முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டாலும் வாச்சாத்தி வன்கொடுமையை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது. சந்தனக் கட்டைகளைப் பதுக்கியதாகக் கூறி பழங்குடிகளை வேட்டையாடிய அதே வனச்சரக அலுவலக வளாகத்தில் சந்தன மரங்கள் கடத்தப்பட்டுள்ளதுதான், அரூரின் லேட்டஸ்ட் அதிர்ச்சி. “அரூர் வனக்கோட்டத்தில் உள்ள மாவட்ட வன அலுவலர் குடியிருப்பில் கடந்த 21ம் தேதி ஆறு விலையுயர்ந்த சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளன. அடுத்த சில நாள்களில், வனச்சரக அலுவலகத்தில் இருந்து ஒரு சந்தன மரத்தையும் ஆசிரியர் நகரில் இருந்து 2 சந்தன மரங்களையும் சிலர் வெட்டிக் கடத்தியுள்ளனர்'' என்கிறார், சி.பி.எம் கட்சியின் மாவட்ட செயலாளர் குமார். தொடர்ந்து பேசிய அவர், ``இதை சாதாரண சம்பவமாக கடந்துவிடமுடியாது. காரணம், 1992ல் சந்தனக் கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி வாச்சாத்தி கிராமத்துக்குள் புகுந்து வெறியாட்டம் நடத்தியது, வனத்துறையும் காவல்துறையும். இதில், 18 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள். தற்போது அதே வனச்சரகத்தில் விலையுயர்ந்த சந்தன மரங்களை வெட்டிக் கடத்தியுள்ளனர். இதில் வன ஊழியர்களுக்கும் பங்கு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். தவிர, வாச்சாத்தியில் வேகம் காட்டிய வனத்துறை இப்போது அமைதியாக இருப்பது, சந்தேகத்தை உறுதி செய்கிறது” என்றார், காட்டமாக. “அப்பாவி மக்களிடம், `ஆடு, மாடு மேய்க்காதே…சுண்டைக்காய் பறிக்காதே' என மிரட்டுகிறது, வனத்துறை. அதோடு, ஆடு மேய்ப்பவர்களிடம் ஆட்டுக்கு தலா முன்னூறு ரூபாய் என வசூல் செய்கிறார்கள். அதனைத் தர மறுத்தால், `முயல் வேட்டையாடியதாக கேஸ் போடுவோம்' என்று மிரட்டுகிறார்கள். இவ்வளவு அடாவடி செய்யும் இவர்கள், `சந்தன மரங்களை வெட்டியதே தெரியாது' என்கிறார்கள். இதனை திசைதிருப்ப தனியார் இடத்தில் இருந்த 2 மரங்களையும் வெட்டிக் கடத்தியுள்ளனர்’’ என்கிறார், சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான ரவி..அரூர் வனச்சரக அலுவலர் நீலகண்டனை நேரில் சந்தித்துக் கேட்டபோது, “ஆறு மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டது உண்மைதான். ஆனால், அவை முதிர்ந்த பெரிய மரங்கள் இல்லை. 30 முதல் 40 கிலோ வரைதான் இருக்கும். வாசனைகூட இருக்காது. இதுதொடர்பாக, அரூர் போலீஸில் புகார் கொடுத்தோம். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. குற்றவாளிகளையும் நெருங்கிவிட்டோம்’’ என்றவர், கடத்தலில் வன ஊழியர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதை அறவே மறுத்தார். அரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபுவோ, “ சந்தன மரங்களை வெட்டிக் கடத்தியது தொடர்பாக எந்தப் புகாரும் வரவில்லை. வனத்துறையினரிடம்தான் நீங்கள் கேட்கவேண்டும்” என்றார். “சந்தன மரங்களை வெட்டிக் கடத்தியது தொடர்பாக இருவரைப் பிடித்து விசாரணை செய்து வருகிறோம். மேலும், தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறோம். அரூர் கல்லூரி வளாகத்தில் சந்தன மரங்கள் காணாமல் போனதாக எந்தப் புகாரும் வரவில்லை” என்கிறார், மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு. கடத்தல் சர்ச்சைக்கு முடிவு கிடைத்தால் சரி! - பொய்கை. கோ. கிருஷ்ணா