பாபு படங்கள் : ம.செந்தில்நாதன்ஆளுநர் ரிவர்ஸ் சீக்ரெட்!மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டியவர் ஆளுநர். ஆனால், அத்தகைய ஆளுநர்களை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசியல் திரி கிள்ளிச் செய்து, பட்டாசு வெடிக்கிறது டெல்லி பா.ஜ.க. அப்படித்தான் தமிழகத்தில் செந்தில் பாலாஜியை முன்வைத்து ஆளுநர் கிள்ளிய திரி, மிட்நைட்டில் மீட்டிங்கில் எதிர்க்கட்சிகள் ஒன்றும் திரளும் அளவிற்கு விஸ்வரூபம் எடுக்க, ஆளுநர் ரிவர்ஸ் எடுத்ததுதான் லேட்டஸ்ட் சீக்ரெட்!.செந்தில்பாலாஜியின் இலாகாக்களை இதர அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்ய ஒப்புக்கொண்ட ஆளுநர், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர அனுமதி அளிக்கவில்லை. ஆனால், தமிழக அரசு ஆளுநரின் கருத்தை பொருட்படுத்தவில்லை. மாறாக, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்காக அதிரடி அரசாணையை பிறப்பித்தது. அதன் பிறகு நடந்தவற்றை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் டெல்லி பா.ஜ.க-வில் இருக்கும் சீனியர் நிர்வாகி ஒருவர்... “தமிழக அரசு செந்தில்பாலாஜி தொடர்பாக வெளியிட்ட அரசாணை தமிழக ஆளுநர் மாளிகையில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அடுத்து என்ன செய்வது என மத்திய அரசிடம் ஆலோசனை நடத்தினார் ஆளுநர். உடனடியாக டெல்லி வருமாறு ஆளுநருக்கு அழைப்பு வந்தது..டெல்லி கிரீன் சிக்னல் இதையடுத்து, ஜூன் 23-ம் தேதி காலை 10:05 மணியளவில் ராஜ்பவனில் இருந்து புறப்பட்டு டெல்லி சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, ஜூன் 24, 25 இரு நாட்களில் காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பிறகு ஜூன் 26, 27 ஆகிய தேதிகளில் டெல்லியில் முகாமிட்டு செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். குறிப்பாக, அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா மற்றும் உள்துறைச் செயலக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் நீக்கலாம் என்று ஆளுநருக்கு கிரீன் சிக்னல் கிடைத்தது. நான்கு நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு ஜூன் 28-ம் தேதி இரவு சென்னை திரும்பினார் ஆளுநர். மறுநாள் 29-ம் தேதி காலையிலேயே தன் செயலாளர்களை அழைத்த ஆளுநர், செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்குவது தொடர்பாக அறிக்கை தயாரிக்கும்படி உத்தரவிட்டார். அப்போது, அட்டர்னி ஜெனரல் மற்றும் தலைமை வழக்கறிஞர்கள் கொடுத்த ஆலோசனைகளையும் அவர்களிடம் டிக்டேட் செய்தார். இதையடுத்து, காலை 11 மணிக்கு தொடங்கிய அறிக்கை தயாரிக்கும் பணி மாலை 4 மணியளவில்தான் முடிவடைந்தது. 5 பக்கம் கொண்ட அந்தக் கடிதம் மற்றும் அறிக்கை டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவற்றில் சில திருத்தங்களை செய்யுமாறு டெல்லியில் இருந்து தகவல் வர, அதன்படி செய்து மீண்டும் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்படி இரண்டு முறை திருத்தம் செய்து டெல்லி தரப்பினர் ஓகே செய்த பிறகே இரவு 7:15 மணிக்கு ஆளுநர் மாளிகையிலிருந்து செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து நீக்கம் தொடர்பான செய்தி