``கோடை முடிந்தும் வெயில் வாட்டி வதைக்கிறதே?'' என வியர்த்தபடியே ஆசிரமத்துக்குள் நுழைந்த வம்பானந்தாவுக்கு நன்னாரி சர்பத்தை நீட்டிய சிஷ்யை, ``அண்ணாமலை ரொம்பவே டென்ஷன் ஆகிவிட்டாராமே?'' என்றபடியே கச்சேரியைத் தொடங்கி வைத்தார். .``ஆமாம். ஆகஸ்ட் 5-ம் தேதி மதுரையில் அண்ணாமலை நடைபயணத்தின்போது ஆட்களைத் திரட்டுவதில், நிர்வாகிகள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. அதில், பெண் நிர்வாகி ஒருவர் அதிகளவில் ஆட்களை திரட்டவே, பதறிப்போன ஒரு நிர்வாகி சில ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் பேசியிருக்கிறார்.நடைபயணத்துக்கு முன்னதாக அண்ணாமலையை சந்திக்க விஜய் ரசிகர்களையும் அழைத்துச் சென்றிருக்கிறார், அந்த நிர்வாகி. அப்போது, `டில்லிக்கு மோடி, தமிழகத்துக்கு தளபதி விஜய்' என விஜய் ரசிகர்கள் கோஷம் போடவே, அண்ணாமலைக்கு ஏக டென்ஷன்.மறுநாள் அண்ணாமலையின் நடைபயணத்தில் ரசிகர்களைத் தவிர்த்தபோதும், ரசிகர் மன்ற கொடியுடன் சிலர் கலந்து கொண்டனர். இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியாக, விசாரணையை நடத்தியிருக்கிறார், புஸ்ஸி ஆனந்த். அதில், மதுரையில் நடந்த விஷயங்களை மக்கள் இயக்க நிர்வாகிகள் கூறினாலும், சிலரை இயக்கத்தில் இருந்தே நீக்கிவிட்டார்''.``அது சரி.. நடைபயணத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு டெல்லிக்குப் பறக்கத் தயாரான அண்ணாமலை, பயணத்தை ரத்து செய்தது ஏன்?''``அண்ணாமலையின் பேச்சு அ.தி.மு.க. சீனியர்களை ரொம்பவே எரிச்சல்படுத்தியதால், டெல்லிக்கு அழைத்து வார்னிங் கொடுக்கவே நட்டா அழைத்ததாகக் கூறப்பட்டது. ஆனால், ஜே.பி.நட்டா அழைத்தது, அண்ணாமலையை எச்சரிக்க இல்லையாம். `கூட்டணியில் இருந்து அ.தி.மு.க.வை கழற்றிவிட்டு அவர்களது வாக்குவங்கியை நாம் கைப்பற்ற முடியுமா?' என்று விவாதிக்கத்தானாம்.இதனை அண்ணாமலையிடம் கேட்டால், அவர் டபுள் ஓ.கே. சொல்லத்தான் வாய்ப்பு அதிகம் என்பதால் அவரது வருகைக்குத் தடைபோட்டுவிட்டனர். பிறகு, தமிழக அரசியலின் தட்பவெப்ப நிலையை நன்கறிந்த நபரும் கோஷ்டி அரசியல் செய்யாதவருமான பேராசிரியர் ஸ்ரீனிவாசனை டெல்லிக்கு அழைத்துள்ளனர். அவரும், சில புள்ளிவிவரங்களைப் பட்டியலிட்டதோடு, `மோடியின் முகவரி' என்ற பெயரில் டிஸ்பிளே ஒன்றையும் போட்டுக் காட்டிவிட்டு வந்திருக்கிறாராம்.''`` புது தகவலா இருக்கே. அன்வர் ராஜாவை தொடர்ந்து முக்கிய நபர் ஒருவரையும் தன் பிடிக்குள் கொண்டு வந்துவிட்டாராமே எடப்பாடி?''.``முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியை தானே சொல்கிறாய்? எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர், கே.சி.பி. இதனால், அவரை அ.தி.மு.க.வில் இருந்தே இருவரும் நீக்கினார்.அவரும், `கொடி பிடிக்கும் தொண்டன் முடிவு செய்வான்' எனக் கூறி ஆன்லைன் கூட்டங்களை நடத்திவந்தார். மேலும், அ.தி.மு.க.வின் கொடி, சின்னம் ஆகியவற்றை கே.சி.