“மிஸ்டர் மலை தலைநகரம் பறக்கப்போவதாக தகவல் வருகிறதே, உண்மையா சுவாமி?” சாறல் மழையில் நனைந்து வந்த வம்பானாந்தாவுக்கு தலை துவட்ட துண்டுகூட கொடுக்காமல் கேட்டார் சிஷ்யை!.“ராஜ்ய சபாவைப் பொறுத்தவரை 12 நியமன எம்.பிக்கள் உள்பட மொத்தம் 250 பேர் உள்ளனர். இதில், ஆளும் கட்சியான பா.ஜ.க.வைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டெரக் ஓ பிரையன் உள்ளிட்ட 10 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 28 -ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 18 -ம் தேதி ஆகிய தேதிகளுடன் நிறைவடைகிறது. இதனால், ஜூலை 24-ம் தேதி இதற்கான தேர்தலை நடத்தலாமா என்று ஆலோசித்துவருகிறது தலைமை தேர்தல் ஆணையம். இது தொடர்பாக ஆளும் கட்சி தலைமையிடமும் ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது.இதையடுத்து பதவிகளைப் கைப்பற்ற பெரும் லாபியே நடக்கிறது. பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகிகள் பலரும் சோர்ஸ் மூலம் ஃபோர்ஸ் காட்டி வருகிறார்கள். இதில் எதிர்பாராத ட்விஸ்ட்டாக அண்ணாமலைக்கு பதவி கேரண்டி என்கிறார்கள். காரணம், கொடுத்த அசைன்மென்ட்டை அவர் கச்சிதமாக முடித்துவிட்டார் என்கிற வகையில் 10 பேரில் இவரது பெயர் முதலில் டிக் செய்யப்பட்டுள்ளதாம். இதைக் கேட்டு கடுப்பாகி தலைசுற்றிக் கிடக்கிறார்களாம் தமிழகத்தின் சீனியர் பா.ஜ.க நிர்வாகிகள்!”.“அடடா... தமிழகத்தில் எடப்பாடி உட்பட பலர் கொண்டாடி தீர்த்துவிடுவார்களே... அது சரி, அவர் டெல்லி சென்றுவிட்டால், கமலாலயத்தை யார் பார்த்துக்கொள்வார்களாம்?”“கமலாலயத்தை ரவுண்ட் கட்டும் கேள்வி இதுதான். இப்போதைக்கு ‘சாய்ஸ் 3’ பட்டியல் வைத்திருக்கிறார்கள். பெயர் டிக் அடிக்கப்படும்போது யார் என்பதை சொல்கிறேன். ஆனால், அப்படி மலை டெல்லி கிளம்பினால், பி.டி.ஆர். ஆடியோ போலவே இன்னும் ஒன்றிரண்டு ஆடியோகளை வெளியிட்டு ரத்தம் பார்க்காமல் போக மாட்டாராம்..குறிப்பாக, தி.மு.க அமைச்சரின் உதவியாளர் ஒருவரின் வீடியோ ஆதாரம் ஒன்று மலையிடம் சிக்கியுள்ளதாம். ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்துவரும் பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் லே அவுட் அப்ருவல் பெற பெரிய தொகை ஒன்றை அந்த இன்ஷியல் அமைச்சரின் உதவியாளரிடம் கொடுத்திருக்கிறார். தலைமைச் செயலகத்தில் அமைச்சரின் இருக்கைக்கு அருகில் அமர்ந்து இந்த டீலை முடித்திருக்கிறார் உதவியாளர். இதையெல்லாம் பா.ஜ.க. நிர்வாகி ரகசிய கேமராவில் வீடியோ எடுத்திருக்கிறார். பெரிய தொகை கொடுத்தும் லே அவுட் அப்ரூவல் கிடைக்காததால், அந்த வீடியோ ஆதாரத்தை மலையிடம் பா.ஜ.க. நிர்வாகி பகிர்ந்துவிட்டராம். இதை தெரிந்துகொண்ட அமைச்சர் தரப்பு உதவியாளரை கழற்றிவிட தயாராகிவிட்டது.”“திரைப்பட நட்சத்திரங்களின் பாணியில் கேரவன் வாங்கியிருக்கிறாராமே எடப்பாடி?”