்கள் செய்யமாட்டோம் என்று சொல்லிதான் மக்களிடம் ஓட்டுக் கேட்டோம். ஆனால், அதை மீறுவதுபோல இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. ஓட்டுரிமை இல்லாத ஆசிரியர்களை மொத்தமாக மாற்றவேண்டிய அவசியம் ஏன் என்றுதான் புரியவில்லை’’ என்றார்.மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ரெஜினாவிடம் கேட்டதற்கு, “திருமண்டல நிர்வாகம் தனி அதிகாரம் கொண்டது. அவர்களுக்கு இடமாறுதல் செய்ய அதிகாரம் இருந்தாலும் விருப்பப்படாத ஆசிரியர்களை மாற்றுவது தவறு. விவகாரத்தை விசாரிக்கச் சொல்லியிருக்கிறேன். தவறு இருந்தால் நாங்கள் தலையிடுவோம்” என்றார்.பாவிகளையே ரட்சிக்கச் சொன்னவரின் திருமண்டலத்தில் அப்பாவி ஆசிரியர்களைப் பழிவாங்குவது பாவம்!