நிலவில் 100 மீட்டரைக் கடந்த பிரக்யான் ரோவரையும் சதுரங்கத்தில் சாதனை எல்லையைத் தொட்ட பிரக்ஞானந்தாவையும் நாடே உச்சிமுகர்கிறது. `ஈன்றபொழுதில் பெரிதுவக்கும்' வரிகளுக்கேற்ப மகனின் வெற்றியை தள்ளி நின்று ரசித்த நாகலட்சுமிக்கும் ஏக அப்ளாஸ். பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த நாகலட்சுமியிடம் பேசினோம்.அஜர்பைஜானில் நடந்த சதுரங்கத்தில் பிரக்ஞானந்தாவின் ஆட்டத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்காக பிரக்ஞானந்தா நீண்டகாலம் கடுமையாகப் பயிற்சி எடுத்துக்கொண்டார். இது, எட்டு சுற்றுகளைக்கொண்ட ‘நாக் அவுட்’டோர்னமென்ட். ஒரு போட்டியில் தோற்றாலும் வெளியேற்றிவிடுவார்கள். எனவே, தொடக்கம் முதலே கவனம் சிதறாமல் விளையாடினார். பங்கேற்றவர்கள் அனைவருமே செஸ் விளையாட்டில் ஜாம்பவான்கள்தான். ஆனாலும், பிரக்ஞானந்தா நிதானமாக விளையாடியதால், இறுதிப்போட்டிக்கு முன்னேறி வெள்ளிப் பதக்கம் வென்றார்.செஸ் போட்டிக்கு முன்பாக, உங்கள் மகனை எப்படியெல்லாம் ஊக்கப்படுத்துவீர்கள்?அடிப்படையில் எனக்கு செஸ் போட்டியைப்பற்றி எதுவுமே தெரியாது. பிரக்ஞானந்தாவுக்கு அவருடைய பயிற்சியாளர்தான் அனைத்து ஆலோசனைகளையும் வழங்குவார். மகனின் உடல்நிலையை கவனித்துக்கொள்வதுதான் ஒரு தாயாக என்னுடைய வேலை. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஆரம்ப நாட்களில் நடக்கும் போட்டிகள் சிலநேரம் ஆறு மணிநேரம்கூட தொடர்ந்து நடைபெறும். அந்தசமயத்தில் உடல்நிலை ஆரோக்கியமாக இருந்தால்தான் போட்டியில் முழு கவனத்தை செலுத்த முடியும். எனவேதான், அவர் வெளிநாடு டூர் போகும்போது, நானும் அவருடன் சென்றுவிடுவேன். அங்கு சத்தான தென்னிந்திய உணவுகளைத் தயாரித்துக் கொடுத்து அவரின் உடல்நிலையைப் பார்த்துக்கொள்வேன்.வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் ஓய்வே எடுக்காமல் கொல்கத்தாவுக்கு பிரக்ஞானந்தா விரைந்தது ஏன்?விரைவில் சீனாவில் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது. அதற்கான பயிற்சி முகாம் கொல்கத்தாவில் நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்வதற்காகவே பிரக்ஞானந்தா சென்றுள்ளார். அங்கு பயிற்சியின் முடிவில் ரேபிட் செஸ் போட்டிகளும் நடைபெறும். அதிலும், அவர் கலந்துக்கொள்வார். இந்தப் போட்டிகள், ஆசிய செஸ் போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்பட உதவியாக இருக்கும்.எப்போதுமே மகனுடன் செல்லும் நீங்கள், கொல்கத்தாவுக்கு ஏன் போகவில்லை?அதற்கு ஒரே காரணம், எனக்கு ஓய்வு தேவை (சிரிக்கிறார்). கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வெளிநாடுகளில் பயணம். இந்தியா திரும்பிய பிறகும் ஓய்வு கிடைக்கவில்லை. இப்போது சற்று ஓய்வு எடுத்தால்தான், ஆசியப் போட்டிக்கு மகனுக்குத் துணையாகச் செல்ல முடியும்.போட்டிகளின்போது ஜாம்பவான்களுடன் மோதும்போது ஏற்படும் மனஅழுத்தத்தை பிரக்ஞானந்தா எப்படிச் சமாளிக்கிறார்?