‘இணைந்த கைகள்’, ‘ஃபைட் ஃபார் ரைட்ஸ்’, ‘சென்னை சிட்டி போலீஸ்’ -இவையெல்லாம் சில வாட்ஸ்ஆப் குழுக்களின் பெயர்கள். இந்தக் குழுக்களின் வழியாக காவல்துறையில் நடக்கும் சாதி, மத மோதல்கள் எல்லாம் முச்சந்திக்கு வருவதுதான், அதிர்ச்சியூட்டும் அவலம். சென்னை புளியந்தோப்பு போக்குவரத்துப் புலனாய்வு ஆய்வாளராக இருந்த ராஜேந்திரன், சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதன் பின்னணியில், சாதி, மத, இன வெறுப்பு கலந்திருப்பதாக ஒரு தகவல் பரவவே கிடுகிடுத்துக் கிடக்கிறது, காவல்துறை வட்டாரம். ``என்ன நடந்தது?'' என காவல்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “ ஆங்கிலத்தில் ‘டிப் ஆஃப் தி ஐஸ் பெர்க்’ என்று சொல்வார்கள். அதாவது, துருவப்பகுதி அருகே உள்ள கடலின் மேற்பரப்பில் சின்னச் சின்ன ஐஸ் கட்டிகள் வெளியே தெரியும். உண்மையில், அவை கடலுக்கடியில் உள்ள பெரிய பனிமலையின் முனைப்பகுதிகள் என்பதை இறங்கிப் பார்த்தால்தான் தெரியும். அப்படித்தான் ராஜேந்திரன் விவகாரமும் வெளியே சிறியதாக தெரிந்திருக்கிறது. நிஜத்தில், காவல்துறைக்குள் மிகப்பெரிய பிளவுகள் உள்ளன என்பது, உள்ளுக்குள் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் நீண்டகாலமாகவே காவல்துறையில் சாதிப் பிரச்னைகள் இருக்கின்றன. ஒரு சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், பிற சமூகத்தைச் சேர்ந்த கீழ்நிலைக் காவலர்களை சாதியின் காரணமாகவே வாட்டி வதைப்பது அன்றாடம் நடந்துவரும் நிகழ்வாக உள்ளது. அதேநேரம், தங்கள் சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகளை விட்டுக்கொடுக்காமல் உதவும் நிகழ்வுகளும் சர்வசாதாரணமாக நடந்து வருகின்றன. ஒரு உதாரணம், சாத்தான்குளத்தில் நடந்த லாக்அப் மரணத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதும், அவருடைய சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ஒரு குழுவை அமைத்தனர். அந்த ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு சக ஊழியர்கள் என்ற போர்வையில் வசூல் செய்து கொடுத்தனர். இது மனிதாபிமான உதவிபோல தோன்றினாலும், உண்மையில் அப்படி இல்லை. தங்களின் சாதிக்காக சிறை சென்றார் என்ற ஒரே காரணத்துக்காகவே இப்படிச் செய்துள்ளனர். தமிழகத்தில் இதற்கு முன்பு பல காவலர்கள் தவறு செய்து தண்டிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் திரட்டப்பட்டதா... இல்லையே! சாதியைப்போலவே மதப் பாகுபாடும் இங்கே அதிகம். உயர் அதிகாரிகள் தொடங்கி கடைநிலை காவலர் வரை அவர்கள் சிறுபான்மையினராக இருக்கும்பட்சத்தில் ஒருவித பாகுபாடு காட்டப்பட்டு வருவது நிஜம். உயரதிகாரிகளுக்கேகூட இந்தப் பிரச்னை உள்ளது. தற்போது, வடமாவட்டத்தில் உயரதிகாரியாக இருப்பவர், ஒரு பந்தோபஸ்தில் ஈடுபட்டிருந்தபோது, ‘நம்ம ஆளு எதுக்கு வெயில்ல நிக்கணும்?’ என்று சொல்லி அவரை அங்கிருந்து உயரதிகாரிகள் அனுப்பிவிட்டு, வேறு சமூகத்தை சேர்ந்த ஒரு அதிகாரியை அங்கு வரவழைத்துவிட்டனர்..அதுமட்டுமல்ல, `காவல்துறையில் உள்ளவர்கள் மதம் சார்ந்த எந்தப் பிரசாரங்களிலும் ஈடுபடக்கூடாது' என்பதை மீறி, பல இடங்களில் கூட்டம் நடத்துகின்றனர். இதில், ரிட்டையர்டு போலீஸார் ஒன்று சேர்ந்து அமைப்பை நடத்துகின்றனர். ஓய்வுக்குப் பிறகு முழு மூச்சுடன் மதப் பிரசாரத்தில் ஈடுபடும் இவர்கள், ஓய்வுக்கு முன்பு மட்டும் எப்படி மதச்சார்பற்றவர்களாக இருந்திருக்க முடியும்? சாதி, மதம் போதாதென்று இப்போது அரசியல் பாகுபாடும் தமிழக காவல்துறையில் நுழைந்துவிட்டது. ‘இணைந்த கைகள்’, ‘ஃபைட் ஃபார் ரைட்ஸ்’, ‘சென்னை சிட்டி போலீஸ்’ என நூற்றுக்கணக்கான வாட்ஸ்ஆப் குழுக்கள் செயல்படுகின்றன. அரசியல் பிரச்னை கிளம்பும்போதெல்லாம் மைனாரிட்டி அதிகாரிகள் தி.மு.க.வுக்கும் பிற அதிகாரிகள் பா.ஜ.க.வுக்கும் ஆதரவாக பதிவிட்டு சண்டையை வளர்க்கின்றனர் கடந்த ஜனவரி 2022ம் ஆண்டு மத்திய அரசுக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் பதிவிட்ட பூக்கடை ஆய்வாளர் ஜி.சேகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அண்ணாமலை ஐ.பி.எஸ்-ஆக இருந்து வந்தவர் என்பதால், அவருக்கு தமிழக காவல்துறையில் நட்பு வட்டம் உள்ளது. இந்தநிலையில்தான், எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றுவதுபோல ஆய்வாளர் ராஜேந்திரன் மெம்பராக இருந்த சமூகவலைதளக் குழு ஒன்றில், காவல்துறை அதிகாரி ஒருவர் கிறிஸ்துவப் பாடல் ஒன்றைப் பதிவாக போட்டார். அதற்கு ராஜேந்திரன் பதிலடி கொடுக்கவே விஷயம் விபரீதமாகிவிட்டது. தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அரசியல், சாதி, மதம் சார்ந்த விஷயங்களில் காவலர்கள் ஈடுபடக்கூடாது என்ற உத்தரவு கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டும். இல்லையென்றால், என்றாவது ஒருநாள் பிரச்னை பூதாகரமாகலாம்'' என்றார், எச்சரிக்கையுடன். வாட்ஸ்ஆப் விவகாரம் குறித்து ஆய்வாளர் ராஜேந்திரனை தொடர்புகொண்டு பேசியபோது, ``இப்போது பிஸியாக இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்’ என்று மட்டும் பதில் அளித்தார். அதன்பிறகு அவரைத் தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதுகுறித்து விளக்கம் கேட்க சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சந்திப் ராய் ரத்தோரை தொடர்புகொண்டோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. தொடர்ந்து குறுந்தகவலும் அனுப்பினோம். பதில் இல்லை. அவர் பதில் தரும்பட்சத்தில் அதையும் பிரசுரிக்க தயாராக இருக்கிறோம். முதல்வர் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் இது! - அபிநவ்