“முதுகுவலி, மூட்டு வலி தொடங்கி சுமார் எட்டுவித வலிகளால் அவஸ்தைப்பட்டு வருகிறார் எடப்பாடி. நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடாது. மேடைகளில் நீண்ட நேரம் நின்று பேசக்கூடாது, டென்ஷன் ஆகக்கூடாது என்பது தொடங்கி ஏகப்பட்ட ஆலோசனைகளை மருத்துவர்கள் அவருக்கு வழங்கியுள்ளார்கள். விரைவில் அவர் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு செல்லவிருக்கிறார். அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ ஆலோசனைகளில் ஒன்றுதான், கேரவன். சகல வசதிகளும் அடங்கிய இந்த கேரவனை கட்சி நிர்வாகி வெங்கடாச்சலம் என்பவர் பெயரில் வாங்கியிருக்கிறார்கள்.ஆனால் இந்த கேரவனில் எடப்பாடியின் பயணம் ஒன்றும் அவ்வளவு உற்சாகமாக இல்லை. 2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வந்து கொண்டிருக்கும்நிலையில் அ.தி.மு.க சார்பில் இன்னமும் பூத் கமிட்டி அமைப்பதில் கட்சி நிர்வாகிகள் ஆர்வம் காட்டவில்லை. கட்சியில் உறுப்பினர் சேர்க்கை மூன்று மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்ப்பது என்று டார்கெட் ஃபிக்ஸ் செய்திருந்தார் எடப்பாடி. டார்கெட்டில் கால்வாசியைக்கூட மா.செ-க்கள் எட்டிப்பிடிக்கவில்லை. ஆனாலும், அவர்கள் மீது கோபத்தை காட்டவோ, பொறுப்பில் இருந்து நீக்கவோ தயங்குகிறார் பழனிச்சாமி..இதை தொடர்ந்துதான் மாவட்டச் செயலாளர்களுடன் ஜூலை 5ம் தேதி ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது எடப்பாடி சில அதிரடிகளைக் காட்ட வாய்ப்பு இருக்கிறது என்கிறது எம்.ஜி.ஆர் மாளிகை பட்சி.” “டெல்லி விசாரணை ஏஜென்சிகளின் மூன்றாவது வார அப்டேட் என்னவோ சுவாமி?”“தலைமறைவாக இருக்கும் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமாருக்கு மூன்றாவது சம்மன் அனுப்பியிருக்கிறது ஐ.டி. வரும் ஜூலை 27-ம் தேதி அவர் ஆஜராக வேண்டும். இன்னொரு பக்கம் தமிழகத்தின் சீனியர், ஜூனியர் அமைச்சர்கள் மீது கண்களைப் பதித்து இமைக்கா நொடிகள் எஃபெக்டில் வலம் வருகிறார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள். இதனால் நடுக்கத்தில் இருக்கும் ஆறு அமைச்சர்கள் வெளியே எங்கும் வாயைத் திறந்து மட்டுமல்ல... மைண்ட் வாய்ஸில்கூட பேச பயப்படுகிறார்கள். அமலாக்கத்துறையின் கூரிய பார்வை பட்டியலில் கே.என்.நேரு, எ.வ.வேலு, அனிதா ராதாகிருஷ்ணன், ரகுபதி, முத்துசாமி, கண்ணப்பன் என்று பெயர்கள் நீள்கின்றன. இவர்களைப் பார்த்து உஷாராகும் மற்ற அமைச்சர்களும் இப்போது எதிராக வாயை மூடித்தான் பேசுகிறார்கள்”..“சென்னையில் நல்ல மழை என்றாலும் ஆயிரம் விளக்கு தொகுதியில் மட்டும் அனல்காற்று வீசுகிறதாமே சுவாமி?” சூடான வெங்காய பக்கோடா கொடுத்தபடி கேட்டார் சிஷ்யை.” “ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ., எழிலனுக்கும் மாவட்டச் செயலாளர் சிற்றரசுக்கும் ஒத்துப்போகவில்லை. டாக்டரான எழிலன் முக்கால்வாசி நேரத்தை மருத்துவமனையிலேயே செலவிடுகிறார். இதை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்ட மாவட்டச் செயலாளர் சிற்றரசு மற்றும் பகுதி செயலாளர் அன்பு ஆகியோர் தொகுதியில் அடிக்கடி கபடி ஆடிவிடுகிறார்களாம். இவர்கள்தான் தொகுதியில் அனைத்து டீலிங்குகளையும் முடிவு செய்கிறார்கள்.இதையெல்லாம் ஒரு கட்டத்துக்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாத எழிலன் சமீபத்தில் இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். தொடர்ந்து அறிவாலயத்தில் டீம் அமைத்து ரிப்போர்ட் கேட்கப்பட்டிருக்கிறதாம்.”