இன்று அவர் போட்டிகளில் வென்று கொண்டிருந்தாலும், அவரும் பல போட்டிகளில் தோற்றிருக்கிறார். அத்தகைய நேரங்களில் அவர் மெளனமாக இருப்பார். மனதை அமைதிப்படுத்திக்கொள்ள சினிமா காமெடிகளைப் பார்ப்பார். பிறகு, தன் தவறு எங்கே நடந்தது என்று ஆராய்ந்து, அதைத் தவிர்க்கப் பயிற்சி செய்து திருத்திக்கொள்வார்.தினமும் எவ்வளவு நேரம் பயிற்சியை எடுத்துக் கொள்வார்?இப்போதுதான் அவர் பிளஸ் 2 முடித்தார். தற்போது அவரின் முழு கவனமுமே செஸ்ஸில்தான் இருக்கிறது. சர்வதேச செஸ் போட்டிகள் இரவில்தான் நடக்கும். சில சமயம் அவை முடிவதற்கு இரவு 2 மணிகூட ஆகும். அப்போதெல்லாம் அவர் கம்யூட்டர்முன் உட்கார்ந்து செஸ் விளையாடிக்கொண்டே இருப்பார். போட்டி முடிந்த பிறகுதான் தூங்க முடியும். இரவு லேட் ஆக தூங்குவதால் பகலில் லேட்டாகத்தான் எழுவார்.இப்படி அவர் செயல்படும் நேரம் அப்நார்மலாக இருப்பதால், அவரின் உடல்நலத்தில் நாங்கள் கவனம் செலுத்திவருகிறோம். மாலையில் வாக்கிங் செல்வது, டூர் செல்லும் இடங்களில் தங்கும் ஹோட்டல்களில் டேபிள் டென்னிஸ் விளையாடுவது, நேரம் கிடைக்கும்போது ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது இவை பிரக்ஞானந்தாவின் ரொட்டீன் பழக்கங்கள்.முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்த அனுபவம் எப்படி இருந்தது?ரொம்பவே நன்றாக இருந்தது. நாங்கள் தமிழகம் திரும்பியபோது, பிரக்ஞானந்தாவுக்கு தமிழக அரசு உற்சாகமான வரவேற்புகளை அளித்தது. இதையடுத்து, முதல்வர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வரவே அங்கு சென்றோம். அங்கு சர்ப்ரைஸ் பரிசாக எங்கள் குடும்ப உறுப்பினர்போலவே முதல்வர் ஸ்டாலினும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பேசி வாழ்த்தினர். அடுத்த ஆச்சர்யமாக, பிரதமர் மோடியின் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. உடனடியாக டெல்லி சென்று பிரதமரை சந்தித்தோம். அவரும் எங்களுடன் வெகு இயல்பாக உரையாடியதோடு என் மகனை வாழ்த்தி ஆசிர்வதித்தார். கூடவே, ஒரு செஸ் போர்டையும் கிஃப்டாக பிரக்ஞானந்தாவுக்கு அளித்தார்.முதல்வர், பிரதமர் என அடுத்தடுத்து வந்த அரசியல் அழைப்புகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?இதில் எந்த அரசியலும் இல்லை. ஒரு ஃபேமிலியாக நமது உறவினர்களோடு உட்கார்ந்து பேசும்போது எப்படி இருக்குமோ அப்படித்தான் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடியுடனான சந்திப்பும் இருந்தது.செஸ் போட்டியில் பிரக்ஞானந்தாவின் அடுத்த இலக்கு என்ன?தற்போது சர்வதேச ரேங்க் பட்டியலில் 19ம் இடத்தில் உள்ளார். அவர் தனது ரேட்டிங்கை அதிகப்படுத்த வேண்டும். அதற்கு இன்னும் பல சர்வதேச போட்டிகளில் வெற்றிபெற வேண்டும். அதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார்.உங்கள் மகனின் வெற்றியைத் தொடர்ந்து இங்கே ஏராளமான குழந்தைகளுக்கு செஸ் விளையாட்டில் ஆர்வம் வந்துள்ளதே?இது நல்லதுதான்... ஆர்வத்தை வெறும் பொழுதுபோக்காக நினைக்காமல், முறையான பயிற்சியும் முயற்சியும் இருந்தால், எதிர்காலத்தில் யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம். - அபிநவ்