-ஆர்.விவேக் ஆனந்தன்`இங்க அடிச்சா அங்க வலிக்கும்' என்பது பழைய வசனம். அதற்கேற்ப, அரசியல் பிரமுகர்களை அமலாக்கத்துறை தொட்டபோதே மிரண்டு போனார்கள், மணல் மாஃபியாக்கள். தற்போது அவர்களை நோக்கியும் ஈ.டி பாய்ந்ததால் ஜி.எஸ்.டி வரிஏய்ப்பு உள்பட பல கோல்மால்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியிருப்பது, அதிர்ச்சியூட்டும் ஒன்லைன்..தமிழக அரசின் பொதுப்பணித் துறை மற்றும் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் மணல் குவாரிகள் செயல்படுவதாக சொல்லப்பட்டாலும் புதுக்கோட்டை ராமச்சந்திரன், கரிகாலன் மற்றும் திண்டுக்கல் ரத்தினம் ஆகிய மூவரின் கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகிறது. அரசு மணல் குவாரிகளில் பொதுப்பணித் துறையின் அதிகாரிகள் யாருமே இருக்க மாட்டார்கள். அங்கே ‘பளிச்’வெள்ளை உடையில் மணல் மாஃபியாக்கள் மட்டுமே வலம் வருவார்கள்.இவர்களின் பின்னணியும் பணம் செல்லும் வழியையும் மோப்பம் பிடித்த அமலாக்கத்துறை, தனது டீமுடன் அதிரடியாக களமிறங்கியது.``மணல் குவாரிகளில் நடந்த ஜி.எஸ்.டி வரி ஏய்ப்புதான் மொத்த ரெய்டுக்கும் காரணம்'' என்கின்றனர், உள்விவரம் அறிந்தவர்கள். தொடர்ந்து சில தகவல்களைக் கொட்டினர்..“தமிழகத்தில் மது விற்பனைக்கு இணையாக நாளொன்றுக்கு 20 கோடி ரூபாய் மதிப்பிலான மணல் நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை மூலம் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மணலின் விலை இரண்டு யூனிட் 5300 ரூபாய் என அரசு நிர்ணயித்திருந்தாலும் வெளியில் இருபதாயிரம் ரூபாய்க்கு குறைவாகக் கிடைப்பதில்லை.ஒவ்வொரு யூனிட் மணலுக்கும் 5 சதவிகித ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசுக்கு பொதுப்பணித்துறை செலுத்தவேண்டும். ஆனால், நாளொன்றுக்கு 2 லட்சம் டன் மணல் அள்ளப்படுகிற தென்றால் பதிவேடுகளில் வெறும் 20 ஆயிரம் டன்கள்கூட கணக்குக் காட்டுவதில்லை. மேலும், போலி ரசீதுகள் மூலம் மணல் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி.யில் கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில்தான் அமலாக்கத்துறை ரெய்டே நடந்தது” என்கின்றனர்..அதேநேரம், மணல் அள்ளும் காலம் முடிந்தபிறகும் மணல் குவாரிகள் கல்லா கட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்துப் பேசும் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் காளிதாசன்,“கொள்ளிடம் ஆற்றில் உள்ள வடரங்கம் அரசு மணல் குவாரியில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதியுடன் மணல் அள்ளுவதற்கான அனுமதிக் காலம் முடிந்துவிட்டது. ஆனாலும், அந்தக் குவாரி தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது.இதுதொடர்பாக, சீர்காழி தாசில்தாரிடம் இருமுறை மனு கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை. அதன்பிறகு சாலைமறியல் போராட்டம் அறிவித்த பின்னர் தாசில்தார் அலுவலகத்தில் சமாதானக் கூட்டத்துக்கு அழைத்தனர். அங்கே சென்றபோது,‘ஏற்கெனவே எடுத்து ‘யார்டில்’ கொட்டி சேமித்து வைத்திருக்கும் மணலைத்தான் விற்கிறோம்’ என்றனர். உடனே, ஆற்றில் மணல் அள்ளும் ஜேசிபி இயந்திரங்களை மறித்து வி.ஏ.ஓ. மூலம் பார்வையிட வைத்து மணல் அள்ளுவதை நிரூபித்தோம்..ஆனால், சீர்காழி தாசில்தார் தனது அறைக்கதவை உட்புறம் பூட்டிக்கொண்டு உள்ளே கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் மற்றும் மணல் மாஃபியாக்களுடன் இரண்டு மணிநேரம் ஆலோசனை செய்கிறார். அப்படியென்ன பேசியிருப்பார்கள்? ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக சுமார் 30 அடி ஆழம் வரை மணல் எடுத்துவிட்டார்கள். மீண்டும் ஆற்றில் தண்ணீர் வந்து மணல் எடுத்த இடம் மீண்டும் மணலால் நிரம்பிவிட, அதையும் தோண்டி மணல் எடுக்கின்றனர். மொத்த அதிகாரிகளுக்கும் முறைகேட்டில் தொடர்பிருக்கிறது” என்றார்.இதையடுத்து, நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் பிரபு, “விதிமீறி மணல் குவாரிகள் இயங்கிவரும் புகார்கள் ஒருபுறம் இருந்தாலும் கொள்ளிடம் ஆற்றின் மறுகரையான கடலூர் மாவட்ட எல்லையில் ஒரு பெரிய மணல் திட்டு உள்ளது. அந்த மணலையும் அள்ளி மயிலாடுதுறை மாவட்ட பகுதியில் கொட்டி அதையும் திருட்டுத்தனமாக விற்பனை செய்கிறார்கள். இதற்காக அந்த மணல் திட்டில் சாகுபடி செய்துவரும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ஒரு லட்சம் மற்றும் நலம்புத்தூர் கோவிலுக்கு 5 லட்சம் என பணத்தை அள்ளி இறைத்துள்ளனர்..மாவட்டத்துக்குள் என பர்மிட் போட்டுக் கொண்டு சென்னைக்கு ஏராளமான மணல் லாரிகள் செல்கின்றன. கடலூர் மாவட்ட எல்லையில் மணல் எடுத்தது தொடர்பாக அந்த மாவட்ட உயர் அதிகாரி ஒருவர் குவாரிக்கு சீல் வைத்தார். அதனை சரிக்கட்டி புதுக்கோட்டை நபர் மீண்டும் குவாரியை இயக்கத் தொடங்கி விட்டார். இந்த வடரங்கம் குவாரியானது புதுக்கோட்டை மணல் அதிபரின் உறவினர் ஒருவரின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது. தற்போது அவரின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தியுள்ளனர்” என்றார்.பொதுப்பணித்துறை மீதான புகார்களுக்கு விளக்கம் கேட்டு கனிமவளம் சார்ந்த உதவிப் பொறியாளர், எஸ்.டி.ஓ., உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர், திருச்சி முதன்மைப் பொறியாளர் என அனைவரின் எண்ணுக்கும் தொடர்பு கொண்டோம். எந்தப் பதிலும் வரவில்லை.ஒரே ஒரு உதவிப் பொறியாளர் மட்டும், “இது பொய்யான புகார். நாங்கள் ஏற்கெனவே எடுத்து யார்டில் சேமித்து வைத்திருக்கும் மணலைத்தான் விற்பனை செய்கிறோம்” என்றவர், பெயரைக் கூறாமலேயே இணைப்பை துண்டித்தார்.மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதியிடம் பேசியபோது, “இதுதொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு நடவடிக்கை மேற்கொள்கிறேன்” என்றார்.இதற்கும் அமலாக்கத்துறைதான் வரவேண்டுமா?