வெளியிடப்பட்டது. உடனடியாக அது முதல்வர் ஸ்டாலினின் சித்தரஞ்சன் சாலை வீட்டுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது” என்றார் சொல்லி முடித்தார் விரிவாக.. கடுகடுப்பில் ஸ்டாலின்! ஆளுநரின் கடிதம் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது, முதல்வர் ஸ்டாலின், சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பங்கேற்கச் சென்றிருந்தார். விழாவிலேயே ஆளுநரின் அறிவிப்பு பற்றி ஸ்டாலினுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதனால் கடும் கோபம் அடைந்தவர், அருகில் அமர்ந்திருந்த ஆ.ராசாவுடன் ஆலோசித்தார். அதன்பிறகு நடந்ததை அறிவாலய நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம்... “வேளச்சேரி நிகழ்ச்சியில் ஒரு மணி நேரம் மட்டுமே ஸ்டாலின் இருந்தார். அதன்பிறகு இரவு 8.30 மணிக்குப் புறப்பட்ட முதல்வரின் கான்வாய், வீட்டிற்குச் செல்லாமல் அறிவாலயம் சென்றது. முதல்வர் ஸ்டாலின், சீனியர் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் வில்சன், என்.ஆர்.இளங்கோ ஆகியோருடன் ஆளுநர் அறிவிப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார். .கான் கால் மீட்டிங்! அடுத்து, இரவு 9.45 மணியளவில் பா.ஜ.க.வுக்கு எதிராக பாட்னாவில் கூடிய தேசியத் தலைவர்களை ஒருவர் பின் ஒருவராக கான்ஃப்ரன்ஸ் காலில் தொடர்புகொண்டார் ஸ்டாலின். அவர்களிடம் செந்தில் பாலாஜி நீக்கம் தொடர்பாக ஆளுநரின் தன்னிச்சையான அறிவிப்பு குறித்து கூறி ஆதரவு கோரினார். மல்லிகார்ஜுன கார்கே, நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, அரவிந்த் ஜெக்ரிவால், சரத் பவார், ஃபரூக் அப்துல்லா, சீதாராம் யெச்சூரி, அகிலேஷ் யாதவ் உள்பட அனைத்து தலைவர்களும் பா.ஜ.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிராக அதிருப்தி தெரிவித்தனர். இந்த விஷயத்தில் உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றுய் ஸ்டாலின் அவர்களிடம் வலியுறுத்தினார். அதற்கு சிலர், ‘எதிர்க்கட்சிகள் அனைவரும் சேர்ந்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுவோம், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம்’ என்று ஆலோசனை கூறினர். ஆனால், ஸ்டாலின் தரப்பிலோ, ‘கடிதம் எழுதும் காலம் கடந்துவிட்டது, நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மத்திய பா.ஜ.க. அரசு எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்கும் வேலையில் தீவிரமாகியிருக்கிறது. இன்று எங்களுக்கு ஏற்பட்ட நிலைமைதான் இனி உங்களுக்கும் ஏற்படும். இதில் நாம் பணிந்து சென்றுவிட்டால், இதுவே இதர எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மீது பா.ஜ.க தாக்குதல் தொடுப்பதற்கு முன்னுதாரணமாக போய்விடும். இதற்கு பதிலடி கொடுக்க வேண்டுமென்றால், நாம் அனைவரும் பா.ஜ.க.விற்கு எதிராக டெல்லியில் ஒன்றுகூடி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும்’ என்று வலியுறுத்தினார். இதுதொடர்பாக சிலர் ஆமோதித்தனர். சிலர் அமைதியாக இருந்தனர். சிலர் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனாலும் இதுகுறித்து தங்கள் கட்சி மாநில முதல்வர்களுடன் ஆலோசித்து விரைவில் நல்ல தகவல் சொல்வதாக உறுதி கொடுத்தனர்..