சாதி பாகுபாடுகள் கல்வி நிலையங்களை கபளீகரம் செய்யும் அதிர்ச்சியே இன்னும் நீங்கவில்லை. நாங்குநேரியே அதற்கு சாட்சி. இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தின் பாரம்பரியம் மிக்க கல்லூரியிலேயே பேராசிரியர்கள் சாதி உணர்வை ஊட்டி வளர்ப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த விவகாரம் காவல் நிலையம், விசாரணை என வேகமெடுத்து பணியிட மாற்றம் வரை சென்றிருப்பதுதான் ஷாக்! சிவகங்கை மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க கல்லூரிகளில் ஒன்று, மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கலைக்கல்லூரி. கடந்த வாரம் பவள விழாவைக் கொண்டாடிய இந்தக் கல்லூரியில்தான் ஆசிரியர்களிடையே சாதி வேற்றுமை தலைதூக்கியிருக்கிறது. கல்லூரியின் பொருளியல் துறை இணை பேராசிரியராக பணியாற்றிய கிருஷ்ணன் மீது அதே துறையைச் சேர்ந்த பேராசிரியர் சுப்புராமன் சிவகங்கை நகர் காவல் நிலையத்திலும் சிவகங்கை டி.எஸ்.பி.யிடமும் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்..அதில், ‘பேராசிரியர் கிருஷ்ணனை நான் சாதிரீதியாக பேசி அவமானப்படுத்துவதாகவும் என் மீது சாதிய வன்கொடுமை சட்டப் பிரிவில் வழக்குப் பதிவு செய்து எனது வாழ்க்கையை முடித்துவிடுவதாகவும் மிரட்டுகிறார். அதனால், தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு ஆளாகியுள்ளேன். எனவே, அவர் மீது உடனடியாக உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். ``என்ன நடந்தது?" என பேராசிரியர் சுப்புராமனிடம் பேசினோம். “சுதர்சன் என்கிற மாணவர் எனது வழிகாட்டலின்படி பி.ஹெச்டி படித்து வருகிறார். ‘படிப்பு முடிந்ததும் அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்று மாணவர்களிடம் கேட்டு பட்டியல் அனுப்புமாறு பல்கலைக்கழகத்தில் இருந்து கேட்டிருந்தார்கள். அந்த மாணவனும் ஒரு மாணவியும் துறைத் தலைவரிடம் கையெழுத்துக் கேட்டு அணுகியபோது, கிருஷ்ணன் தன் சாதியை சேர்ந்த மாணவிக்கு மட்டும் கையெழுத்திட்டு அனுப்பியிருக்கிறார். இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் மாணவர் சுதர்சன் முறையிடவே பிரச்னை சாதிரீதியாக திரும்பியது. நியாயம் கேட்டுப்போன மாணவனிடம், ‘என் சாதியைச் சொல்லி வெளியிடத்தில் பேசிய உனக்கு கையெழுத்துப் போட முடியாது. நீ சாதிரீதியாக செயல்படுகிறாய்’என்று கூறியதுடன் அந்த மாணவரின் சாதியை சொல்லி கடுமையாக பேசியிருக்கிறார். இதை சில மாணவர்கள் வீடியோ எடுக்கவே, அது மீடியாக்களில் வைரலானது..