பழனிசாமி பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எடப்பாடி சார்பில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கை தற்போது எடப்பாடி திரும்பப் பெற்றிருக்கிறார். காரணம், கடந்த வாரம் கே.சி.பழனிசாமி, எடப்பாடியை சேலம் இல்லத்தில் சந்தித்துப் பேசியதுதானாம். விரைவில் அவர் அ.தி.மு.க.வில் ஐக்கியமாகலாம்.இதுபோக, ஓ.பி.எஸ் தரப்பில் இருக்கும் முக்கிய நபர் ஒருவரிடம் எடப்பாடி தரப்பு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. ஆகஸ்ட் 20-ம் தேதி மதுரை மாநாட்டில் அவரை மேடையேற்றி பன்னீருக்கு ஷாக் கொடுப்பதில் எடப்பாடி தீவிரம் காட்டி வருகிறாராம்''.``ஓஹோ.. தி.மு.க - பா.ம.க. இடையே மோதல் முற்றியிருக்கிறதே?''.`` ஆமாம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுவிட வேண்டுமென பா.ம.க. முடிவு செய்தது. துரைமுருகனும், பா.ம.க.வை கூட்டணியில் சேர்த்துக்கொள்ள ஸ்டாலினிடம் பேசிவந்தார். இது ஒருபுறம் நடந்தாலும், மறுபுறம் பா.ஜ.க.வுடனும் பேசிக் கொண்டிருந்தது, பா.ம.க.`என்.டி.ஏ கூட்டணியில் தொடர்கிறோம்' எனக் கடந்த வாரம் அன்புமணி அறிவித்தார். இது அறிவாலயத்தை ரொம்பவே கோபப்படுத்திவிட்டது. விளைவு, அன்புமணியை கடுமையாக தாக்கியிருக்கிறார், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். இதற்கு அன்புமணியும் பதிலடி கொடுக்கவே, 10.5 சதவிகித இடஒதுக்கீடு விவகாரத்தை கையில் எடுத்து பா.ம.க.வுக்கு எதிராக தீவிரம் காட்ட தி.மு.க. முடிவு செய்துள்ளதாம்''``பா.ம.க.வும் அமைதியாக இருக்காதே சுவாமி... சரி, தி.மு.க.வில் மீண்டும் பி.டி.ஆருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதாமே?''``உண்மைதான். நிதியமைச்சராக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இருந்தபோது, தி.மு.க. தலைமை குறித்து அவர் பேசியதாக கூறப்பட்ட ஆடியோ, அவரது இலாகா மாற்றத்துக்குக் காரணமாக அமைந்தது. மதுரையிலும் கட்சி நிகழ்ச்சிகளில் அவரைப் புறக்கணித்தனர்.இதைப் பற்றி எதுவும் பேசாமல் பி.டி.ஆரும் மௌனம் காத்துவந்தார். இந்நிலையில், கேரள சட்டமன்ற நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் சிறப்பு அழைப்பாளரை அனுப்பி வைக்குமாறு அம்மாநில அரசு கோரியிருந்தது. இதைத் தொடர்ந்து, பி.டி.ஆரை கேரள சட்டமன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஸ்டாலின் அனுப்பி வைத்தார்..அன்று, மத்திய அரசின் பொது சிவில் சட்டத்துக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், `சிறப்பு அழைப்பாளர்' என்ற முறையில் பி.டி.ஆரும் கையெழுத்து போட்டு வந்திருக்கிறார்.''``நல்ல விஷயம்தான். நடிகர் விஜய்க்கு எதிராக தி.மு.க தரப்பிலும் சில முயற்சிகள் நடக்கிறதாமே?''`` ஆமாம். கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி தி.மு.க மாணவரணி சார்பில் மாவட்டம்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில், வெற்றிபெறும் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா மேடையில், 234 தொகுதிகளிலும் மாணவர் மன்றம் தொடங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாக இருக்கிறதாம். விஜய் பயிலகம் தொடங்கப்பட்டதற்கு போட்டியாக இந்த மாணவர் மன்றமாம்''`` எல்லாம் ஓட்டு அரசியல்...''