-எஸ்.அண்ணாதுரைஇது ரெய்டு சீசன். அமைச்சர்கள், அதிகார பிரமுகர்கள் மட்டுமல்ல... தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியையும் விட்டுவைக்கவில்லை வருமான வரித்துறை ரெய்டு. கடந்த ஜூன் 27 அன்று அந்த வங்கியின் தூத்துக்குடி தலைமையகத்தில் ஐ.டி நடத்திய ரெய்டு பல்வேறு கேள்விகளையும் சர்ச்சைகளையும் எழுப்பியிருக்கிறது!.முதல்நாள் காலை 10.30 மணி முதல் மறுநாள் காலை 6.30 மணி வரை விடியவிடிய நடந்த அந்த ரெய்டுக்காக அடுக்கப்படும் காரணங்களைப் பார்ப்போம்...காரணம் 1செந்தில் பாலாஜியும் பிரபல இசை அமைப்பாளர் ஒருவரும் இந்த வங்கி மூலம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்திருக்கிறார்கள். அது பற்றி ஆய்வு செய்யவே ரெய்டு என்றார்கள். பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியின் பினாமிகள் பெயரில் தூத்துக்குடியில் தனியார் பேருந்துகள் இயங்குகின்றன. அவர்களுக்கு மெர்க்கன்டைல் வங்கியில் கணக்குகள் இருக்கின்றன. அவர்கள் சமீப காலத்தில் வங்கி மூலம் செய்த பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்யவே இந்த ரெய்டு என்றார்கள்.காரணம் 2கடந்த மே மாதம் இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. மெர்க்கன்டைல் வங்கியின் இயக்குநர்களாக உள்ளவர்கள், தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பெருமளவில் 2000 ரூபாய் நோட்டுகளை இந்த வங்கியில் டெபாசிட் செய்திருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில் நடந்த சோதனை என்று கூறப்பட்டது.காரணம் 3ரிசர்வ் வங்கிக்கு மெர்க்கன்டைல் வங்கி தாக்கல் செய்த பணப் பரிவர்த்தனை தொடர்பான நிதிநிலை அறிக்கையில் வருமான வரித்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் வருமான வரித்துறை சட்டம் 285 பிரிவு ஏயின் கீழ் சோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது..காரணம் 4இதுதான் மிகவும் சென்செட்டிவ்வாகப் பரவிய தகவல். நாடார் வங்கி எனத் தொடங்கப்பட்டு, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி என்று பெயர் மாற்றப்பட்டிருந்தாலும் இன்னும் அது நாடார் சமூகம் சார்ந்த வங்கியாகவே பார்க்கப்படுகிறது. இந்த வங்கியின் பெருமையைச் சிதைக்கவே அமலாக்கத்துறை மூலம் இப்படி ஒரு சோதனை பா.ஜ.க. நடத்தியிருக்கிறது என்கிறார்கள் ஒரு தரப்பினர்.எது உண்மையான காரணம் என்று வங்கி அதிகாரிகளோ, வங்கி இயக்குநர்களோ வெளிப்படையாகப் பேச மறுத்துவிட, தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷிடம் கேட்டோம். "அது நாடார்களால் தொடங்கப்பட்ட வங்கிதான். ஆனால், இன்றைக்கு அப்படி இல்லை. நாடார் சமுதாயக் கல்விக்கு உதவி, வேலை வாய்ப்பில் முக்கியத்துவம் தருவது என்று தொடக்கத்தில் விதிக்கப்பட்ட சட்டதிட்டம் எதுவும் இப்போது நடைமுறையிலேயே இல்லை. எனவே அதை இனிமேலும் நாடார் வங்கி என்பதே தவறு. பிரச்னையில் இருந்து தப்பிக்க, வங்கி அதிகாரிகளே பா.ஜ.க.வின் பழிவாங்கும் நடவடிக்கை என்று கொளுத்திப் போட்டிருக்கலாம்” என்றார்.ஒருவேளை பேங்குக்கு தமிழ்நாடுன்னு பேரு வெச்சது காரணமா இருக்குமோ!