அக்கல்லூரியில் பணியாற்றிவரும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் கௌரவ ஆசிரியர்களை எல்லாம் ஒன்றிணைத்து வாட்ஸ்ஆப் குரூப் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். அந்த குரூப்பில் என்னைப் பற்றி தவறாகப் பதிவு செய்து, `இதையெல்லாம் நம் சமூகத்தினர் தட்டிக் கேட்க வேண்டும்' எனப் பதிவு செய்திருக்கிறார். இதனை கல்லூரி முதல்வரிடம் முறையிட்டேன். இதற்காக என் மீதும் கல்லூரி முதல்வர் துரையரசன் மீதும் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து, என்னை ஒருமையில் திட்டுவது, நான் மாணவர்களுக்கு பாடமே எடுப்பதில்லை என்று புகார் கொடுப்பதுமாக இருந்தார். கமிட்டி கூடி விசாரணை நடத்தி அவரை எச்சரித்து அனுப்பி வைத்தது. அதன்பின்னர், இந்த வீடியோ வெளியானதால் தான் தப்பிக்க பி.சி.ஆர். சட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறார். இந்தப் பிரச்னை தொடர்பாக, ஆர்.டி.ஓ., டி.எஸ்.பி., கல்லூரிக் கல்வி மண்டல இயக்குநர் என எல்லோரும் விசாரணை செய்து, `அவர் மீது குற்றம் இருக்கிறது' என்று சொன்னார்கள். ஒருவரை மட்டும் டிரான்ஸ்ஃபர் செய்தால் பிரச்னை வரும் என்பதால் இரண்டு பேரையும் டிரான்ஸ்ஃபர் செய்வதாகக் கூறினார்கள். அதற்கு நானும் ஒப்புக்கொண்டேன். இப்போது அவர் நீதிமன்றத்தில் ஸ்டே ஆர்டர் வாங்கிவிட்டார். எனக்கு டிரான்ஸ்ஃபர் கிடைத்திருக்கிறது” என்றார் வேதனையுடன். ``இதெல்லாம் உண்மையா?'' என பேராசிரியர் கிருஷ்ணனை தொடர்பு கொண்டு கேட்டோம். “நான் நல்லவன், நேர்மையானவன். அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டவை. நான் ஒரு துறைத் தலைவர். என் பணியை சரியாக செய்திருக்கிறேன். என் பக்கம் நியாயம் இருக்கிறது. பணி மாறுதலை எதிர்த்து நீதிமன்றத்தில் ஸ்டே வாங்கியிருக்கிறேன். என்னை கல்லூரி முதல்வர் பணியில் சேரவிடவில்லை. சட்டப்போராட்டத்தில் இறங்கியிருப்பதால், இதற்கு மேல் பேச விரும்பவில்லை” என்றார். கல்லூரி முதல்வர் துரையரசனிடம் கேட்டபோது, “என் மீது பேராசிரியர் கிருஷ்ணன் கொடுத்திருக்கும் பி.சி.ஆர் புகார் பொய்யானது. நான் அவர் மீது இருக்கும் புகார்களை விசாரிக்க விசாரணைக் குழுவை அமைத்தேன். அவர் மீதான புகாரில் இருந்து தப்பிக்கவே இதுபோன்று செய்திருக்கிறார். அவர் சாதிரீதியாக மாணவர்களை பழிவாங்குவதை பாதிக்கப்பட்ட மாணவர்கள் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்..அதேபோன்று, வாட்ஸ்ஆப் குரூப் ஆரம்பித்து அதில் சாதிய உணர்வுகளை தூண்டிய பதிவுகளையும் மாணவர்கள் ஸ்கிரீன் ஷாட் எடுத்து அதையும் மீடியாவுக்கு அனுப்பியிருக்கிறார்கள். என்ன நடந்தது என்பதை அறிக்கையாக தயார் செய்து கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பினேன். அதன்பிறகு கிருஷ்ணன், சுப்புராமன் இருவரையும் பணிமாறுதல் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றார் சுருக்கமாக. சிவகங்கையைத் தொடர்ந்து பரமக்குடி அரசு கலைக் கல்லூரியியிலும் சாதி பிரச்னை முளைவிட்டுள்ளது. அங்கேயும் ஆசிரியர்கள் சாதிரீதியாக செயல்படுவதாக புகார் எழுந்து, உள்ளிருப்புப் போராட்டம் வரையில் சென்றிருப்பதுதான் கொடுமை. நன்னெறி வகுப்புகளை ஆசிரியர்களிடம் இருந்தே அரசு தொடங்கட்டும்! - பாலா