`அண்ணன் எப்போ நகர்வான்...திண்ணை எப்போ காலியாகும்?' என்ற கதையாக ஈ.டி ரெய்டுகளால் செந்தில் பாலாஜி குடும்பமே சிக்கலில் தவித்துக் கிடக்க, கரூரில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தரும் குடைச்சலால் பதறிப்போய் கிடக்கிறார்கள், செந்தில் பாலாஜியின் உதவியாளர்கள்.கரூரில் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக அமைதியோ அமைதி. காரணம், கடந்த 20 நாள்களுக்கும் மேலாக அமலாக்கத்துறையோ இதர விசாரணை ஏஜென்சிகளோ சோதனைக்கு வராததுதான். கரூரில் ரெய்டுதான் நடக்கவில்லையே தவிர, உடன்பிறப்புகளுக்குள் உச்சகட்ட புகைச்சல் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது.``கரூர் மாவட்ட தி.மு.க சார்பாக கலைஞர் நூற்றாண்டு நினைவு நாள் ஊர்வலம் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. ஊர்வலம் முடிந்ததும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா ஆகியோர், அமைச்சர் செந்தில் பாலாஜியின் எம்.எல்.ஏ அலுவலகம் சென்றனர். அங்கு 25க்கும் மேற்பட்ட தி.மு.க கவுன்சிலர்கள் மேயர் முன்னிலையிலேயே ஆடித் தீர்த்துவிட்டனர்'' என விவரித்த தி.மு.க கவுன்சிலர் ஒருவர்,``அமைச்சரின் உதவியாளர்களிடம், ’நாங்கள் பெயருக்குத்தான் கவுன்சிலர், எங்களை துளிகூட மேயர் மதிப்பதில்லை. தன்னிச்சையாக செயல்படுகிறார். அமைச்சர் இருந்தபோது அடக்கிவாசித்த அனைவருமே, இப்போது ஆணவமாக இருக்கிறார்கள். அதனால், இனி வரக்கூடிய மாமன்ற கூட்டத்தைப் புறக்கணிப்போம்' என ஆவேசப்பட்டுள்ளனர்.இதைக் கேட்ட அமைச்சரின் உதவியாளர்கள், `அமைச்சர் இன்னும் 10 நாளில் வந்துவிடுவார். அதுவரை அமைதியாக இருங்கள். அமைச்சர் வந்ததும் பேசிக்கொள்ளலாம்' என்று சமாதானப்படுத்தியுள்ளனர். இதனை ஏற்காத கவுன்சிலர்கள், `அமைச்சர் வரும்வரை அமைதியாக இருக்க வேண்டுமா?’ எனக் கொதித்தனர்.அடுத்து, பள்ளப்பட்டி நகராட்சி விவகாரம். இங்குள்ள 27 கவுன்சிலர்களில் 18 தி.மு.க கவுன்சிலர்கள் ஒன்றுசேர்ந்து, ஆணையரிடம் மனு கொடுத்தனர். அதில், `நகராட்சித் தலைவர் முனவர் ஜான் தன்னிச்சையாக செயல்படுகிறார். அவரை உடனே மாற்ற வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தனர். நிலைமை சீரியஸாக மாறுவதைக் கண்டதும், மனு கொடுத்த 18 தி.மு.க கவுன்சிலர்களையும் கரூரிலுள்ள அமைச்சர் அலுவலகத்துக்கு வருமாறு அமைச்சரின் உதவியாளர்கள் கூறியுள்ளனர்.18 கவுன்சிலர்களும் கரூர் செல்லத் தயாரானபோது, `அமைச்சர் வந்ததும் பேசி முடித்துக்கொள்ளலாம். யாரும் கரூருக்கு வரவேண்டாம்' என்று கூறியுள்ளனர். `அமைச்சர் வரும் வரை பொறுமை காக்க முடியாது' என ஏகத்துக்கும் எகிறியுள்ளனர்.இதே பிரச்னைதான் அரவக்குறிச்சியிலும். அங்குள்ள பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 கவுன்சிலர்களில் 13 பேர் தி.மு.க கூட்டணியை சேர்ந்தவர்கள். அரவக்குறிச்சி கிழக்கு ஒ.செ மணிகண்டனின் மனைவி ஜெயந்திதான் பேரூராட்சித் தலைவியாக இருக்கிறார். இங்கேயும், `தலைவர் தன்னிச்சையாக செயல்படுகிறார்' எனக் கூறி இரண்டு மாதங்களுக்கு முன்பே 13 தி.மு.க கவுன்சிலர்கள் மன்றத்தையே ரணகளப்படுத்தினார்கள்.இதையடுத்து கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த மாதம் கூட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தி.மு.க.