. “ஓஹோ...”“ஒரு சுவாரசியமான தகவல் கேள்விப்பட்டேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கம்யூனிஸ்ட்டுகள் பாணியில் பா.ஜ.க.வினரும் பொதுமக்களிடம் உண்டியல் ஏந்தவிருக்கிறார்களாம். 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, டெல்லியில் இருந்து தமிழக பா.ஜ.கவுக்கு முதற்கட்டமாக நூறு பெரிய ஸ்வீட் பாக்ஸ்களை ஒதுக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம். இது தேர்தல் பிரசாரத்தின்போது விநியோகிக்கப்படுமாம். எதிர்காலத்தில் இதில் கருப்பு வெள்ளை பிரச்னை வந்துவிடக் கூடாது என்பதற்காகதான் உண்டியல் உத்தியாம்!” “ஐ.ஏ.எஸ். அதிகாரி மாற்றத்திலும் சலசலப்பு கேட்கிறதே?””ஆமாம், உயர்க்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளராகவும் கவர்னரின் தனி செயலாளராகவும் இருந்த கார்த்திகேயன், தற்போது நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளராக மாற்றப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கே ஷாக்காம். ‘ஏற்கெனவே கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அப்போதைய அமைச்சர் வேலுமணியுடன் நெருக்கமானவராக கருதப்பட்ட அதிகாரியை ஏன் நேருவின் துறைக்கு நியமித்தார்கள்?’ என்று கோட்டை வட்டாரத்தில் இருந்தே புகைச்சல் கிளம்பியிருக்கிறது. சம்பந்தப்பட்ட அமைச்சர் தனக்கு ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ்-தான் வேண்டும் என்று கேட்டாராம். ஆனால், துறை அமைச்சரான செந்தில்பாலாஜியும் இல்லாமல் மின்வாரியம் நெருக்கடியான சூழலில் இருப்பதால், அவரை நியமிக்கவில்லையாம்!” “மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் கார் பரிசு கொடுத்து மகிழ்ந்திருக்கிறாரே உதயநிதி?”“இதெல்லாம் அடிக்கடி திரையுலகில் நடக்கும் டிராமா. படம் ரிலீஸாகி அடுத்த ஐந்து நாட்களுக்கு கலெக்ஷனை தக்கவைக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று முன்கூட்டியே எழுதப்பட்ட ஸ்கிரிப்ட்” என்றபடி புல்லட்டை உதைத்துக் கிளம்பினார் வம்பு!. டெல்லி வாத்தியார்மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ஸ்மிருத்தி இரானி ஆகியோரை மீண்டும் கட்சி பணிக்குக் கொண்டுவருவது பற்றி பரிசீலித்து வருகிறது டெல்லி பா.ஜ.க தலைமை. நட்டாவும் மாற்றப்படுவார் என்கிறார்கள். விரைவில் மாற்றப்படவிருக்கும் மத்திய அமைச்சரவையில் சில தலைகள் உருளலாம். புதியதாக சில தலைகள் சேரலாம். ஆனால், தமிழகத்துக்கு ஒரு அமைச்சர் பதவிகூட கிடைக்காது என்கிறது செங்கோட்டை பட்சி!2024 தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க முழுவீச்சில் தயாராகிவரும் நிலையில் பிரசார உத்திகளை வகுத்துத்தர, மெகா பட்ஜெட்டில் அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு ‘வி கேன்’என்ற ஸ்லோகத்துடன் வெற்றிவாய்ப்பை உருவாக்கித்தந்த அதே நிறுவனம்தான் இது. ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு விசிட் அடிக்கவுள்ள இந்த நிறுவனம், நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறதாம்!