.`` அடுத்து நான் சொல்லப் போவது மிக முக்கியமான தகவல். தமிழகத்தில் பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி பெரும் குழப்பத்தில் இருந்துவரும் நிலையில், கமுக்கமாக ஒரு சர்வேவை எடுத்துள்ளது மத்திய பா.ஜ.க. `தமிழகத்தில் பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணியுடன் நடிகர் விஜய்யும் கூட்டு சேர்ந்தால் அதன் எதிரொலி எப்படி இருக்கும்?' என்று தெரிந்துக்கொள்ள ஒரு டீமை களமிறக்கியுள்ளது. தமிழகம் முழுவதும் எடுக்கப்பட்ட சர்வே முடிவு, பா.ஜ.க.வினரை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது.ஒருவேளை, அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியோடு விஜய்யும் கூட்டணி சேர்ந்துவிட்டால், தமிழகம், புதுச்சேரி என்று மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் ஸ்வீப் அடிக்க முடியும் என்று ரிசர்ட் கிடைத்துள்ளதாம். இதனால் டெல்லி மேலிடம் சற்று உற்சாகம் அடைந்துள்ளது. அதேநேரம், `இந்தக் கூட்டணி நிச்சயம் சாத்தியம் இல்லை. விஜய்யை கூட்டாளியாக கருதாமல், எதிராளியாக கருதி கவலைப்படுவதே சரியாக இருக்கும்' என்று எச்சரித்துள்ளனர் சிலர் சீனியர் பா.ஜ.க தலைவர்கள்'' எனக் கூறியபடியே, கச்சேரிக்கு என்ட் கார்டு போட்டுவிட்டு கரூர் ரெய்டு தொடர்பான செய்தியில் ஆர்வம் காட்டத் தொடங்கினார், வம்பு..டெல்லி வாத்தியார்செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறையினர் நடத்தும் விசாரணையின் அன்றாட விவரங்களை அன்றைய தினமே அமித் ஷாவுக்கு அனுப்பிவருகின்றனர் அதிகாரிகள். கடைசிகட்ட தகவல்களின்படி, செந்தில் பாலாஜி, `தன் தம்பி எங்கு இருக்கிறார்?' என்கிற ரகசியத்தை உடைத்துவிட்டார் என்கிறார்கள் அதிகாரிகள். ஆனால், இப்போது அவர் சொன்ன இடத்திலும் அவர் தம்பி அசோக் இல்லை என்பதுதான் லேட்டஸ்ட் அப்டேட்!.அமித்ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் டெல்லியில் இருக்கும்போதெல்லாம் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சீனியர் பத்திரிகையாளர்களைச் சந்திக்கத் தொடங்கியுள்ளனர். அவர்களிடம், பிற மாநிலங்களில் பா.ஜ.க மீதான மக்கள் பார்வை, எதிர்க்கட்சிகள் மீதான பார்வை போன்றவற்றை அலசுகிறார்கள். இந்தத் தகவல் உடனுக்குடன் பிரதமர் மோடிக்கு பாஸ் செய்யப்படுகிறதாம். ‘ஜெயிலர்’ படம் ரிலீஸ் ஆன நிலையில், ரஜினிகாந்த இமயமலைக்குக் கிளம்பிவிட்டார். அங்கே சுவாமி தயானந்தர் ஆசிரமத்தில் தங்க திட்டமிட்டிருப்பவர், உத்தரகண்ட் மாநிலத்தின் சீனியர் பா.ஜ.க புள்ளிகளிடம் ஆலோசிக்க இருக்கிறாராம். இன்னொரு பக்கம், டெல்லியில் ஒருநாள் முகாம் போடும் ரஜினியை வளைக்க காங்கிரஸிலும் சிலர் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப், ராகுல் காந்தியிடம் ரஜினியை அறிமுகப்படுத்த ஆர்வம் காட்டுகிறார். ரஜினி சிக்குவாரா என்பது சந்தேகம்தான்!