கவுன்சிலர்கள் அனைவரும், தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர இரவு முழுவதும் பேசி முடிவு செய்துவைத்திருந்தனர். மறுநாள் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெற இருந்தபோது, காலை 9 மணிக்கு பேரூராட்சி நிர்வாக அதிகாரி ஆனந்தன் வாய்மொழி உத்தரவு மூலம் ரத்து செய்தார்.இதனால் கொதிப்படைந்த கவுன்சிலர்கள், நிர்வாக அதிகாரியை துளைத்தெடுத்துவிட்டார்கள். ’தலைவர் ஊருக்குச் செல்வதால் கூட்டத்தை ரத்து செய்தேன்’ என நிர்வாக அதிகாரி கூறியிருக்கிறார். `தலைவர் ஊருக்கு சென்றிருந்தால், உதவித் தலைவரை வைத்து கூட்டத்தை நடத்தலாமே? கவுன்சிலர்கள், உதவித் தலைவர் இருக்கும்போது கூட்டத்தை ரத்து செய்தது ஜனநாயக விரோதம். இதை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்கிறோம்’ எனப் பதில் கொடுத்துள்ளனர்..இங்கும் நிலைமை விபரீதமாவதை உணர்ந்த அமைச்சரின் உதவியாளர்கள், அரவக்குறிச்சிக்கே வந்து கவுன்சிலர்களை சந்தித்துப் பேசியுள்ளனர். அங்கும் இதே பல்லவிதான். `அமைச்சர் வரும் வரை அமைதி காத்திருங்கள்' என்று. இந்தப் பதிலால் கவுன்சிலர்கள் கொதிக்கவே, `இனி கான்ட்ராக்ட்டில் வரும் கமிஷன் அனைத்திலும் யார் யாருக்கு எவ்வளவு சதவிகிதம்?' என அந்த இடத்திலேயே முடிவு செய்யப்பட்டது. `அமைச்சர் வந்ததும் நிச்சயம் நடவடிக்கை உண்டு' எனக் கூடுதல் வார்த்தைகளைக் கூறியதும் கலைந்தனர்.`` இதே பாணியில்தான், கரூரில் உள்ள 90 சதவிகித உள்ளாட்சி மன்றங்கள் ஆட்டம் கண்டு கொண்டிருக்கின்றன. காரணம் கமிஷன் பிரச்னைதான். உள்ளாட்சிகளின் தலைவர்கள், கான்ட்ராக்ட்டில் வரும் கமிஷன் பணத்தை யாருக்கும் தராமல் மொத்தமாக வீட்டுக்கு கொண்டு செல்வதாகக் கூறி கோபத்தை வெளிப்படுத்துகின்றனர், கவுன்சிலர்கள்.`இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து உள்ளாட்சி அமைப்புகளைக் காலி செய்துவிட்டால் தி.மு.க தலைமைக்குக் கெட்டபெயர் உண்டாகும்' என்பதால் செந்தில் பாலாஜியின் உதவியாளர்கள் பாடாதபாடுபட்டு சமாதானப்படுத்தி வருகின்றனர். ஒரு பக்கம் ரெய்டு, இன்னொரு பக்கம் கவுன்சிலர்களின் மிரட்டல் என கரூரே அதகளப்பட்டு நிற்கிறது. செந்தில் பாலாஜி வரும்வரையில் இந்தப் பிரச்னைகள் தீரப் போவதில்லை’’ என்கிறார், தி.மு.க.வின் முக்கிய நிர்வாகி ஒருவர்.கவுன்சிலர்களின் குமுறல் குறித்து பள்ளபட்டி நகராட்சித் தலைவர் முனவர்ஜானிடம் பேசியபோது, ``அமைச்சர் ஊரில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி, அமைச்சருக்கு எதிரானவர்கள் செய்யும் குழப்ப வேலைதான் இது. எனக்கு எதிராக 17 தி.மு.க கவுன்சிலர்கள் மனு கொடுத்துள்ளனர். இதை நிச்சயம் முறியடித்து, மன்றத்தைக் காப்பாற்றுவேன்’’ என்றார்.அரவக்குறிச்சி நகர செயலாளர் பி.எஸ். மணியிடம் பேசியபோது, ``அமைச்சர் சிறைக்குச் சென்ற பின்பு ஆளாளுக்கு நாட்டாமை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். உள்ளாட்சி மன்றத் தலைவர்கள் செய்வது தவறாகவே இருந்தாலும், அமைச்சர் இல்லாத நேரத்தில் கவுன்சிலர்கள் அமைதி காக்கவேண்டும். அமைச்சர் வந்ததும் உள்ளாட்சி தலைவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்பார். கரூர் மாவட்டத்தில் இப்போதுள்ள தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவருக்கும் செந்தில் பாலாஜிதான் சீட் கொடுத்தார். அவர் வரும் வரை அமைதியாக இருக்க மாட்டார்களா?'' எனக் கொதித்தார்.கரூர் கலகத்துக்கு என்ட் கார்டு எப்போது? - கரூர் அரவிந்த்