`பாலியல் சீண்டல்களோ மாணவர்களை மடைமாற்றும் சம்பவங்களோ நடந்தால் கண்டுகொள்ளாதீர்கள்' என்பது திருச்சி போலீஸின் புது சட்டம்போல. வணிக வளாகம் ஒன்றில் நடந்த பாலியல் சீண்டல்களும் அதனைத் தடுக்க கணினி மைய நிறுவனர் ஒருவர் மேற்கொண்ட முயற்சிகளும்தான், திருச்சியின் திகில் டாபிக்.திருச்சி நகரின் மையப் பகுதியில் பிரபல ஜவுளிக்கடைகளுக்கு மத்தியில் இயங்கி வருகிறது, அந்த வணிக வளாகம். இங்கு கம்ப்யூட்டர் மற்றும் ரோபோடிக்ஸ் பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார், டோனி ரீகன். இங்கு நிறைய மாணவர்கள் வந்துபோவதால் சி.சி.டி.வி கேமராக்களை பொருத்தியுள்ளார். அதில், பதிவான சில காட்சிகளால் அதிர்ச்சியடைந்தவர், காவல்துறையின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார். இதன்பிறகு நடந்தவை அனைத்தும் அதிர்ச்சி ரகம்.``என்ன நடந்தது?'' என டோனி ரீகனிடமே கேட்டோம். “என்னுடைய கம்ப்யூட்டர் பயிற்சி மையத்துக்கு ஏறும்வழியில் தரைதளத்தில் மாடிப்படியின்கீழ், ஜான் பிரிட்டோ என்பவர், ஜெராக்ஸ் மற்றும் இன்ஸ்யூரன்ஸ் முகவர் நிலையம் நடத்திவருகிறார். தன்னுடைய கடையில் பணிபுரியும் பெண்ணிடம் பாலியல்ரீதியாக அவர் எல்லைமீறி நடந்து கொள்கிறார். இது, எங்களின் சி.சி.டி.வி.யில் தற்செயலாகப் பதிவாகியுள்ளது.இதனை அப்படியே பதிவு செய்து, திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். உடனடியாக மூன்று உதவி ஆய்வாளர்கள் நேரில் வந்து பிரிட்டோவை காவல்நிலையத்துக்கு அழைத்துப்போய் விசாரித்துவிட்டு, எச்சரித்து அனுப்பியுள்ளனர்.இது நடந்து இரண்டாவது நாளே, மாணவர்கள் வரும்வழியில் சேர் போட்டு உட்கார்ந்து கொண்டு, 'இவன் பொண்டாட்டியோடு இருக்கும் ரூமில் நாம கேமரா வைப்போம்' என்று ஆரம்பித்து கெட்ட கெட்ட வார்த்தைகளில் அவர் என்னைத் திட்டுவது கேமராவில் பதிவாகி இருந்தது..மீண்டும் ஸ்டேஷனில் புகார் கொடுத்தேன். அப்போது இன்ஸ்பெக்டர் சிவக்குமார், ஜான் பிரிட்டோவை அழைத்து 'உன் யோக்கியதையை வீடியோவில் பார்த்தேன். இனிமேலும் இதுமாதிரி பேசி தகராறு செய்தால் ரிமாண்ட் பண்ணிடுவேன்'’ என்று எச்சரித்து அனுப்பினார்.பிறகு என்னிடம், 'நீங்கள் கேமராவை வேறு பக்கம் வையுங்கள்' என்றார். 'எங்கள் மாடிக்கு வரும் பாதையே அதுதான் சார்' என்று சொல்லிவிட்டு வந்தேன். இருபது நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவர் பிரச்னை செய்யவே, அவசர எண்ணான 100க்கு போன் செய்தேன்.போலீஸார் வந்து விசாரித்துவிட்டு காம்ப்ளக்ஸ் உரிமையாளர்களிடம் சென்று, 'இந்தப் பிரச்னையைப் பேசி முடியுங்கள்' என்று சொல்லிவிட்டு, 'அந்தப் பெண் ஏதாவது செய்து கொண்டால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு' என என்னையே எச்சரித்துவிட்டுச் சென்றனர்" என்றார் நொந்துபோய்..