நள்ளிரவில் முளைத்த போஸ்டர்கள்!அதோடு விடவில்லை தி.மு.க. ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து, ‘கிண்டிக்கு ஒரு கேள்வி’ என்ற தலைப்பில் அன்றைய தினம் நள்ளிரவே சென்னை முழுவதும் தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டது. அந்த போஸ்டரில், ‘கொலை, கொள்ளை, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்தல் உள்ளிட்ட கடும் குற்ற வழக்குகளை சந்தித்து வரும் 44 சதவிகிதம் பேர் மத்திய பா.ஜ.க. அரசில் இருக்கின்றனர். அவர்களை பதவியில் இருந்து விலகச் சொல்லி டெல்லிக்கு ஆர்.என்.ரவி கடிதம் எழுதுவாரா?’ எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்துதான் செந்தில்பாலாஜியின் டிஸ்மிஸ் உத்தரவை நிறுத்திவைப்பதாக ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டது” என்றார்..அமித் ஷா அட்வைஸ் டெல்லி பா.ஜ.க தரப்பில் நடந்த ரியாக்ஷன் குறித்து நம்மிடம் பேசிய டெல்லியின் மூத்த பத்திரிகையாளர் ஒருவர், “டெல்லியில் எதிர்க்கட்சிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக நடத்திய ஆலோசனையைப் பற்றி உடனடியாக அமித் ஷாவுக்கு ரிப்போர்ட் கொடுத்தது மத்திய உளவுத்துறை.ம் இதையடுத்து, ‘பாட்னாவில் கூடிக் கலைந்த கட்சிகளை மீண்டும் கான் கால் போட்டு ஒருங்கிணைக்க ஆர்.என்.ரவியின் அறிவிப்பும் ஒரு காரணமாகிவிட்டதா?’ என்று டென்ஷனானவர், இரவு 11 மணிக்கு தமிழக ஆளுநரை தொடர்புகொண்டார். ‘செந்தில் பாலாஜி விவகாரத்தால் பா.ஜ.க.வுக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிட்டீர்கள். பாட்னாவில் ஆலோசித்து கலைந்த கட்சிகளை இந்த விவகாரம் மீண்டும் ஒருங்கிணைய வழி ஏற்படுத்திவிட்டது. ஆகவே, அறிவிப்பை திரும்பப் பெறுமாறு ஆர்.என்.ரவியிடம் அறிவுறுத்தினார். இதையடுத்தே இரவு 11.15 மணியளவில் செந்தில்பாலாஜி நீக்கம் தொடர்பான அறிவிப்பை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் கடிதம் வெளியிட்டார். இப்போதைக்கு இந்த விவகாரம் ஓய்வடைந்தாலும், 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை அனல் ஓயாது என்பது மட்டும் தெரிகிறது! .ஆளுநர் செயல்பாடு சரியா? தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்? ஆளுநர் ஆர்.என்.ரவியின் அதிரடி நீக்க அறிவிப்பு, அதைத் தொடர்ந்து நிறுத்திவைப்பு விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதங்களை எழுப்பியிருக்கிறது. இதற்கு அனைத்து கட்சி பிரமுகர்கள் என்ன சொல்கிறார்கள்? .வானதி சீனிவாசன், பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவர்அமைச்சர்களுக்கு கொடுக்கக் கூடிய சட்டப்பூர்வ பாதுகாப்பைப் பயன்படுத்தி, குற்றவாளியாக இருக்கக்கூடிய நபர் தொடர்ச்சியாக அமைச்சராக இருப்பது நியாயமான விசாரணையை பாதிக்கும். இதை சாதாரணர்களும் புரிந்துகொள்வார்கள். அதன் அடிப்படையில் ஆளுநர் இந்த முடிவை எடுத்துள்ளார். .ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க. செந்தில்பாலாஜியை விசாரித்தால் பல உண்மைகள் வெளியில் வரும். அதைத் தடுக்கவே, விசாரணை வளையத்தில் இருக்கும் அவர், அமைச்சர் பதவியை பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்தி வந்தார். அமைச்சர் பதவி நீக்கம் சரியான நடவடிக்கை. ஆளுநரின் முடிவு வரவேற்கத்தக்கது..கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் முதல்வரின் அதிகாரத்தில் ஆளுநர் தலையிட்டிருக்கிறார். இது சட்டத்துக்குப் புறம்பானது, மரபுகளுக்கு எதிரானது. ரஃபேல் விமானம் வாங்கியதில், ட்ரோன் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. அதேபோல் 33 மத்திய அமைச்சர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர்கள் அனைவரும் பதவி நீக்கம் செய்யப்படுவார்களா?.கே.பாலகிருஷ்ணன், சி.பி.எம். மாநிலச் செயலாளர் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அரசியல் சாசனத்தை ஆளுநர் மீறியுள்ளார். எனவே, அரசியல் சாசன அடிப்படையில் ஆளுநர் பதவியில் நீடிக்க ஆர்.என்.ரவி முற்றிலும் பொருத்தமற்றவர். ஜனாதிபதி உடனடியாக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும். இரா.முத்தரசன், சி.பி.ஐ மாநிலச் செயலாளர் ஆளுநரின் மலிவான அரசியல் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆர்.என்.ரவியை ஆளுநர் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்..இரா.முத்தரசன்துரை வைகோ, ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு விரோதமாகச் செயல்படுகிறார் ஆர்.என்.ரவி. அமைச்சர் செந்தில்பாலாஜியை நீக்கியது சட்டவிரோதமானது மட்டுமல்ல. ஆர்.என்.ரவி அதிகார வரம்பை மீறி செயல்படுகிறார். ஆளுநர் செயல்பாடு அரசியல் சாசனத்துக்கு எதிரானது..திருமாவளவன், வி.சி.க. தலைவர் ஆர்.என்.ரவி விடுத்துள்ள அரசியல்ரீதியான சவாலை மக்கள் மன்றத்தில் எதிர்கொள்ள முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம், மத்திய ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஆளுநர் மாளிகை இதுகுறித்து ஆளுநர் மாளிகை தரப்பிலும் தகவல் பாஸ் செய்து ஆளுநரின் கருத்தை கேட்டோம். ஆளுநர் மாளிகையில் இருந்து பேசியவர்களோ, “இப்படி பதில் சொல்வது ஆளுநரின் மரபு அல்ல; வழக்கமும் அல்ல” என்று முடித்துக்கொண்டார்கள்..மக்கள் என்ன சொல்கிறார்கள்? இதுகுறித்து குமுதம் ரிப்போர்ட்டர் டீம் பொதுமக்கள் பலரிடமும் கருத்துக்களைக் கேட்டுப் பெற்றது. அவர்களில் சிலரது கருத்துக்கள் மட்டும் இங்கே... .ரோகேஷ், செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர் ஆளுநர் வேண்டுமென்றே எதையும் செய்யவில்லை. செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த சூழலில் அவர் அமைச்சரவையில் நீடிப்பது எப்படி சரியாகும்? முதல்வர் ஸ்டாலினே செந்தில் பாலாஜியை நீக்கியிருக்க வேண்டும். அப்படி செய்யாததால், ஆளுநர் செய்திருக்கிறார்..சார்லி, மந்தைவெளி பல ஏக்கர் பரப்பளவில் ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்துகொண்டு, தமிழக அரசுப் பணத்தில் அனைத்து சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு, தமிழகத்திற்கு எதிராக செயல்படும் இதுபோன்ற ஆளுநர்கள் தேவையில்லை..குமார், இளநீர் வியாபாரி ஆர்.என்.ரவி ஆளுநராக வந்த பிறகுதான் தேவையில்லாத விஷயங்கள் செய்து பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறார். .கற்பகம், இல்லத்தரசி பிரச்னை ஏற்படுத்தும் வகையில் அறிவிப்புகளை வெளியிடுவது, பிறகு நிறுத்தி வைப்பது போன்ற செயல்கள் ஆளுநர் மீதான மரியாதையை குறைக்கும் வகையில் உள்ளது.