இதையடுத்து, அவர் காட்டிய வீடியோக்களை பார்த்தோம். அதில் ஜான் பிரிட்டோ அந்தப் பெண்ணை பாலியல்ரீதியாக சீண்டுவது தெளிவாகப் பதிவாகி இருந்தது. தெருவில் இருந்து பார்த்தாலே தெரியும்வகையில் இந்த பாலியல் அத்துமீறல் நடந்தும் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சம்பந்தப்பட்ட பெண் அவரின் சீண்டல்களை தவிர்க்கும்விதமாக ஒதுங்கிப்போவது, ஒற்றைவிரலை நீட்டி மிரட்டுவது என தன்னால் முடிந்தவரை போராடுவதும் அப்பட்டமாகத் தெரிந்தது.இதற்குத் தீர்வு காணும்நோக்கில், டோனியை அழைத்துக்கொண்டு திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினியை சந்தித்தோம். பிரச்னையை விளக்கி வீடியோக்களை காட்டியதும், 'நான் டி.சி.யை விசாரிக்கச் சொல்கிறேன்' என்றுகூறிவிட்டு, காவல்துறை துணை ஆணையர் செல்வகுமாரிடம் போனில் பேசி அனுப்பி வைத்தார்.துணை ஆணையர் செல்வகுமார், அந்த வீடியோக்களை பார்க்கவோ, அந்த விஷயம் குறித்துத் தெரிந்து கொள்ளவோ ஆர்வம் காட்டவில்லை. 'நீங்கள் போய் ஏ.சியை பாருங்கள்' என்று கன்டோன்மென்ட் ஏ.சி கென்னடியிடம் அனுப்பி வைத்தார்.கென்னடியை சந்திக்க நாம் சென்றபோது அவர், ஏற்கெனவே கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் இருந்து இந்த பிரச்னை குறித்த பைலை கொண்டு வரச்சொல்லி தயாராக வைத்திருந்தார். .“அதான் விசாரிச்சிருக்காங்களே...அப்புறம் என்ன பிரச்னை?" என்றவர், ``நீங்க ஏன் அங்க கேமரா வச்சிருக்கீங்க? அந்தப் பொண்ணுதானே புகார் கொடுக்கணும்? அந்தப் பொண்ணே விரும்பி இப்படிச் செய்தா நாம தலையிடக் கூடாதுன்னு சுப்ரீம் கோர்ட் சொல்லி இருக்குதே" என்றார்.பிறகு, ``இன்ஸ்பெக்டரை அனுப்பி என்னன்னு பார்க்க சொல்றேன்'' என்று சொல்லி அனுப்பிவைத்தார். தொடக்கத்தில் இன்ஸ்பெக்டர் அளவில் நடந்த விசாரணை கமிஷனர்வரை சென்றும் இறுதியில் இன்ஸ்பெக்டர் அளவிலேயே வந்துநின்றதுதான் கொடுமை.சரி.. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஜான் பிரிட்டோ என்ன சொல்கிறார்? அவரிடமே கேட்டோம். "என் இடத்தில் நான் எப்படியிருந்தால் அவருக்கு என்ன? இந்த இடத்தில் கேமரா வைத்தது அவரின் குற்றம். அந்தப் பெண் என் மகளைப் போன்றவர். ஆன்லைனில் எப்படி இன்ஸ்யூரன்ஸ் போடுவது என்று அவ்வப்போது சொல்லிக் கொடுப்பேன். அப்போது அங்கே இங்கே தொட்டிருப்பேன், அவ்வளவுதான்'' என கேஷுவலாக கூறியவர்,``டோனிதான் புகார் கொடுக்கிறேன் என்று சொல்லி இந்த வீடியோவை எல்லா இடத்திலும் காட்டிக்கொண்டு இருக்கிறார். அவமானத்தில் அந்தப் பெண் சூசைட் செய்துகொண்டால், இவர்தான் மாட்டிக்கொள்வார்" என்றார் இயல்பாக.இப்படியும் ஒரு மனிதர்.. இப்படியும் ஒரு போலீஸ்! - ஷானு